ரீவைட்டல் விமன் மாத்திரை

என் வயது 27. திருமணமாகி 8 வருடம் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. எனக்கு சிஸ்டம் வேலை. சமீப காலமாக அதிக சோர்வினால் பாதிக்கப்பட்டேன். எனவே ரீவைட்டல் விமன் மாத்திரை ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்கள் எடுத்து வருகிறேன். இன்றுடன் 8 வது நாள். இதை உட்கொண்ட பின் நல்ல மாற்றங்கள் தெரிகிறது. 10 நிமிடம் கூட சிஸ்டம் பார்க்க முடியாத நான் இப்போது வேலை நேரம் முழுவதும் நிம்மதியாக வேலை செய்கிறேன். இரவு படுத்தவுடன் உறக்கம், காலை அலாரம் அடித்தவுடன் விளிப்பு என நன்றாக உணர்கிறேன். எனது இப்போதைய கவலை இதை சாப்பிடலாமா? வேண்டாமா? ஏதேனும் பாதிப்பு வருமா? அடிக்கடி தலை சுற்றுதல் போன்ற உண்ர்வு, முக்கியமாக மாதவிடாய்க்கு முந்தைய பிரச்சனையான பி.எம்.எஸ் சின்ரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்தேன். இப்போது அவற்றில் இருந்தும் நல்ல தீர்வு. என் கணவர் என்னை சத்தம் போடுகிறார். எதாவது பிரச்சனை வர போகிறதென.ஆனால் இந்த 8 நாள்களில் நான் புதிதாக உணர்கிறேன்.2 நாள் முன் பயங்கர வேலை. என் அலுவலகம் வரும் ஒரு மேடம் கேட்டார்கள். தேவி மேடம் ஆச்சரியமா இருக்கு. இன்னிக்கு டென்சன் இல்லாமல் சிரித்த முகத்துடன் இருக்கிறீர்கள் என. இத்தனைக்கும் காரணமான ரீவைட்டலை தொடர்வதா வேண்டாமா? யோசனை கூறுங்கள் தோழிகளே...

//இந்த 8 நாள்களில் நான் புதிதாக உணர்கிறேன்.// நாம் புத்துணர்ச்சியை அனுபவிப்பது... மிகவும் அருமையான‌ விடயம் இல்லையா! :‍)

//இதை சாப்பிடலாமா? வேண்டாமா?// முடிவு எடுக்க‌ வேண்டியது நீங்கள்தான். //ஏதேனும் பாதிப்பு வருமா?// வராது. உங்கள் உடலுக்குக் கிடைக்காதிருந்த‌ தேவையான‌ எதுவோ இப்போது கிடைப்பதால் தான் நீங்கள் உற்சாகமாக‌ உணருகிறீர்கள்.

பசியின்மை வந்தால் விட்டுவிடுவது நல்லது என்று நினைக்கிறேன். மற்றப்படி எடுக்கலாம். உடல்நிலையில் ஏதாவது புதிய‌ மாற்றம் ஏற்பட்டு அது தொடர்ந்து இருப்பது போல் தெரிந்தால் டாக்டரிடம் போய்க் கேட்கலாம். மற்றும்படி பிரச்சினை இராது.

காலம் முழுவதும் இந்த‌ மாத்திரையை நம்பியே சீவிக்க‌ முடியாது அல்லவா? மாத்திரை எடுத்தாலும் உணவில் கவனம் செலுத்தத் தவற‌ வேண்டாம். மெதுவே உணவில் தேவையான‌ மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். மாத்திரையை நிறுத்தப் பாருங்கள். எப்போதாவது தேவைப்படும் சமயம் ஓரிரண்டு நாட்களுக்கு எடுத்துவிட்டு விட்டுவிடலாம். லேபிளைக் கிழித்துப் போட‌ வேண்டாம். காலாவதி தேதி தெரியவேண்டும்.

‍- இமா க்றிஸ்

இம்மா அக்கா. நான் சாப்பாட்டிலே குறை வைப்பது கிடையாது. நல்லா சாப்பிடுவேன். நேரத்துக்கு பசிக்கிறது. 2 மணிக்கு சாப்பிட்டாலும் 5 மணிக்கு ஏதாவது சாப்பிடனும் இல்ல குடிக்கனும்னு தோணும். ஆனா இப்போ நைட் ஏழு மணிக்கு வீட்டுக்கு போற வரை ஏதும் தோண மாட்டிக்கி. //நாம் புத்துணர்ச்சியை அனுபவிப்பது... மிகவும் அருமையான‌ விடயம் இல்லையா! :‍)//உண்மை. நான் எங்க தாய்மாமா ஆபீஸ்ல தான் வேலை பார்க்கிறேன். அவங்களுக்கு நான் அடிக்கடி டையர்டு ஆகுறது ரொம்ப கஷ்டமா இருக்கும். எனக்காக அவங்க நிறைய காம்ப்ரமைஸ் பண்றாங்க. இதே வேற யாராவதா இருந்தா எப்பவோ சீட்டு கிழிஞ்சிருக்கும். அவங்க மதியம் தான் ஆபீஸ் வருவாங்க. நான் மதியம் அவுட். இப்போ ஓரளவு தாக்கு பிடிக்கிறேன்.(இல்ல எவ்வளவோ பரவாயில்ல)
// முடிவு எடுக்க‌ வேண்டியது நீங்கள்தான். // எனக்கு இத எடுக்கிறதனால நல்ல வித்தியாசம் தெரியுது. ஆனா என் அவங்க பயப்படுறாங்க. சோ உடம்பு பிரச்சனை தான் பயம்
//எப்போதாவது தேவைப்படும் சமயம் ஓரிரண்டு நாட்களுக்கு எடுத்துவிட்டு விட்டுவிடலாம். லேபிளைக் கிழித்துப் போட‌ வேண்டாம். காலாவதி தேதி தெரியவேண்டும்.// லீவு நாள்கள், ஞாயிற்று கிழமை அப்புறம் எங்க மாமா ஆபீஸ் வராத நாட்கள்ள எடுக்க மாட்டேன். ஏன்னா மாமா வந்தாதான் சிஸ்டம் வேலை அதிகம். சிஸ்டம் அதிக நேரம் பார்த்தாதான் டயர்டு போன்ற பிரச்சனை.அப்புறம் லேபிள் எப்பவு கிழிக்க மாட்டேன்.
//உங்கள் உடலுக்குக் கிடைக்காதிருந்த‌ தேவையான‌ எதுவோ இப்போது கிடைப்பதால் தான் நீங்கள் உற்சாகமாக‌ உணருகிறீர்கள்.// குழந்தைக்காக எடுத்த சிகிச்சைகளின் காரணாமாகவோ எதனாலோ கடந்த ஒரு வருட காலமாக பீரியட்ஸ்க்கு 10 நாள்களுக்கு முன்பே தலைசுற்றல், சோர்வு என் பி.எம்.எஸ் சின்ட்ரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டேன். இந்த மாதம் இன்று 29 ஆவது நாள்.இது வரை எந்த பாதிப்பும் வரவில்லை.

மிக்க நன்றி அக்கா. எனது சந்தேகத்திற்கு நேரம் கொடுத்து அதை தீர்த்ததற்கு...

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்

மேலும் சில பதிவுகள்