எனக்கு பதில் தாருங்கள் தோழிகளே .. iui and ivf எல்லாம் செஞ்சு போன வருஷ 2017 1 varusham ஆயிடுச்சு .. இப்போதிகைக்கு குழந்தைக்கு முயற்சி செஞ்சுட்டு வரோம் .. irregular period இருந்தது .. அடிக்கடி மயக்கம் அடிச்சு விழுற மாதிரி படுத்துக்குவேன் .. மருத்துமனை நேத்து பொய் பார்த்தோம் அவங்க blood test scan எடுத்து பார்த்து tsh and prolactin ரெண்டுமே கொஞ்சம் high இருக்குனு சொல்லி மருந்து கொடுத்துருக்காங்க .. என்னால conceive அகா முடியாத ? Nan ippo enna pannanum ithu rendum ennathu ? Itha sari panna nan enna pannanum
Saranya
Nalla healthy food sapudunga . Walking ponga . Yoga pannunga . Happy ah jolly veetula irukuravuga kuda irunga . Ethavathu outside place poitu vanga husband kuda . Avuga kudukura tablet la correct ah sapudunga . Oil and sweet la kammi pannunga. Sweet sugar suthama use pannathenga . Fruits neraya sapudunga Pacha payar keerai ithala nalla sapudunga .
Throid ku patcha payiru
Throid ku patcha payiru keerai lam saapuda kudathunu soldrankappa .. enaku throid athikama irukunu reportla vanthuruku .. prolactin konjam high la irukunu medicine edukka sollirukanka .. ethelaam helathya iruko athrlam omit panna enna panrathunu therila ...
சரண்யா கமலம்
//Throid ku patcha payiru keerai lam saapuda kudathu// அது உண்மையில்லை, சாப்பிடலாம்.
//medicine edukka sollirukanka// அவற்றை மட்டும் கவனமாக எடுங்கள், போதும்.
- இமா க்றிஸ்
Imma amma
Nomba nandri ma .. enaku enna kavalaina thyroid ku continuosa tablet saapda vatchuduvankalno payama iruku .. yarukuneum hormone imbalance irunthu sari senchurukinkala? .. eppadi sari panrathunu therila .. orupakkam thondai vali kaathu varai ullathu ..
Patcha payiru saapta arambikiren ..
Enaku thyroid level athigama iruku .. so karpratchambigai ghee night la saapudurom... ghee saptalama ? Inaikuthan first thyroid tablet poten thalavali kaluthu valu ellamey vanthu sorva iruku .. enaku ennachuney therila...
சரண்யா கமலம்
//thyroid ku continuosa tablet saapda vatchuduvankalno payama iruku// இதில் பயப்பட என்ன இருக்கிறது! நான் பல வருடங்களாக தொடர்ந்து எடுக்கிறேன். விளைவு நன்றாகவே இருக்கிறது. காலை எழுந்ததும் முதல் வேலையாக மாத்திரையை எடுத்துவிட்டு மணியைப் பார்ப்பேன். ஒரு மணி நேரம் கழித்து காப்பியோ உணவோ. பயப்பட எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
//yarukuneum hormone imbalance irunthu sari senchurukinkala?// எம் உடல் பல ஹோர்மோன்களைச் சுரக்கிறது. எந்த ஹோமோன் பற்றிக் கேட்கிறீங்க?
//orupakkam thondai vali kaathu varai ullathu// புரியல.
//Patcha payiru saapta arambikiren// சிலருக்கு பயறு, கடலை வகைகள் பச்சையாக உண்ணும் போது காது அடைப்பு வருவது உண்டு.
//Enaku thyroid level athigama iruku .. so karpratchambigai ghee night la saapudurom... ghee saptalama ?// ;) என்ன பதில் சொல்றது என்று தெரியல. ;) உங்களுக்கு கடவுள் மேலேயும் நம்பிக்கை இல்லை; மருத்துவத்தின் மேலேயும் நம்பிக்கை இல்லை.
//Inaikuthan first thyroid tablet poten thalavali kaluthu valu ellamey vanthu sorva iruku// இல்லை கண்ணா. அது எதுவும் மாத்திரை போட்டதால் வரவில்லை. உங்கள் மனம் சோர்வாக இருப்பதாலும் உங்களை நீங்கள் மன அழுத்ததுக்கு உள்ளாக்குவதாலும் வந்த வலி.
//enaku ennachuney therila/ அமைதியா இருங்க. மாத்திரையை நம்பிக்கையோட போடுங்க. உண்மையில்... இருக்கும் சோர்வு காணாமல் போகும் அந்த மாத்திரைக்கு. ஆனால் சட்டென்று ஒரு நாளில் எல்லாம் விளைவை எதிர்பார்க்க வேண்டாம். மெதுவே சமப்படும். நெய் எதுவும் செய்யாது. பயம் வேண்டாம்.
- இமா க்றிஸ்
Nandri imma amma--
1. இல்லை இம்மா அம்மா என்னால தொடர்ந்து மாத்திரை எடுக்க ஏன் பயபடுக்குறேன் என்றால் எனக்கு அரிப்பு ஏற்படும் மேலும் அல்சர் இருக்கு அதனால் பயபடுக்குறேன் ..
2.எனக்கு கர்ப்பத்துக்கு உண்டாகும் பல ஹார்மோன்கள் உள்ளது அல்லவா தைராய்டு தான் முதன்மையானது அதனால் சிறு பயம் தொற்றிக்கொண்டது ..
3.எனக்கு காத்து அடைப்பு இல்லை இம்மா அம்மா தொண்டய் முதல் காது வரய் நரம்பு வலிக்கிறது .
4.கடவுள் மேல் நம்பிக்கையையும் இருக்கு மருத்துவத்தின் மேல் நம்பிக்கை இருக்கு என்னுடைய எழுத்துக்களை வைத்து நீங்க என்ன இப்படி சொல்லிருக்க கூடாது ...ஏன் இம்மா அம்மா அப்படி சொல்லுறீங்க ..
5.உண்மை தான் எனக்கு தைராய்டு ,உடனே நான் பயத்தில் இருக்கிறேன் .. நீங்கள் சொல்வது உண்மைதான் .. தனியாக வெளிநாட்டில் உள்ளேன் ஆறுதல் இந்த அறுசுவை மட்டுமே ...
6.உங்களுடைய நம்பிக்கையான வார்த்தைக்கு ரொம்ப நன்றி imma amma...
சரண்யா கமலம்
//எனக்கு அரிப்பு ஏற்படும்// அது இந்த மாத்திரைக்காக வருவது இல்லை. நீங்கள் ஏற்கனவே எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா? போன தடவை ஒரு மாத்திரை மட்டும் எடுத்திருப்பதாகச் சொன்னீர்கள். எதை வைத்து அரிப்புக்கு தைராய்ட் மாத்திரை காரணம் என்கிறீர்கள்? நீங்களாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.
//அல்சர் இருக்கு// தைராயிட் மாத்திரை அல்சரைக் கொண்டு வராது. பயம் வேண்டாம். எனக்கும் பல வருடங்கள் முன்பு அல்சர் இருந்திருக்கிறது. இதனால் வருவதானால் இப்போது எப்படி அல்சர் இல்லாமலிருக்கிறேன்! உங்கள் உணவுப் பழக்கத்தில் மாற்றம் தேவை என்று நினைக்கிறேன்.
//எனக்கு கர்ப்பத்துக்கு உண்டாகும் பல ஹார்மோன்கள் உள்ளது அல்லவா// ஆமாம். //தைராய்டு தான் முதன்மையானது// இல்லை. இது ஆண் பெண் என்கிற பாகுபாடு இல்லாத ஹோர்மோன். கர்ப்பம் பற்றிய கவலை இல்லாதோர்க்கும் தைராய்ட் சமநிலையில் இருந்தால் தான் மீதி இயக்கங்கள் ஒழுங்காக இருக்கும்.
//yarukuneum hormone imbalance irunthu sari senchurukinkala?// இது தைராய்ட் பற்றிய கேள்வி என்றால்... ஆமாம், நான் நல்ல உதாரணமாக இருக்கிறேன். இப்போது மிகமிக நன்றாக இருக்கிறேன். இரண்டு வாரம் முன்பு செய்த ரத்தப் பரிசோதனை இதனை உறுதிசெய்திருக்கிறது.
//தொண்டய் முதல் காது வரய் நரம்பு வலிக்கிறது// டாக்டரிடம் காட்டுங்கள். இதற்கும் தைராய்டுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிந்தால், கட்டாயம் தைராய்ட் மாத்திரை எடுத்தாக வேண்டும்.
//ஏன் இம்மா அம்மா அப்படி சொல்லுறீங்க// ;) ஒன்று டாக்டர் கொடுக்கும் மருந்தை நம்பி ஒழுங்காக எடுக்க வேண்டும். அல்லது கடவுளை முழுமையாக நம்பி அந்த நெய், உணவு அல்ல... தெய்வீகமானது என்று நம்பி சாப்பிட வேண்டும். இரண்டுக்குமே பயப்படுகிறீர்கள். :)
//எனக்கு தைராய்டு ,உடனே நான் பயத்தில் இருக்கிறேன்// பயப்பட வேண்டாம். முதலில் மாத்திரையை ஒழுங்காக எடுக்க ஆரம்பியுங்கள். ஓரிரண்டு மாதங்கள் கழித்து சிந்தித்துப் பாருங்கள் _ உங்கள் அல்சர், அரிப்பு, தொண்டை வலி எல்லாம் அதே நிலையில் இருந்தால் மாத்திரையால் எதுவும் ஆகவில்லை என்று நம்பலாம். பயமின்றி மாத்திரையைத் தொடரலாம். மேலே சொன்னவற்றுக்கு மருந்து எடுக்கலாம். கூடி இருந்தால் மீண்டும் மருத்துவரிடம் போய் ஆலோசனை கேழுங்கள். குறைந்திருந்தால்... இது நிவாரணியாக இருக்கிறது என்று கொண்டு நம்பிக்கையோடு தொடருங்கள்.
- இமா க்றிஸ்