please help me

hi friends.enk jan 3last period.inum period varala 40 days la test pani pathean.negative dr keta pona enk registrone 5mg tablet koduthanga.but inum period varala ena seiyalam

அம்மா ஒவ்வொரு தடவை ஒரு (follicular study) கருமுட்டை வளர்ச்சிக்கு ஆறு அல்லது ஏழு தடவை scan எடுத்தேன் அம்மா.. அப்படி பார்த்தால் 15 scan அம்மா இதுக்கு மட்டும்.. அம்மா எனக்கு அலோபதி மருத்துவம் உடலில் அதிகமாக உஷ்ணம் தருகின்றது..மன்னித்து விடுங்கள் அம்மா.. சில வார்த்தைகள் தமிழிலில் சொல்ல தெரியவில்லை..தயங்கவில்லை அம்மா..

கலர்ச்சிகாய் மிளகுடன் எடுப்பதால் தீர்வு கிடைக்குமா.. என் எடை 60.. உயரம் 156.. கர்பபையில் அடைப்பு இருக்குமா. இப்படி பல கேள்வி மனதில் அலைபாய்கிறது அம்மா.. நீர்கட்டிகான தீர்வு இருக்குமா அம்மா.. மாத்திரை தான் தீர்வா. அம்மா நான் என்ன செய்வது...

//15 scan// அதற்கென்ன‌! உங்களுக்குத்தான் குழந்தை வேண்டும், மருத்துவருக்கோ எனக்கோ அல்ல‌.

//அலோபதி// எந்த‌ மருத்துவமானாலும் தொடர்ந்தாக‌ வேண்டும். இடையில் நிறுத்தி இன்னொன்றுக்குத் தாவி விட்டுத், 'தீர்வு கிடைக்கவில்லை,' என‌ நினைப்பது தவறு.

//அதிகமாக உஷ்ணம் தருகின்றது.// எல்லாச் சிகிச்சைகளிலும் சில‌ சகித்துக் கொள்ள‌ வேண்டிய‌ விடயங்கள் இருக்கவே செய்யும். எம் காரியம் ஆக‌ வேண்டுமென்றால் பொறுக்க முடியாதா! ஸ்கான் பிரச்சினை, அலோபதி பிரச்சினை, மாத்திரை பிரச்சினை! குழந்தை வேண்டும் என்பது அவையெல்லாவற்றையும் விடப் பெரிய‌ பிரச்சினை அல்லவா!!

//கலர்ச்சிகாய் மிளகுடன் எடுப்பதால் தீர்வு கிடைக்குமா.// மருத்துவர்கள் கொடுக்கும் சிகிச்சையிலேயே உங்களுக்கு சிரமங்கள் வருகின்றன‌. இதனால் வராது என்று நிச்சயம் தெரியுமா?

//கர்பபையில் அடைப்பு இருக்குமா.// ஸ்கான் செய்திருக்கிறார்கள். அவர்களிடம் கேட்க‌ வேண்டிய‌ கேள்வி இது. மற்றவர்களால் பதில் சொல்ல‌ முடியாது. //நீர்கட்டிகான தீர்வு// இங்கு அதற்குச் சிகிச்சை எடுத்த‌ தோழிகள் குழந்தை கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்களே! இருப்பதால்தானே! நீர்க்கட்டி இருக்கும் போதே கர்ப்பமாவோரும் இருக்கிறார்கள்.

எந்தச் சிகிச்சையும் ஒருவர் உடலில் வேலை செய்வது போல‌ இன்னொருவரது உடலில் வேலை செய்வது இல்லை. எம் ஒவ்வொருவர் உடலும் இயங்கும் முறை வேறு.

//மாத்திரை தான் தீர்வா// ;) அப்படி இருந்தால் உங்களால் அதையும் எடுக்க‌ முடியாது என்கிறீர்கள்!

//நான் என்ன செய்வது// 32 வயது உங்களுக்கு. வாழ்க்கையில் இந்த‌ வயதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க‌ வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். கர்ப்பமாவதற்கு, பணம் மருந்து மாத்திரைகளை விட‌ ஒரு ஆண் முக்கியம். கணவரை அருகே வைத்துக் கொள்ளுங்கள் அல்லது நீங்கள் அவருடன் போய் வாழுங்கள். அதன் பிறகு சிகிச்சை செய்வதா வேண்டாமா என்பதை யோசிக்கலாம். வயது போய்க்கொண்டே இருக்கும். பிடித்து வைக்க‌ முடியாது.

‍- இமா க்றிஸ்

நன்றி அம்மா. Scan எடுக்க நான்காம் நாள் வர சொல்லி இருக்கிறார்கள் . கருமுட்டை வளர்ச்சி நன்றாக வளர மாத்திரையுடன் என்ன உணவு எடுத்துக்க வேண்டும். ஆறு மாதத்தில் என்னையும் கூட்டிட்டு போக பார்க்கிறேன் என்று சொல்கிறார்.. அது வரை என்னுடைய பிரச்சனையை சரி செய்ய நேரம் இருக்கிறது.. அம்மா மனம் இப்பொழுது தெளிவாகி இருக்கு..

//என்ன உணவு// இதைப் பற்றி சரியாகச் சொல்லத் தெரியவில்லை. வளர்ச்சியுடன் தொடர்பானது புரதம். மீன் சாப்பிடுவீர்கள் என்றால் சாப்பிடலாம். இங்கு சகோதரிகள் அதிகம் குறிப்பிட்டுள்ள‌ உணவு, முளை கட்டிய‌ பயறு. நீங்கள் அசைவம் சாப்பிடாதவர் என்றால் நான்கைந்து வகைப் பயறுகளை ஒன்றாகக் கலந்து சமைத்துச் சாப்பிடுங்கள். சுண்டலோ அடை அல்லது தோசை போலவோ எப்படி என்றாலும் சரிதான்.

//ஆறு மாதத்தில் என்னையும் கூட்டிட்டு போக பார்க்கிறேன் என்று சொல்கிறார்.// மிக்க‌ நல்ல‌ முடிவு. 'பார்க்க' வேண்டாம், கட்டாயம் கூட்டிப் போக‌ வேண்டும்.

//பிரச்சனையை சரி செய்ய நேரம் இருக்கிறது.// ஆமாம். நல்ல‌ பொண்ணு. :‍) எப்பவும் சந்தோஷமா இருக்க‌ வேண்டும். யோசனைகளை ஓரளவுக்கு மேல் வளர‌ விட‌ வேண்டாம். மனம் சந்தோஷமாக‌ இருந்தால் உடல் இயக்கங்கள் நன்றாக‌ இருக்கும்.

‍- இமா க்றிஸ்

அம்மா டாக்டர் கருமுட்டை வளர்ச்சி இப்பொழுது எடுக்க வேண்டாம் என்று மாத்திரை கொடுத்து இருக்கிறார்கள். Ovuloc. LD, மற்றும் metital. கொடுத்து இருக்கிறார்கள். அம்மா இதன் கூட கலர்ச்சிகாய் மிளகுடன் எடுத்துக்கலாமா. அம்மா தயவு செய்து பதில் தாருங்கள் அம்மா.

அதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை கிலோரா. விடயம் தெரிந்த‌ சகோதரிகள் பதில் சொல்வார்கள்.

‍- இமா க்றிஸ்

Sis kalarchikai sapdalam. Nanum 48 days sapten. Treatmentkum ithukum prblm ila. Nenga tharalama sapdalam. Aana mrng empty stomachla sapdunga.

Saranya Satheesh

பலன் கிடைத்ததா சகோதரி.. கலர்ச்சிகாய் சாப்பிட்டதால் ..இன்று முதல் மாத்திரையும் எடுக்கிறேன்..

Enaku neerkatti ilama. Chocolate cyst numsonaga. Na kalarchikai sapten. Apdye than iruku.

Saranya Satheesh

மேலும் சில பதிவுகள்