Menopause 25 years

எனக்கு 25 வயது இரண்டாவது குழந்தை பிறந்து 9மாதங்கள் ஆகிறது . இந்த மாதம் பீரியட்ஸ் 6 நாட்கள் ஆகிறது இன்னும் வரவில்லை ஆனால் கர்ப்பம் இல்லை மருத்துவர் ஹார்மோன் டெஸ்ட் செய்து பார்க்கலாம் சொன்னாங்க . ரிப்போர்ட்டில் menopause ரெடி ஆகுதுனு சொல்றாங்க ரொம்ப பயம்மா இருக்கிறது இப்படி யெல்லாம் நடக்குமா இதை சரிசெய்ய வலி உண்டா இமா அம்மா ,என் தோழிகள் உதவுங்கள்

என் ப்ராப்ளம் க்கு இயற்கை மருத்துவம் உண்டா தோழிகளே

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

//கர்ப்பம் இல்லை// அந்த‌ வரையில் சந்தோஷம்தானே! //ரிப்போர்ட்டில் menopause ரெடி ஆகுதுனு சொல்றாங்க// டாக்டர் சொன்னாங்களா, நீங்களா படிச்சு தெரிஞ்சுகொண்டீர்களா?

//ரொம்ப பயம்மா இருக்கிறது// என்ன‌ பயம்? //இப்படி யெல்லாம் நடக்குமா// எப்படி!! //இதை சரிசெய்ய// எதை!! :‍) கெஸ் பண்ணிப் பதில் சொல்ல‌ முடியாது. கேள்வி / சந்தேகம் என்ன‌ என்பதைப் போட்டு உடைத்தால் பதில் சொல்வது சுலபம்.

'ரெடி ஆகுது' என்றால் அதன் கருத்து இந்த‌ மாதத்திலிருந்து பிரியட்ஸ் நிற்கப் போகிறது என்பதல்ல‌. (ப‌தின்மூன்று வயதில் பெரியவளாகும் பெண்ணுக்கு எட்டு வயசிலிருந்தே உடல் 'ரெடி ஆகும்.') இப்படியே ஐம்பது வயது வரை, 'ரெடி ஆகுது' என்று காட்டிக் கொண்டிருக்க‌, பீரியட்ஸும் வந்துகொண்டே இருக்கலாம். யோசிக்காதீங்க‌. நீங்கள் எச்சரிக்கையாக‌ இல்லாவிட்டால் எப்போ வேண்டுமானாலும் (50 வயதிலும்) உங்களையறியாமல் கர்ப்பமாகலாம் என்கிறதை மட்டும் மறந்துராதீங்க‌.

//வலி உண்டா// இது ஒரு பிரச்சினையே அல்ல‌. 'வலி' இராது என்பது எவ்வளவு ஜாலியான‌ விஷயம்! :‍) அமைதியாக‌ இருங்க‌; சந்தோஷமா இருங்க‌. பீரியட்ஸ் வரும். டாக்டர் ஏதாவது சொன்னால் தவிர‌ இதைப் பற்றிப் பொருட்படுத்தத் தேவையில்லை.

ஒரு விடயம் செய்தால் பீரியட்ஸ் ஒழுங்காக‌ வரும். :‍) கர்ப்பத்தடை மாத்திரைகள்... அவை ஹோர்மோன் மாத்திரைகள் தான். பீரியட்ஸ் மாதாந்தம் வரும் அதே சமயம் கர்ப்பத்தைப் பற்றியும் யோசிக்காமலிருக்கலாம். இதைப் பற்றி சில‌ மாதங்கள் உங்களை அவதானித்த‌ பிறகு அவசியமா அல்லவா என்று மருத்துவர் முடிவு செய்வார். பயமே வேண்டாம். நீங்களாக‌ எதுவும் செய்ய‌ வேண்டியது இல்லை.

//என் ப்ராப்ளம் க்கு இயற்கை மருத்துவம்// 'ப்ராப்ளம் இல்லை,' என்று அமைதியாக‌ இருப்பதே சிறந்த‌ இயற்கை மருத்துவம். :‍) பயப்படாதீங்க‌.

‍- இமா க்றிஸ்

டாக்டர் தான் ரிப்போர்ட் பார்த்து சொன்னாங்க prolactin low menopause ரெடி ஆகுது இவ்வளவு சீக்கிரம் ஆக கூடாது சொன்னாங்க . pregnancy urine test negative and no pregnancy symptoms ..அதனால் டாக்டர் pregnancy இல்லைனு சொன்னாங்க .அனா என் கணவர் தான் ரத்த டெஸ்ட்ல பார்க்க டாக்டரிடம் கேட்டாங்க இன்று கொடுத்திருக்கிறேன் நாளை ரிப்போர்ட் வருமாம் ..அதில் நெகட்டிவ் வந்தால் நல்லது.
இமா அம்மா உங்கள் பதிவில் ஒரு தெளிவு கிடைத்தது

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

//நாளை ரிப்போர்ட் வருமாம்// இது முந்தைய‌ ரிப்போர்ட்ல‌ இருந்ததா? //இவ்வளவு சீக்கிரம் ஆக கூடாது// பெரும்பாலும் ஆவதில்லை. ஆகாது என்பதும் இல்லை. (தெரிந்திருப்பதால்தான் சொல்கிறேன்.) உங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதால் நீங்கள் இதைப் பற்றி யோசிக்கத் தேவையில்லை. நீங்கள் வேறு ஏதாவது சிரமங்கள் இருப்பதாகச் சொன்னால், அதற்கேற்றபடி டாக்டர் ஹோர்மோன் ரீப்ளேஸ்மன்ட் ஏதாவது கொடுக்கலாம். நீங்கள் வேறு எந்தப் பிரச்சினையும் குறிப்பிடவில்லை.

//அதில் நெகட்டிவ் வந்தால் நல்லது.// ம். அப்படியானால் இதுவரை கருத்தடை முறைகள் பயன்படுத்தாமல்தான் இருந்திருக்கிறீர்கள். மூன்றாவது குழந்தை இப்போது வேண்டாம் என்றால் இனிமேல் எச்சரிக்கையாக‌ இருங்கள்.

//ரெடி ஆகுது இவ்வளவு சீக்கிரம் ஆக கூடாது// என்றவர்கள் வேறு என்ன‌ சொன்னார்கள்? நீங்கள் அதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. வேறு எதுவும் சொல்லவில்லை என்ற‌ வரை... பிரச்சினை இல்லை, நீங்கள் யோசிக்க‌ வேண்டியதில்லை.

‍- இமா க்றிஸ்

Tamila type panna time illa.. menopause hormone secrete aguthuna conceive ah kuda irukalam..
Na 12th la padicha niyabagam irukku.10month menopause agumnu..
Adha vachi solrenga..
Romba confuse pannikathinga..
Conceive na next step edunga..

அக்கா

மனச‌ போட்டு குழப்பாதீங்க‌ நீங்க‌ பிரக்னன்ட் இல்லைன்னு உறுதியா சொல்றீங்க‌.. பின்ன என்ன? ப்ளட் ரிப்போர்ட் பற்றி யோசிக்கிறீங்க‌? ஃப்ரீயா விடுங்க‌.

டாக்டர் சொல்ற‌ மாதிரி இருங்க‌..

- பிரேமா

Akka ninga uterus matrum karumuttai saarntha unavukal eduthu kollunkal ..paaayapadathinka

அது என்ன food னு சொல்லுங்க பா

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

எனக்கு மூன்று மாதமாக பீரியட் ஒழுங்கு இல்லை இந்த மாதம் 10 நா‌ட்க‌ள் தள்ளி வந்தது இன்று வரை கருமை நிறத்தில் மட்டுமே படுகிறது.
அதுவும் கொஞ்சம் ஆக... கருத்தடை injection potathil இருந்து இந்த மாற்றம்.. எனக்கு அந்த injection ஒதுக்கவில்லை என்று மருத்துவர் கூறினார் போன மாதம் .. இந்த மாதம் இப்படி padrathu எதுவு‌ம் பிரச்சனையா இது வரை இப்படி ஒரு ப்ராப்ளம் irunthathey இல்லை

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Period karuppa vantha uterusla azhuku irukunu artham .. ninga malavembu charu kudinka .. daily aloevera juice eduthukonka ithu rendumey katupaila irukura azhukkai veliyetrum .. so ithuku niga feel pannathinka .. mulaikatna parupu matrum thenkaai pal kudinka ellam normal ayidum harsha kavala padathinka.. mudincha kollu rasam vatvhu kudinka ..

மேலும் சில பதிவுகள்