Advertisement varuvatharkana pathil

Imma amma mobile saariya entha optionum click panna mudila .. advertisement fulla vanthu hide pannuthu sila advertisement theriyama click panna hang akuthu mobile .. enna seiyanum ..kelvikal friends yaruna vanthurukaankalaa parkunumna intha aadvertisements vanthu tholla pannuthu.. enaku mattum than appadiyaa..

images,video,files copy pannithu phone ah factory reset pannirunga...apram install pannunga work agum.....

Ithukum ninga path thantha nalla irukum ... yen arusuvayil ivvalavi advertisement .. nan ithuku minnaadi ivvalavu parthathilla ...ethenum click aaki vitta mobile slow akuthu ...

கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க‌ சரண்யா. :‍)

'தமிங்கிலம் படிக்க‌ என்னால் முடியுறது இல்லை' & 'என் பெயர் போட்டு த்ரெட் ஆரம்பிக்க‌ வேண்டாம்,' என்று அன்பு வேண்டுகோள்கள் வைத்தேன். இரண்டையும் பெரும்பாலானோர் கண்டுக்கிறதா இல்லை. :‍) இப்போ, 'இதுதான் நிலை,' என்கிறதை ஏற்றுக் கொண்டு கம்ப்ளைன்ட் பண்ணாம‌ முடிகிற‌ போது மற்றவங்களுக்காக‌ அட்ஜஸ்ட் பண்ணி பதில் சொல்றேன். அது போல‌ இது உங்களுக்கான‌ நேரம். சற்றுப் பொறுத்துக்கொள்ளுங்கள்.

//yen arusuvayil ivvalavi advertisement// எங்கு இல்லை! எல்லா இடமும் இருப்பதுதான். டீவீயில் ஒரு படம் பார்க்கப் போனால் இடையில் எத்தனை விளம்பரங்கள்! யூட்யூபில் ஒரு ட்யூடோரியல் பார்க்கலாம் என்றால் இடையில் விளம்பரம்! எந்த‌ இணையத்தளம் ஒன்று விளம்பரம் இல்லாமல் தெரிகிறது! குறிப்பிட‌ முடியுமா? எமக்குத் தேவை இருந்தால், சின்னச் சின்ன‌ இடையூறுகளைப் பொருட்படுத்தாமல் பொறுத்துக் கொள்ளலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

;)))) இமா அம்மாவை விளம்பரம் செய்ததற்கு நன்றி குட்டிப் பெண்ணே! ;))

‍- இமா க்றிஸ்

இமா அவர்கள் ஏற்கனவே பதில் கொடுத்து விட்டார்கள். எனது பக்கமிருந்து ஒரு சிறிய விளக்கம். உங்களுக்காக மட்டுமல்ல. அனைத்து அறுசுவை நேயர்களுக்காகவும்.

நீங்களே குறிப்பிட்டு இருந்தீர்கள், இதற்கு முன்பு விளம்பரங்கள் அதிகம் வந்ததில்லை என்று. அதிகம் என்று இல்லை. கடந்த நான்கு வருடங்களில் விளம்பரமே கிடையாது. அதன் விளைவாகத்தான் அறுசுவையை தொடர்ந்து நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உண்டாயின. கடந்த சில வருடங்களாக குறிப்புகள், க்ராப்ட்ஸ், வீடியோ என்று எதுவுமே புதிதாக சேர்க்கப்படவில்லை என்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். அறுசுவை போன்ற ஒரு தளத்தினை எந்த வருமானமும் இல்லாமல் தொடர்ந்து நடத்துதல் இயலாது.

தற்போதுதான் கூகுள் விளம்பரங்கள் தமிழ் தளங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதை அறுசுவையில் பரீட்சார்த்தமாக கொடுத்து சில விசயங்களை கவனித்து வருகின்றோம். தற்போது random ஆக auto advertisements வருகின்றன. அதனை நாங்கள் கண்ட்ரோல் செய்ய இயலாது. அறுசுவை நிறைய மாற்றங்களுடன் வெகு விரைவில் வர இருக்கின்றது. அப்போது அதில் வரும் விளம்பரங்கள் சரியான இடத்தில் சரியான அளவில் வரும்படி செய்ய இருக்கின்றோம். இந்த இடைப்பட்ட காலத்தில் உண்டாகும் சிரமங்களை தயவுசெய்து பொறுத்தருளவும். :-)

Babu anna imma amma thelivu padithiyathirkku nandri ... puthusa vara pigutha arusuvai romba santhosham ... imma amma ninga mana arinthu pathil solrathala unkalai kuppitu vitte. Melum thalaippula potta ninga kandippa pathil tharuvinkanum therium ..scroll pannum pothu la thalaipukalum hide akikuthu athukuthan intha advertisement thalaippu ...

Once thanks

இழையின் தலைப்பைச் சரிசெய்ததற்கு நன்றி சகோதரி.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்