நீ சி((ரித்த)ந்திய
முத்துக்களில்
அட்டிகை செய்து
வாரி அணைத்து
உன்னை
அணிந்துகொள்கிறேன்
தாயாகிய நான்,,,,,,
ஒரு வரி கவிதை அல்ல நீ,
ஒரு யுகம் போதாது
உன்னை பற்றி எழுத,,,,
நீ முறிக்கும் சோம்பலில்
நான் பூரித்து சிலிர்க்கிறேன்
மனதில்,,,
உன் பட்டுப் பாதம்
தீண்ட தென்றலும்
தவம் கிடக்கிறது
வரம் கிடைக்காமல்,
பூமியில் நீ தவழ
வானம் தான் ஏங்குகிறது
உன்னைக் கையில் ஏந்த முடியாமல்
உன்னைக் காணமுடியாமல்
தவிக்கிறது வெண்ணிலா
அமாவாசை அன்று,,,,
நட்சத்திரமும்
ஆங்காங்கே மின்னுகிறதே
உன்னைப் பார்த்து கண்ணடிக்க,,,,,
மொத்தத்தில்
இயற்கையே மண்டியிட வேண்டும்
மழலை உன் அழகை காண (ரசிக்க),,,
- சுபிதா
Comments
சுபிதா
மழலையைப் போலே கவியும் அழகு.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
அறுசுவை டீம்
மறுபடியும் என் கவிதை வெளியிட்டமைக்கு நன்றி.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
பூங்காற்று
உங்கள் வருகைக்கும், பதிவிற்கும் நன்றி.
//மழலையைப் போலே கவியும் அழகு.// உங்கள் பெயரை விடவா?
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
தாயின் வர்ணனை
வர்ணனைகள் அழகு சுபி.
- இமா க்றிஸ்
சுபி
எப்படி இருக்கிங்க சுபி
ரொம்ப நாள் கழிச்சி உங்க கவிதை
அழகா இருக்கு சுபி:)
இமா அம்மா
இமாம்மா உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும் நன்றி.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
நிகி அக்கா
நிகிக்கா நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க க்கா,,,
ரொம்ப நாள் ஆச்சு உங்ககூட பேசி, நீங்க FB வர்றதே இல்ல,
///ரொம்ப நாள் கழிச்சி உங்க கவிதை///ம்ம் ஆமாக்கா இப்போ முன்ன மாதிரி எழுதுறது இல்லக்கா.
அழகா இருக்கு சுபி:)/// தாங்ஸ்க்கா.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
அருமை
அருமை