please help me

hi friends.enk jan 3last period.inum period varala 40 days la test pani pathean.negative dr keta pona enk registrone 5mg tablet koduthanga.but inum period varala ena seiyalam

Ennada name kilora than sister

Ama sister walk panren.. Ella test cleara nalla iruku nu solranga doctor.. Ana pcod iruku solranga.. Ennala conceive ava mudiyuma.. Allopathy medicine romba heat akuthu sister.. Vera solution iruka sister.. Irundhu pls share me sister

//Ana pcod iruku solranga.// மருத்துவர் சொற்படி சிகிச்சையைத் தொடருங்கள். //Ennala conceive ava mudiyuma.// முடியும். இங்கு இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசியவர்கள் பிறகு குழந்தை கிடைத்ததாகச் சொல்லியிருக்கிறார்களே! கருத்தரிக்க‌ முடியும். சிகிச்சை எடுப்பது நல்லது.

//Allopathy medicine romba heat akuthu// எனக்கு இதைப் பற்றித் தெரியாது. //Vera solution// ஒரு நல்ல‌ மகப்பேறு சிகிச்சை தொடர்பான‌ மருத்துவரைக் கலந்தாலோசிக்கலாமே! //pcod iruku solranga.// யார் சொன்னது? சொன்னவர்கள் என்ன‌ சிகிச்சை எடுக்குமாறு பரிந்துரைத்தார்கள்?

‍- இமா க்றிஸ்

Ama sister,. Follicular study eduthanga karummuttai growth aguthu Ana vedika matten kuthu.. Scan eduthu parthathula neerkatti kuttiya iruku NJ solranga.. Hormone ellam normala iruken.. Pls solution sollunga..

Imma amma enaku today naal vanthuduchi.. Naal varum muun oru Mani neram munnadi karupu karupa thittugal varukirathu sila maathangala..ethanal.. Enaal conceive aga mudiyuma.. En kanavarku sperm count test ellam nalla iruku amma .. Test avarku clear .. Coming month avar veli oor poraru . vara one year akum.. Romba thanga mudiyathu vethanaiya irukathu amma.neerkatti ku past month scan eduthutanga.. Reduce agi iruku nu doctor sonnanga.. Enaku marriage aki one and half year achi..ellorum ketka arampichitanga..amma nose enaku munnadi ellam dark patches irukum.. Ippo athu nalla reduce akuthu.. Kalarchikaai saptuduvathala. Hair nalla growth iruku.. First romba kottum.. Amma pls help and solution sollunga amma..late marriage amma. Enaku father illa.. Arrange marriage en husband enna understand panraru. But amma Na ippo ennama seiya..

//karupu karupa// அது இருப்பதுதான். யோசிக்காதீங்க‌. முன்பும் இருந்திருக்கும். நீங்கள் கவனித்திருக்க‌ மாட்டீர்கள். இப்போது நுணுக்கமாக‌ மாற்றங்களை அவதானிப்பதால் கவனத்திற்கு வருகிறது.

//Enaal conceive aga mudiyuma.// நம்பிக்கைதான் வாழ்க்கை. முடியும் என்று நம்பவேண்டும். டாக்டர் முடியாது என்று சொன்னாங்களா? இல்லையல்லவா? பிறகு ஏன் யோசனை?

//vara one year akum.// உங்களுக்கு நிம்மதியாக‌ பிரச்சினையை சரிசெய்யக் காலம் கிடைக்கிறது என்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

//thanga mudiyathu vethanaiya irukathu amma.// தாங்க‌ முடியாது வேதனையா இருக்காது!!! (ம்ஹும்! நீங்க‌ தமிழ்ல‌ தட்டுறது தான் நல்லது. நான் தப்பா படிச்சு வைப்பேன்.) தாங்க‌ முடியாத‌ வேதனை! இதைப் பற்றி உங்களைப் பார்க்கிற‌ டாக்டரிடம் சொன்னீர்களா? அவர் ஒன்றும் சொல்லவில்லையா?

//marriage aki one and half year achi.// எத்தனை காலம் கணவருடன் இருந்தீர்கள் என்பது தான் கணக்கே தவிர‌ மணமாகி எத்தனை வருடம் ஆகிற்று என்பதில் எதுவும் இல்லை. //ellorum ketka arampichitanga..// உங்கள் சந்தோஷம் உங்கள் கையில் தான் இருக்கிறது. மற்றவர்களை விடுங்கள்.

//amma nose enaku munnadi ellam dark patches irukum.. Ippo athu nalla reduce akuthu.// இதற்கும் கர்ப்பமாவதற்கும் எந்தத் தொடர்பும் இராது. //Kalarchikaai saptuduvathala.// தமிழ்ல‌ தட்ட‌ முடியாதா? தமிங்கிலம் படிக்கிறது ரொம்ப‌ சிரமம் கண்ணா. இதை எப்படிப் படிக்கட்டும்! 'சாப்டுடுவதால‌' என்றா 'சாப்டுடுவதாலா' என்றா? கேள்விக்குறி இல்லை; முற்றுப் புள்ளி வைச்சிருக்கீங்க‌. ஆனால் வசனம் முடியவில்லை. எனக்குத் தமிங்கிலம் இடிபாடு. ;) இனிமேல் தமிழில் கேள்வியை வைக்கப் பாருங்கள். //Hair nalla growth iruku.. First romba kottum.// ம். எல்லாப் பிரசினையையும் ஒன்றாக‌ சொல்றீங்க‌, பிரச்சினை சரியானதையும் சொல்றீங்க‌. எனக்கு குழப்பமா இருக்கு. //Amma pls help and solution sollunga// எதுக்கு கேட்கிறீங்க‌? முடி! கருப்பு அடையாளம்!

சுருக்கமாக‌ மீண்டும் கேள்வியை வைக்க‌ முடியுமா? கேள்விக்கு அவசியமான‌ விடயங்களை 'மட்டும்' குறிப்பிடுங்கள். பதில் சொல்வதற்கு இலகுவாக‌ இருக்கும்.

//late marriage amma.// இப்பிடிச் சொன்னால் எனக்குப் புரியாது கண்ணா. எத்தனை வயதில் என்று சொல்ல‌ வேண்டும்; இப்போ என்ன‌ வயது என்று சொல்ல‌ வேண்டும். (40! 30! 35!) ஊகங்களை வைத்துக் கொண்டு பதில் சொல்ல‌ விரும்பவில்லை நான்.

//Enaku father illa.// ம். //Arrange marriage en husband enna understand panraru.// சரி. //But amma Na ippo ennama seiya..// நீங்க‌ உங்க‌ கணவர் பயணம் போவதைப் பற்றி & அதற்கு முன் கர்ப்பம் ஆக‌ முடியாததைப் பற்றி ரொம்ப‌ ஸ்ட்ரெஸ்ட் ஆக‌ இருக்கிறீங்க‌ என்று நல்லாவே தெரியுது. அமைதியாக‌ இருங்க‌. முடியாட்டா, கடவுள் நம்பிக்கை இருந்தா, கடவுள்ட்ட‌ உங்க‌ பாரத்தை இறக்கி வைங்க‌. தியானம் செய்யலாம். அதே சமயம் சிகிச்சையையும் தொடரலாம்.

என்னைக் கேட்டால்... நீங்கள் ஒன்றில் உங்கள் கணவரை உங்களோடு வைத்துக் கொள்ள‌ வேண்டும் அல்லது நீங்கள் அவருடன் போய் வாழ‌ வேண்டும் என்பேன். லேட் மாரேஜ் என்கிறீங்க‌. எல்லாவற்றுக்கும், 'இயலாது,' என்றுவிட‌ முடியாது. ஒன்று வேண்டும் என்றால் இன்னொன்றை இழந்துதான் ஆக‌ வேண்டும். உங்கள் கணவரோடு பேசி முடிவு எடுங்கள்.

~~~~~

இங்கு தமிழில் தட்டும் வசதி இருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

don't feel sis, en hus um foreign la tan work pantranga, enakum baby illa, 5 yr ayiduchu, but rendu perkum entha problem um illa , apd itunthum baby innum nikkala, neenga kavala padathinga, mind a relax a vachukonha athuthan important, try pannite irunga success ahum , ipo date kammiya iruku nu solinga, so intha month iui try panni parunga success ahalam, pray pannunga, bye.

all is wealth

அம்மா எனக்கு வயது 32. டாக்டர் கருமுட்டை வளர்ச்சிகான follicular study திரும்பவும் எடுக்கசொல்கிறார். ஒவ்வொரு தடவை scan எடுக்கும் பொழுது வயறு நிரம்ப தண்ணீர் குடித்து குடித்து வயறு வலிக்கிறது. இப்ப எடுப்பது மூன்றாவது முறை. முதல் தடவை கருமுட்டை வளர்ச்சி அடைந்து வெடிக்க வில்லை.. 2. கருமுட்டை வளர்ச்சி அடையவில்லை என்று சொன்னார்கள்.. நீர்கட்டிகான மாத்திரை எடுக்க சொன்னார்கள். Metformin..தீர்வு இல்லை.எட்டு மாதம் எடுத்தேன்.. இந்த இரண்டு மாதமாக என் மாமியார் கலர்ச்சிகாய் மிளகுடன் எடுக்க சொன்னார்கள். இப்பொழுது இதை எடுக்கிறேன்.எதனால் எனக்கு தீர்வு கிடைக்கும் அம்மா.

Romba thanks sister.. Avar mattum than anga kilampuraru sister..vitla irukavanga romba hurt pannuvanga sister. Athu than romba kastama iruku.

//ஒவ்வொரு தடவை scan எடுக்கும் பொழுது வயறு நிரம்ப தண்ணீர் குடித்து குடித்து வயறு வலிக்கிறது.// என்ன‌ கண்ணா இது! டாக்டர்கள் என்ன‌ உங்களுக்குச் சிரமம் கொடுக்க‌ விரும்பியா செய்கிறார்கள்? அது சிரமம்தான். இல்லையெனவில்லை. தண்ணீர் குடிக்கிறது வலி என்றால் பிரசவம் எப்படிப் பொறுப்பீர்கள்! வலிக்காதா? காரியம் ஆக‌ வேண்டுமென்றால் இப்படிச் சின்னச் சின்ன‌ விஷயங்களையெல்லாம் பெரிதுபடுத்தினால் எப்படி!

//இப்ப எடுப்பது மூன்றாவது முறை.// மூன்று முறை தண்ணீர் குடிப்பது சிரமம் என்று நினைப்பீர்களானால்... வாழ்க்கையில் கடக்க‌ இன்னும் ஆயிரம் சிரமங்கள் காத்திருக்கின்றன‌ கண்ணா.

//எதனால் எனக்கு தீர்வு கிடைக்கும் அம்மா.// இப்போதும் நான் கேட்ட‌ கேள்விகளுக்கான‌ பதில்கள் உங்களிடமிருந்து கிடைக்கவில்லை. பதில் வேணும் என்று நினைக்கிறீங்க‌. விபரங்களை மட்டும் கொடுக்கத் தயங்குறீங்க‌. நான் என்ன‌ செய்யட்டும்!!

தமிழில் தட்டியதற்காக‌ நன்றி. முடிகிறது என்றாலும் தமிங்கிலத்தை விட‌ மாட்டீர்கள் போலிருக்கிறது. ;)

அன்புடன்

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்