திடீரென அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?

வணக்கம். அறுசுவையின் நீண்ட நாள் வாசகியான எனக்கு, சிறிது நேரத்திற்கு முன்பு அறுசுவை தளத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது. உள்நுழைதல் செய்தாலும் அனுமதி கிடைக்கவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு தற்போது அனுமதி கிடைத்துள்ளது. பெயர்ப்பதிவு செய்தால்தான் இனி அறுசுவையை பார்வையிடமுடியுமா? அனுமதியை மறுப்பதற்கு காரணம் அறிந்து கொள்ள விரும்புகின்றேன். இது எனக்கு மட்டும்தான் ஏற்பட்டதா என்பதும் தெரியவில்லை.

அட்மின் அவர்களுக்கு,
எனக்கும் இது போன்றே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனது தளத்தில் எனது பக்கம், வெளியேறு இரண்டு மட்டுமே உள்ளது. மற்ற தொடர்புகளான எனது குறிப்புகள், சமீபத்திய குறிப்புகள், குறிப்புகள் சேர்க்க யாவையும் காணவில்லை. என்னவாயிற்று? விளக்கவும். நன்றி.

அன்புடன்,
செல்வி.

இப்போதுதான் முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்தைப் பார்த்தேன். அவசரப்பட்டு எழுதியமைக்கு மன்னிக்கவும். திடீரென எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதும் என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. காரணம் புரியாததால் கொஞ்சம் கோபமும் வந்தது. அதனால்தான் சற்று அவசரப்பட்டு கேள்வி எழுப்பிவிட்டேன்.

திரு அட்மின் அவர்களுக்கு, எனக்கும் திருமதி தமிழ்செல்விக்கு உள்ளதுப்போல் குறிப்புகள் சேர்க்க, சமீபத்திய பதிவுகள், எனது குறிப்புகள் என்ற தலைப்புகள் மிஸ்ஸிங். மன்றத்திற்க்கும் அனுமதியில்லை.தயவுச் செய்து தகுந்த ஆவனைகளைச் செய்து தரும்படி கேட்டுக் கொள்கின்றேன், நன்றி.

சகோதரிகளுக்கு,

மன்னிக்கவும். இந்தப் பிரச்சனை எதனால் தோன்றியது என்று தெரியவில்லை. நான் எந்த மாற்றங்களும் செய்யவில்லை. என்னாலும் இந்த தளத்தினை பார்வையிட முடியவில்லை. எனக்கும் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. (அனுமதி மறுக்கப்பட்டது என்ற வாக்கியம் Default message. தவறுகள், பிரச்சனைகள் இருந்தால் அந்த அறிவிப்பு வரும்.)

Hosting side ல் ஏதோ மாற்றங்கள் செய்திருக்கின்றார்கள். அதனால்தான் இந்தப் பிரச்சனை என்பதை அறிகின்றேன். இது குறித்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். software upgrade, server maintenance, new installation என்று அவர்கள் பக்கம் ஏதேனும் செய்யும்போதெல்லாம் இது போன்ற பிரச்சனைகள் வருகின்றன. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் வராதவாறு பார்த்துக் கொள்ளுமாறு அவர்களுக்கு வேண்டுகோளும் அனுப்பியுள்ளோம்.

இடைப்பட்ட நேரத்தில் எனக்கு 20 மின்னஞ்சல்களுக்கு மேல் வந்து குவிந்துவிட்டது. உங்களின் ஆர்வத்திற்கு தலைவணங்குகின்றேன். பெயர்ப்பதிவு செய்யாததால்தான் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது என்று எண்ணி, பத்து நிமிடத்திற்குள் சுமார் 20 பேருக்குமேல் பெயர்ப்பதிவு செய்துவிட்டனர். சிலர் கோபமாக கேள்வியும் எழுப்பியிருந்தனர்.

தளத்தைப் பார்வையிட பெயர்ப்பதிவை கட்டாயம் ஆக்கும் எண்ணம் எனக்குக் கிடையாது. பார்வையிடுதலுக்கு எந்த கட்டுப்பாடும் இருக்கக் கூடாது என்பதுதான் எனது எண்ணம். தளத்தில் ஏதேனும் பதிவு செய்தலுக்கு மட்டுமே பெயர்ப்பதிவை அவசியமாக்கியுள்ளோம். இதற்கு கட்டுப்பாடு அவசியம் தேவை. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்றால், வேண்டாதவை, மோசமானவை என்று நிறைய பதியப்படும். இதனைக் கட்டுப்படுத்தத்தான் சிலவற்றிற்கு மட்டும் பெயர்ப்பதிவை அவசியமாக்கியுள்ளோம். ஆகவே, பார்வையிடுதலுக்கு எந்தக் காலத்திலும் கட்டுபாடுகள் விதிக்கப்படாது.

இந்த தடங்கலுக்கு காரணம் நாங்கள் அல்ல என்றாலும், உங்கள் அனைவருக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு மிகவும் வருந்துகின்றோம்.

சகோதரிகளுக்கு, ஒரு முறை logout செய்துவிட்டு login செய்யாமலே மன்றத்தினை பார்வையிட முடிகின்றதா என்று பாருங்கள். பின்னர் login செய்துவிட்டு பாருங்கள். இரண்டையும் முயற்சித்து என்ன நடந்தது என்பதை எனக்குத் தெரிவியுங்கள். உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்.

ஆஹா., நிலவு வந்து விட்டது.ஆமாம் அட்மின் அவர்கள் கூறியுள்ளதை போலவே, logout & login இரண்டிலும் இப்பொழுது மன்றத்தினை பார்வையிட முடிகின்றது.நன்றி.

எனக்கும் குறிப்புகள் சேர்க்க, சமீபத்திய பதிவுகள், எனது குறிப்புகள் என்ற தலைப்புகள் மிஸ்ஸிங்.ஒரு மணிநேரம் முயற்சி செய்தும் ஒன்றும் வரவில்லை

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

சகோதரி ஜுலைகா அவர்களுக்கு, இப்போது பார்வையிட முடிகின்றதா? அல்லது இன்னமும் அதேப் பிரச்சனை உள்ளதா? உடன் தெரிவிக்கவும்.

இப்போது சரியாகிவிட்டது எல்லா பக்கங்களையும் பார்வையிடமுடிகிறது ஆனால் என் பகுதிகள் மட்டும் மிஸ்ஸிங்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

"என் பகுதிகள்" என்று எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாமா? எனது பக்கம், குறிப்பு சேர்க்க, எனது குறிப்புகள் இவை மூன்றும் வருகின்றதா என்பதை தெரிவிக்கவும்.

மேலும் சில பதிவுகள்