இளைஞனே!
நயாகராவை
நகர்த்தி வைக்கும்
நெம்புகோல் இளைஞர்களின்
நம்பிக்கை நட்சத்திரமாவோம்.
தோல்வியைத் துரத்தி
விரக்தியை விரட்டி
பூமியைப் புரட்டும்
புதிய அணிக்குத்
தலைமை ஏற்போம்.
சிதறிக் கிடக்கும்
சக்தியைச் சேகரித்து
சிகர சமுதாயம்
சமைப்போம்.
கல்வியை வியாபாரமாக்கும்
கயமை நிலை ஒழித்து
இலவசக் கல்வியை
எல்லோரும் பெற
எந்நாளும் பாடுபடுவோம்.
சாக்கடைச் சமுதாயத்தைப்
பூக்கடையாக்கும்
சலவை நிலையமாவோம்.
மதம், சாதி கடந்த
மனிதநேய மனங்களை
மண்ணில் அமைப்போம்.
உழைப்பாளியின் வேர்வை
உலரும்முன்
கூலி கொடுக்கும்
முதலாளி(த்துவம்) இழைப்போம்.
இந்த லட்சியம் வெல்ல
இரவு பகல் பாராது
கடுமையாய் உழைப்போம்.
இளைஞனே!
எழுந்து வா!
இமைப்பதற்குள்
இமய சாதனையை
எட்டிப் பிடிப்போம்.
- கேப்டன் யாசீன்
Comments
யாசீன்
கவிதை நன்றாக இருக்கிறது யாசீன். பாராட்டுக்கள். நீங்கள் நிறைய எழுத வேண்டும்.
//நயாகராவை
நகர்த்தி வைக்கும்
நெம்புகோல் இளைஞர்// இது மட்டும் என் சிற்றறிவுக்குப் புரியவில்லை. அறிந்துகொள்ள ஆவல். சற்று விளக்க முடியுமா? படிக்கும் போது, 'உழைப்பாளர் சிலை' என் கண் முன் வந்தது. இணையத்தில் தேடினேன். நயகரா தொடர்பான சிலைகள் எதுவும் கண்ணில் படவில்லை. உங்கள் பதிலுக்குக் காத்திருக்கிறேன்.
- இமா க்றிஸ்
மிக்க நன்றி நட்பே! உழைப்பாளர்
மிக்க நன்றி நட்பே! உழைப்பாளர் சிலைதான் பொருள். நயாகரா என்பது குறியீடு. நயாகரா அருவிதான். அது தண்ணீருக்கான குறியீடும்கூட. தண்ணீரைக் கொண்டு வருதல் என்றும் எடுத்துக் கொள்ளலாம். மலையிலிருந்துதானே அருவி வீழ்கிறது.மலையைப் புரட்டுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.
வாளைவிட வலிமை வாய்ந்தது எழுதுகோல்
யாசீன்
ஆஹா! தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். அருமை. மிக்க நன்றி சகோதரரே!
- இமா க்றிஸ்
நன்றி
மிக்க நன்றி சகோதரரே!
வாளைவிட வலிமை வாய்ந்தது எழுதுகோல்