11 மாதம் நடக்கிறது. பிறந்ததிலிருந்து தாய்பால்தான் புட்டி பால் குடிப்பத்தில்லை. மிகவும் கஷ்டமாக உள்ளது. தாய்பாலை மறக்க/புட்டிப்பால் குடிக்க ஏதாவது வழி கூறவும்.
11 மாதம் நடக்கிறது. பிறந்ததிலிருந்து தாய்பால்தான் புட்டி பால் குடிப்பத்தில்லை. மிகவும் கஷ்டமாக உள்ளது. தாய்பாலை மறக்க/புட்டிப்பால் குடிக்க ஏதாவது வழி கூறவும்.
VR
11 மாதங்கள் தானே நடக்கிறது... ஏன் நிறுத்த போறீங்க??நல்லா 2 வருடம் குடுக்கலாம்...சுத்தமான கெமிக்கல் இல்லாத ஒன்று தாய் பால் ....குழந்தை குடிச்சா நல்லது தானே..புட்டி பால் எப்போது வேணுமனாலும் குடிக்கலாம்...இது என்னோட கருத்து..தவறாக இருந்தால் மன்னிக்கவும்..
Hope is necessary in every condition:)
உங்கள் கருத்துக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி. தாய்பால் குடித்தால்தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கிறாள் இரவானாலும்/பகலானாலும். இரவு 2/3 முறை ம்விழித்தால் தாய்பால் இல்லாமல் தூங்க மாட்டாள். இரவு சரியாக திட உணவு சாப்பிடாமல் இருந்தால் அன்று இரவு முழுவது பாடாய் படுத்தி விடுகிறாள். கொஞ்சம் கூட புட்டிபால் குடிகாமல் இருந்தால் எப்படி. சாப்பிடவும் அடம் பிடிக்கிறாள்.
VR
இந்த காலத்தில் எல்லோராலும் தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை.. நிறைய பேருக்கு சுரப்பதில்லை.. உங்களுக்கு நன்றாக இருப்பதனால் 2 வயது வரை கொடுக்கலாம். மிகவும் சத்தானதே.
நீங்கள் முதலிலேயே குழந்தைக்கு அவ்வப்போது புட்டி பால் பழக்கியிருக்க வேண்டும். விவரம் தெரிந்த பிறகு சில குழந்தைகளை மாற்றுவது சிரமம். நீங்கள் அவள் தூக்கத்தில் இருக்கும் போது உங்கள் மார்பின் அருகில் புட்டி வைத்து அவள் அசரும் நேரம் புட்டிக்கு மாற்றி பாருங்கள். சில குழந்தைகள் வாய் வைத்ததும் கண்டுபிடித்து அழ ஆரம்பிப்பார்கள். சில குழந்தைகள் தூக்கத்தில் கிடைத்ததை குடிப்பார்கள்.
முயற்சி செய்து பாருங்கள்.
இரவில் குழந்தையின் வயிறு நிரம்பி இருக்கிறதா என்று பாருங்கள். ஏதாவது சமாளித்து புட்டி பாலிற்கு பழக்குங்கள். நம்மால் உடம்பு முடியவில்லையென்றால் கூட குழந்தையால் அதை புரிந்து கொள்ள முடியாது..
//கொஞ்சம் கூட புட்டிபால் குடிகாமல் இருந்தால் எப்படி. சாப்பிடவும் அடம் பிடிக்கிறாள்.// ஆரம்பத்தில் பழக்காமல் இருந்ததால் வந்த விளைவு. குழந்தையை குறை கூறி பயனில்லை. சில குழந்தைகள் எளிதில் பழகி விடுவார்கள். சில குழந்தைகள் சிரமப்படுவார்கள். நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து பாருங்கள்.
கு: குழந்தை பசிக்கும் நேரம் தாய்ப்பாலிற்காக அழுகிறாள் என்றால் நேரத்திற்கு அவளிற்கு தோனாத மாதிரி சாப்பிட கொடுத்து கொண்டிருங்கள்.. தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தை (தடவையை) குறையுங்கள்.
- பிரேமா
என் குழந்தைக்கு 2 வயது ஆகி
என் குழந்தைக்கு 2 வயது ஆகி விட்டது தாய் பால் நிறுத்தி விட்டேன்..தாய் பால் வற்ற வழி கூறவும்...
லக்ஷ்மிஸ்ரீ
இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதால் உங்களுக்கு பால் கட்டிக் கொண்டு சிரமமாக இராது. மெதுவே தானாக வற்றும். சிரமமாக இருந்தால் மட்டும் ஒற்றடம் கொடுத்து பாலை வெளியேற்றுங்கள். உண்மையில் பாலை வெளியேற்ற வெளியேற்ற மீண்டும் சுரக்கும். அப்படியே விட்டுவிட்டால் மெதுவே சரியாகிவிடும்.
- இமா க்றிஸ்