வெண்டைக்காய் ஸ்டஃப்டு ஃப்ரை

தேதி: March 5, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்டைக்காய் - 15,
துவரம் பருப்பு - 1/4 கப்,
கடலை பருப்பு - 1/4 கப்,
தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 5,
கார்ன் ஃப்ளார் மாவு - 2 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க.


 

வெண்டைக்காயை காம்பு, நுனி நீக்கி,மேலிருந்து பாதி வரை நீளவாக்கில் வெட்டி, பிறகு, வெண்டைக்காயை திருப்பி எதிர் திசையில் மீதி பாதியை நீளவாக்கில் வெட்டவும். (இரண்டாக பிளந்து விடக்கூடாது).
துவரம் பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் 1/2 மணி நேரம் ஊற வைத்து, மிளகாய், தேங்காய், உப்பு சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.
அரைத்த மசாலாவை வெட்டிய வெண்டைக்காய்க்குள் பொதிந்து (ஸ்ட்ஃப்), வெண்டைக்காயின் மேலும் லேசாக மசாலா இருப்பது போல் இறுக பிடித்து வைக்கவும்.
கார்ன் ஃப்ளார் மாவில் புரட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்