சந்தேகம்!!! தெரிந்தவர்கள் பதில் கூறவும்

அன்பு தோழிகளுக்கு வணக்கம்

நீண்ட வருட தவத்திற்கு பிறகு கடவுள் எங்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையை வரமாக கொடுத்து உள்ளார். 3 மாதம் ஆகிறது்

என்னுடைய சந்தேகம்
என் கணவரின் தங்கைக்கு கடந்த மாதம் திருமணம் முடிந்தது. என் அம்மா சொல்லரங்க, என்னுடைய நாத்தனார் என்னையும் என் குழந்தையையும் காலையில் குளிக்காமல் பார்க்க கூடாது. அப்படி பார்த்தால் என் நாத்தனாருக்கு கர்ப்பம் தங்கிடும்் ஆனால் அந்த குழந்தை பிறக்கும் வரை என் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கும் னு சொல்றங்க்்் இது உண்மையா? நான் இப்போது என் மாமியார் விட்டிர்கு செல்ல உள்ளேன்.. என் நாத்தனார் அங்குதான் தன் கணவறுடன் இருக்கிறாள்

இதுப்பற்றி தெரிந்தவர்கள் பதில் கூறவும்

நன்றி

இப்படி ஒரு விஷயம் நான் கேள்விப்பட்டது இல்லப்பா. திருமணம் ஆகாத பெண் பீரியட் ஆனப்ப குழந்தை ய தொட்டா குழந்தைக்கு உடம்பு சரி இல்லாம போகும்னு கேள்வி பட்டுருகேன்

//நாத்தனார் என்னையும் என் குழந்தையையும் காலையில் குளிக்காமல் பார்க்க கூடாது.// தூக்கக் கூடாது என்றாலும் ஏதாவது நியாயம் கற்பிக்கலாம்; கண்ணால் பார்த்தால் கூடவா ஆகாது! அதுவும் உங்களைப் பார்த்தால் குழந்தைக்கு உடம்புக்கு ஆகாது என்பது... 2018ல் கூட இது போன்ற நம்பிக்கைகள்!!

அம்மா... அவர்கள் சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட விதம் இப்படியான விடயங்களைச் சிந்திக்காமல் நம்பச் சொல்லும். அவர்களைப் பிழை சொல்ல இயலாது. உங்கள் அம்மா சொன்னார் என்றிருந்தும் கண்ணை மூடிக் கொண்டு அதை நம்பி நடவாமல் நீங்கள் இங்கு வந்து கேட்கிறீர்கள் என்பதை - ஆரோக்கியமான விடயமாகப் பார்க்கிறேன் நான். இது மறைமுகமாக எனக்குச் சொல்லும் விடயம், நீங்கள் அந்தத் தகவலை நம்பவில்லை என்பதே. இங்கு நீங்கள் கேட்பது... உங்களுக்கு ஆதரவாக சிலரைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பதற்காக இருக்கலாம் என்று தோன்றுகிறது. நம்பியிருந்தால் இங்கு வராமலே பின்பற்றியிருப்பீர்கள். சரிதானே! :-)

//அப்படி பார்த்தால் என் நாத்தனாருக்கு கர்ப்பம் தங்கிடும்.// எவ்வளவு நல்ல விஷயம் இது! (எனக்கு ஒரு சந்தேகம்.... இது உண்மை என்றால்... இந்த டெக்னிக்கை பாசிட்டிவ்வாக பலர் பயன்படுத்திருக்க மாட்டாங்களா! ஏன் பண்ணவில்லை!) நாத்தனார்... சகோதரி தானே! //நீண்ட வருட தவத்திற்கு பிறகு கடவுள் எங்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையை வரமாக கொடுத்து உள்ளார்.// சிரமம் புரிந்தவர் நீங்கள். தவம் செய்யாமல், உங்களைப் பார்ப்பதால் மட்டுமே உங்கள் சகோதரிக்கு அந்த வரம் கிடைக்கும் என்றால்... நிச்சயம் அந்தப் புதிய குழந்தை வரும் நாள், உங்கள் மனம் பெரிய சந்தோஷத்தில் மிதக்கும். அந்தச் சந்தோஷத்தைக் கொடுக்க நினைத்த நல்ல மனதிற்காகவே கடவுளின் ஆசீர்வாதம் உங்கள் குழந்தைக்குக் கிடைக்கும், உங்கள் குழந்தை எந்தக் குறையும் வராது.

//ஆனால் அந்த குழந்தை பிறக்கும் வரை என் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கும் னு சொல்றங்க்்் இது உண்மையா?// இல்லை. பயப்படாதீங்க. உடல் நலம் பாதிக்கப்பட்டால் அதற்கான காரணங்கள் வேறு இருக்கும். நாத்தனார் தான் காரணம் என்று பிழையாக நினைக்காமல், தேவைப்பட்டால் சிகிச்சைக்குப் போக வேண்டும். எனக்குப் பின் மணமான நாத்தனார் எனக்கு இருக்கவில்லை என்னையும் என் குழந்தையையும் குளிக்காமல் பார்க்க. ஆனாலும் குழந்தைக்கு அப்பப்போ சுகயீனங்கள் வராமல் இருக்கவில்லை. குழந்தை என்றால் எல்லாம் வரத்தான் செய்யும். அருகே செல்வோர் மூச்சுக் காற்றிலிருக்கும் கிருமிகளே போதும், சுகவீனம் வரவைக்க. நீங்களே உங்களை அறியாமல் பல கிருமிகளை காவிக் கடத்துவீர்கள். அதை நாத்தனாராலோ உங்கள் அம்மாவாலோ கூட்டவோ தடுக்கவோ முடியாது.

//நான் இப்போது என் மாமியார் விட்டிர்கு செல்ல உள்ளேன்.. என் நாத்தனார் அங்குதான் தன் கணவறுடன் இருக்கிறாள்// இதை நம்பி ரியாக்ட் பண்ணுவதாக இருந்தால், அங்கு போகாமல் நாத்தனார் கர்ப்பமாகும் வரை அம்மா வீட்லயே இருக்க வேண்டும். முடியுமா உங்களால்!! அங்கு போகமலிருப்பதற்காக அவர்களிடம் உண்மையைச் சொன்னாலும் பிரச்சினையை உருவாக்குவதாக முடியும்; சொல்லாமல் அங்கு போன பின்பு, 'என் அம்மா இப்படிச் சொன்னாங்க.' என்று சொன்னால்!! இன்னும் பெரிய பிரச்சினை. பிரச்சினை... உங்களுக்கும் கணவருக்கும் இடையிலும் கூட வரலாம்.

¬¬¬¬¬¬¬¬¬¬¬
//திருமணம் ஆகாத பெண் பீரியட் ஆனப்ப குழந்தை ய தொட்டா குழந்தைக்கு உடம்பு சரி இல்லாம போகும்.// இதுவும் உண்மை இல்லைங்க.
¬¬¬¬¬¬¬¬
நம்பிக்கைகள் எல்லாம் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடுகின்றன. ஆனால் எந்த நாட்டாரானாலும் மக்கள், மக்கள்தானே! இல்லையா! எம் நம்பிக்கைகள் சீனர்களைப் பாதிப்பதில்லை என்பது எப்படி! அவர்களும் மனிதர் தானே! அவர்களது நம்பிக்கைகளை நாம் கண்டுகொள்வது இல்லை; அதனாலேயே அவை எம்மைப் பாதிப்பதில்லை. அது போல்தான் முதலாவதும். நம்பாத மக்களை நம்பிக்கைகள் எதுவும் செய்வதில்லை; நம்புகிறவர்களைத் தான் பாதிக்கிறது. உண்மையில்... நம்புவர்களுக்கும் கூட எதுவும் ஆவதில்லை. 'பாதிப்பு ஏற்படும்,' எனும் எண்ணம் மனதில் அழுத்தமாகப் பதிந்திருக்கும் போது, சின்னதாக சாதாரணமாகத் தும்மினாலும் மனம் இரண்டையும் இணைத்துப் பார்க்கும்.

இன்னொரு விடயம் மனதில் வந்து போகிறது. சரியான வார்த்தைகளைத் தெரிந்து பயன்படுத்த வேண்டும் நான். :-) வார்த்தைகள் வரமாட்டேன் என்கிறதே! நாமே நம் பெண் இனத்தை விட்டுக் கொடுக்கலாமா! பாகுபாடு பார்க்கலாமா! ஒவ்வொரு பெண்ணும் ஒரு காலம் 'திருமணமாகாத பெண்' ஆக இருக்கத் தான் வேண்டும்; மாதம் ஒரு முறை மூன்றுநாள் கடந்துதான் ஆகவேண்டும். ஒரு நாள் ஆவது, 'விசேஷம் ஒன்றும் இல்லையா!' பேச்சு காஷுவலாகவாவது கேட்கத்தான் வேண்டும். இன்று மருமகளாக இருந்து நாளை மாமியாராக ஆகித்தான் ஆக வேண்டும். இன்று இருக்கும் நிலை நிரந்தரம் இல்லை. காலத்தோடு பெண்ணின் நிலையும் மாறும். நாளை எம் பெண் குழந்தைகள் எந்த நிலையில் இருப்பார்கள் என்பது எமக்குத் தெரியாது. அவர்களும் இன்னொரு புதிய தாய்க்கு நாத்தனாராக அதுவும் புது மணப்பெண் நாத்தனாராக அமையலாம். அல்லது வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இன்னொருவரால் ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி ஒதுக்கப்பட்டால், தாயாக எம்மால் தாங்க இயலுமா! அவர்கள் சின்னதாக அடிபட்டாலும் எமக்குப் பெரிதாக வலிக்கும். சிந்தித்துப் பாருங்கள். இந்த மாதிரி பெண்களை ஒதுக்கும், ஒடுக்கும் நம்பிக்கைகளை உடைத்து வெளியே வரவேண்டாமா நாம்!

(நீளமாகத் தட்டியிருக்கிறேன். எழுத்துப் பிழைகளை நாளை வந்து திருத்துவேன். 'பதிலளி' தட்டாமலிருங்கள் சகோதரிகளே! :-) )

‍- இமா க்றிஸ்

நான் ரொம்ப குழப்பத்தில் இருந்தேன்.... என் அம்மா இதை சொல்லி என்னை ரொம்ப பயமுறுத்திடாங்க... இப்ப எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு

பெரியவங்கள மரியாதையோடு நடத்தனும் அவங்க பேச்சுக்கு மதிப்பளிக்கனும்னு நினைச்சா... இவங்க நம்மள ரொம்ப சோதிக்கிறங்க..

குழந்தையை வச்சு பயமுத்துறங்கப்பா...

நன்றி தோழிகளே

Change the way you look at women's success

//என் அம்மா இதை சொல்லி என்னை ரொம்ப பயமுறுத்திடாங்க.// அவங்க பயமுறுத்தல; தான் நம்புறதால பயப்படுறாங்க. நீங்க அவங்க பொண்ணு இல்லையா! அதனால் வரும் கரிசனம் கலந்த பயம்.

//பெரியவங்கள மரியாதையோடு நடத்தனும் அவங்க பேச்சுக்கு மதிப்பளிக்கனும்னு நினைச்சா.// கட்டாயம் மரியாதையோடுதான் நடத்தணும், அவங்க பேச்சுக்கு மதிப்பளிக்கவும் வேணும். சிந்திக்க வேண்டிய இடத்தில் சிந்தித்து மறுத்து அவங்களை மனம் வருந்த வைக்காமல் விளக்கிப் புரிய வைக்கலாம் இல்லையா! சொன்னால் புரிஞ்சுப்பாங்க.

//இவங்க நம்மள ரொம்ப சோதிக்கிறங்க.// ;)))))))) இதையே நாளை உங்க பொண்ணு உங்களைப் பற்றிச் சொல்லாத மாதிரி பார்த்துக்கங்க. ;)

//குழந்தையை வச்சு பயமுத்துறங்கப்பா.// இல்லை கண்ணா. அவங்க உங்க மேல இருக்கிற பாசத்தால் செய்யும் வேலை இது. பயமுறுத்தணும் என்கிற நோக்கத்தோட செய்யவில்லை. அவங்க சொல்ற எல்லாவற்றையும் தூக்கித் தூரப் போடாதீங்க. அவங்களை விட உங்கள் மேல் கரிசனம் உள்ளவர் வேறு யாரும் இருக்க முடியாது. வாழ்க்கை கற்றுக் கொடுத்த அனுபவங்கள் அதிகம் இருப்பதால், நிறைய நல்ல விடயங்கள் சொல்லிக் கொடுப்பாங்க.

‍- இமா க்றிஸ்

Hmm appadithan solvanga. papa mrng elunthathum thalaila thengai ennaiyai vetchi vidunga yarum papava pakadhathukku munnadiye.
Suppose avanga period appo namba papava 1st parthuta next period agama pregnant agitangana avanga vayirla irukkurathuu boy baby ha iruntha namba baby kozhu kozhu nu irkum. Suppose girl baby ha iruntha elachidum. Athanala solvanga intha theettu kozhanthaikku padama irukka room la thengai ennaiyai vetchikonga mrng Papa elunthathum oru viral oil la papavoda thalaila utchila vetchi vittutu veliya kondu vanga entha theettumea padathu.

I love my parents...

மேலும் சில பதிவுகள்