குழந்தையின்மை & மாதவிடாய் பிரச்சினை

வணக்கம் தோழிகளே.
என்னுடைய பெயர் சசி.நான் அறுசுவைக்கு புதிது.
எனக்கு உங்களின் உதவி வேண்டும்.
திருமணம் ஆகி 2 வருடங்கள். இப்போது 6 மாதமாக கணவருடன் சேர்ந்து வசிக்கிறேன்.6 மாதமாக குழந்தைக்கு முயற்சி செய்கிறோம்
இன்னும் கரு தங்கவில்லை.
1.எனக்கு மாதவிடாய் ஒழுங்காக வருவதில்லை 40-45 நாட்கள் ஆகும்.
வந்தாலும் 2 நாட்களில் முடிந்து விடும்
2.மாதவிடாய் வரும் முதல் நாள் தாங்க முடியாத அளவு ரொம்ப வயிறு வலிக்கும்,தொடர்ந்து 3 hours வலிக்கும்.உடம்பு ரொம்ப வியர்க்கும் கை கால் எல்லாம் நடுக்கும்.மயக்கம் வரும் இப்படி நிறைய இருக்கு
இது என்ன பிரச்சினையா இருக்கும்
நான் இப்போதே சிகிச்சை எடுக்க வேண்டுமா இல்லை இன்னும் கொஞ்ச நாள் wait ￰பண்ணி பார்க்கலாமா?
Help பண்ணுங்க
நான் இப்போது என்ன செய்வது?

Hi sister nanum new than .. Friends.. Ama sister,. Follicular study eduthanga karummuttai growth aguthu Ana vedika matten kuthu.. Scan eduthu parthathula neerkatti kuttiya iruku NJ solranga.. Hormone ellam normala iruken.. Pls solution sollunga..

Hi sis. Follicular study எடுத்து பார்த்து கருமுட்டை வளர்ந்த பிறகு
முட்டை வெடிக்க ஊசி or மாத்திரை தந்து முட்டையை வெடிக்க செய்வார்களே
உங்களுக்கு அப்படி எதுவும் செய்யலையா
Sis

￰யாதுமானவன் என்னவன்

Illa sister.. One years tablet than edukuren sister.. Kalarchikaai sapturen but enna nadakuthune Theriyama iruku.. Periods cleara illa

Neenga doctor kitta just check pannikurathu nallathu sister

நீங்கள் சொல்லும் கணக்குப் படி பார்த்தால் கடந்த‌ 6 மாதங்களில் 4 அல்லது 3 சந்தர்ப்ப‌ங்கள்தான் கடந்திருக்கிறது. குழந்தைக்காகக் காத்திருக்கலாம் தான். நீங்கள் உங்கள் வயது என்ன‌ என்பதைச் சொல்லவில்லை.

//இப்போதே சிகிச்சை எடுக்க வேண்டுமா// மாதவிலக்கு சுழற்சியைச் சரிசெய்தால் கர்ப்பமாகும் சாத்தியம் அதிகரிக்கும் அல்லவா? அதற்காக‌ சிகிச்சை எடுக்கலாமே!

வலி, நடுக்கம் & மயக்கம் சிலருக்கு இருப்பது உண்டுதான். அது பிரச்சினையாக‌ இராது. மருத்துவரிடம் போகும் போது எல்லாவற்றையும் சொல்லி என்ன‌ செய்யலாம் என்று விசாரியுங்கள்.

‍- இமா க்றிஸ்

நன்றி அம்மா.
நான் period regular ஆஎ சிகிச்சை எடுக்கலாம்னு இருக்கேன்.
Period pain எனக்கு மட்டும் தான் ரொம்ப வலியா இருக்குதோன்னு நினைத்து பயந்துட்டேன். நீங்க சொன்ன பிறகு கொஞ்சம் ஆறுதலாக இருக்கு.நன்றி அம்மா

￰யாதுமானவன் என்னவன்

//வலி, நடுக்கம் & மயக்கம்// பனடோல் எடுக்கலாம். நன்றாகச் சாப்பிடுங்க‌. இரும்புச் சத்து அதிகம் உள்ள‌ உணவுகள் (பச்சைக் கீரைகள், ரெட் மீட் / மீன்) எடுங்க‌. //எனக்கு மட்டும் தான் ரொம்ப வலியா// சிலருக்கு வெகு அதிகமாக‌ இருக்கும். (என் சின்னக் காலத் தோழி ஒருவர் வயிற்றைப் பிடித்துக் கொண்டு உருளுவார். ;( ) இந்தச் சிரமங்களெல்லாம் வயதோடு மெதுவே காணாமல் போய் விடும். உங்களுக்கும் பழகி விடும்.
~~~~~~~
சந்தேகம் கேட்டிருந்தீங்க‌. :‍) என் பெயர் ஆங்கிலத்தில் Imma, தமிழில் இமா. :‍)

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி அம்மா.
என் சந்தேகத்தையும் தீர்த்து வெச்சீங்க அதுக்கும் நன்றி.

￰யாதுமானவன் என்னவன்

ரொம்ப நன்றி அம்மா.
என் சந்தேகத்தையும் தீர்த்து வெச்சீங்க அதுக்கும் நன்றி.
(நீங்களும் இலங்கையரா..எனது கணவரின் சொந்த இடமும் மட்டக்களப்பு தான்)

￰யாதுமானவன் என்னவன்

உதவி வேண்டும் தோழிகளே.
எனக்கு மாதவிடாய் ஒழுங்காக வருவதில்லை. Hospital ￰போனேன் அதற்காக Feminyl என்கிற மாத்திரை தொடர்ந்து 3 மாதங்கள் இரவில் எடுக்க வேண்டும் என்று சொல்லி doctor 3 மாத்திரை cards தந்தார்கள்.
அதில் 21 yellow + 7 brown ￰நிறத்தில் மாத்திரை உள்ளது.
முதல் மாதம் ஒரு card மாத்திரை போட்டு முடித்து விட்டேன்..
இன்று காலை period வந்தது.
இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
இன்று இரவே அடுத்த மாத்திரை card எடுக்க வேண்டுமா or period ￰முடிந்த பிறகு எடுக்க வேண்டுமா?

￰யாதுமானவன் என்னவன்

மேலும் சில பதிவுகள்