திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடுகிறோம் .இடம் வந்தவுடன் ஜாதகம் ,மாப்பிள்ளை வேலை ,சம்பளம், மாப்பிள்ளை அழகு பற்றிய விவரங்களை கவனிக்கிறோம் .பிடித்தவுடன் திருமணம் நடக்கும் .நாம் கவனித்து விவரம் சேர்த்த மாப்பிள்ளை என்னவோ நம்மை நன்றாக தான் கவனிப்பார் .ஆனால் மாமியார் என்ற ஒருவர் திருமணத்திற்கு முன்பு நம் கவனத்தை கவரதவர் ,திருமணத்திற்கு பிறகு நம் மனதில் பாரமாக இருப்பவர் .எனவே இனிமேல் உங்கள் வீட்டில், தெரிந்தவர்கள் மாப்பிள்ளை தேடினால் ,நல்ல இடம் அமைந்தால் மாப்பிள்ளை பற்றிய விவரத்தோடு அவர் தாய் ,தகப்பன் விவரத்தை அறிந்தால் நல்லது .ஏனெனில் திருமணம் ஆன பிறகு மாமியார் தேள் என தெரிந்தால் பெண் வாழ்வு கஷ்டம் .வரும் முன் காப்போம்
சுவாதி
அனுபவத்தில் சொல்கிறீர்களா? ஆனால் நீங்கள் சொல்வது மிகவும் சரியானது தான்.
இப்போது அப்படி தான் நடந்து கொண்டு இருக்கிறது.
நானும் என் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு மாப்பிள்ளை தேடும் போது இதையே தான் சொன்னேன்..
என் மாமியார் தன்னுடைய மருமகன்களை கூட கட்டுப்பாட்டில் வைத்து உள்ளார்..
ஆனால் என் உறவினர்கள் வீட்டிற்கு என்னை செல்ல விடுவதே இல்லை.
இதை நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.
அவர்கள் மகள்களை மட்டும் எல்லா இடங்களுக்கும் கூட்டிச் செல்கிறார்..
indusha
கவலை வேண்டாம் தோழியே...யவரும் நிறந்தரமில்லை....உங்களுக்கும் காலம் வரும்
ஆர்த்தி
நன்றி தோழி. எத்தனை காலம் அவர்கள் அதிகாரம் நிலைக்க போகிறது என்று தான் பொறுமையாக இருக்கிறேன்..
indhusha
Thozhi ... புதிய youtube channel துவங்கியுள்ளேன் என்ற தலைப்பை பாருங்கள்
ஆர்த்தி
சூப்பர் தோழி.. கண்டிப்பாக பார்க்கிறேன்.. உங்கள் சேனல் வெற்றிகரமாக அமைய என் வாழ்த்துக்கள்..
indhusha
Channel senru pathingala...
இந்துஷா
அனுபவம் தான் தோழி .எங்கள் உறவினர் பெண்ணிற்கு தெரிந்த இடத்தில் வரன் வந்தது பையன் நல்ல வேலை நல்ல சம்பளம் குணமும் அப்படியே .ஆனால் அந்த பையனின் தாய் கொஞ்சம் வாய் சொல்வர் அதனால் தட்டி கழித்தார் பெண் வீட்டினர் .இப்போது அந்த பெண் வேறு இடத்தில் திருமணம் ஆயிற்று மாமியார் மிகவும் நல்லவர். மாப்பிள்ளை ஒப்பிட்டு பார்த்தால் முன்பு பார்த்த பையனை விட சம்பளத்தில் குறைவு தான் ஆனால் வாழ்க்கையில் நிறைவு.முன்பு குறிப்பிட்ட மாமியாரின் மருமகள் வாழ்க்கை
சுவாதி
ஆனால் யாருமே மாமியார் நல்லவர்களா என்று விசாரித்து பெண் கொடுப்பது இல்லை.
என் தோழிகள் மிகவும் கஷ்டப்படுகிறாள்..
தன் மகனுக்கு குறை இருப்பது அறிந்தும் என் தோழியை ஒவ்வொரு மருத்துவமனைக்கா கூட்டிச் செல்கிறார்.
ஆனால் திருமணம் ஆகி இரண்டு வருடமே ஆகின்றன.. குழந்தை இல்லை என்று குத்திக் காட்டுகிறார்..
அவளுக்கு எந்த குறையும் இல்லை.. அமைதியான பெண்..
கடவுள் தான் அவள் கஷ்டம் தீர்க்க வேண்டும்..