முதுகுத்தண்டு காச நோய்

தோழிகளுக்கு வணக்கம்... என் தகப்பனாருக்கு முதுகுத்தண்டில் காசநோய் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவர்கள் நூற்றில் இரண்டு பேருக்கு மட்டுமே முதுகுத்தண்டில் காச நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது மற்ற அனைவருக்கும் நுரையீரலில் மட்டுமே காச நோய் வரக்கூடும் என்று சொன்னார்.மேலும் நோயின் தாக்கம் குறைய 9 மாதங்கள் கால அவகாசம் ஆகும் என்று சொன்னார். மேலும் மாத்திரைகள் கொடுத்தனர் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதும் வலி குறையவில்லை ஒவ்வொரு நிமிடமும் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறார்.என்னை பெற்று வளர்த்த என் தகப்பன் ஒவ்வொரு நிமிடமும் மரண வேதனை பட்டுக் கொண்டிருக்கிறார் என்ன செய்வது என்றே தெரியவில்லை. நடக்கவோ உட்காரவோ அவர்களால் முடியாது எப்போதும் படுத்திருக்கிறார் இருந்தாலும் அவர்களுக்கு வேதனையாக இருக்கிறது என்ன செய்வதென்றே தெரியவில்லை மிகுந்த மன வேதனையோடு தான் இந்த பதிவை இங்கு பதிவிடுகிறேன் இந்த காசநோய் பற்றி தெரிந்தவர்கள் தகவல்களை தெரிவிக்கவும்..தயவு செய்து உதவவும்..

எனக்கும் இதைப் பற்றித் தெரியாது தன்யநந்தினி. இங்கு வரும் கேள்விகள் வழியாக‌ பல‌ விடயங்களைப் பற்றித் தேடிப் படித்து அறிகிறேன்.

கொடுக்கப்பட்ட‌ மாத்திரைகளுள் வலிநிவாரணிகள் இருக்கின்றன‌ அல்லவா! நீங்கள் பாக்கெட்டில் வாங்கியிருந்தால், கூட‌ இருக்கும் விபரம் உள்ள‌ தாளில் சில‌ விபரங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். மாத்திரைகள் உதவவில்லை என்று தோன்றினால், அவற்றை நிறுத்திவிடாமல் தொடர்ந்து எடுத்துக் கொண்டு மீண்டும் மருத்துவரது அபிப்பிராயத்தைக் கேட்கலாம். வேறு வலிநிவாரணி மாத்திரைகளை மாற்றிக் கொடுக்கக் கூடும்.

//நோயின் தாக்கம் குறைய 9 மாதங்கள் கால அவகாசம்// குறைந்தது ஒன்பது மாதங்களாவது சிகிச்சை வேண்டியிருக்கும் என்று தெரிகிறது. பெரும்பாலும் சிறுவர்களுக்கும் இளம்வயதினர்க்கும் வருவதாகச் சொல்கிறார்கள். உங்கள் தந்தைக்கு வயது அதிகம் என்பதால் நோயின் வீரியம் சற்று அதிகமாக‌ இருக்கலாம்; வேதனையும் அதிகமாக‌ இருக்கலாம். சிகிச்சை பலன் கொடுக்க ஆரம்பிப்பதும் எதிர்பார்ப்பதற்குச் சற்று அதிக‌ காலம் எடுக்கக் கூடும்.

//என் தகப்பன் ஒவ்வொரு நிமிடமும் மரண வேதனை பட்டுக் கொண்டிருக்கிறார்// புரிகிறது, ஆனால் அது 'மரண‌ வேதனை' அல்ல‌. சிகிச்சை பலனளிக்கும். காலம் எடுக்கும். பார்க்கும் அன்பு உள்ளங்களால் சகித்துக் கொள்ள‌ இயலாது தான். உங்களால் முடிந்தவரை அவரை மகிழ்ச்சியாக‌ வைத்துக் கொள்ளுங்கள். சுகமாவதற்கு முற்பட்ட‌ காலம், அப்பாவுக்கு மன‌ உழைச்சல் அதிகமாக‌ இருக்கும். உங்களுக்கும் இது சிரமமாம‌ காலம்தான். இருந்தாலும் நம்பிக்கை கொடுங்கள்; இதமாக‌ நடந்துகொள்ளுங்கள். உங்கள் உடல் & மன‌ ஆரோக்கியத்தைக் கவனிக்காது விட்டுவிட‌ வேண்டாம். நீங்கள் நன்றாக‌ இருந்தால்தான் அப்பாவைக் கவனிக்கலாம்.

//எப்போதும் படுத்திருக்கிறார்// இடைக்கிடை எழுந்து உட்கார்த்தி வைக்கலாமா? கொஞ்சம் கூட‌ நடக்க‌ இயலவில்லையா? இதைப் பற்றி மருத்துவர் என்ன‌ சொன்னார்? தொடர்ந்து படுக்கையிலிருந்து பழகினால் பிறகு குணமாகும் சமயம் மீண்டும் ஆரம்பத்திலிருந்து நடக்கப் பழகியாக‌ வேண்டியிருக்குமே! தொடர்ந்து படுக்கையில் இருக்கிறார் என்றால் படுக்கைப் புண் போட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முதுகில் வீக்கம், சிவந்திருப்பது இப்படி ஏதாவது மாற்றங்கள் புதிதாகத் தெரிந்தால் தாமதிக்காமல் மருத்துவரிடம் போங்கள். மாத்திரை முடிந்து போவதற்குக் காத்திராமல் அடுத்த‌ தொகுதி மாத்திரைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கேள்வி, பதில் தெரிந்தவர்கள் கண்ணில் படும் முன் முகப்பிலிருந்து மறைந்துவிடலாம். உடனே கிடைக்கும் பதில்... உங்களுக்குச் சற்று ஆறுதலைக் கொடுக்கும் என்று எனக்குத் தோன்றியதைச் சொல்லியிருக்கிறேன். உங்கள் தந்தைக்காகவும் உங்கள் குடும்பத்தாருக்காவும் என் பிரார்த்தனைகள். தைரியமாக‌ அப்பாவைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

மிகவும் நன்றி அம்மா... மாத்திரை உட்கொண்டாலும் வேதனை குறையாமல் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தோம் பிறகு மருத்துவமனையில் ஒரு மாத காலங்கள் இருந்தாலும் பிறகு வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து மறுபடியும் மருத்துவமனைக்கு சென்று இப்படிதான் வீட்டிற்கு மருத்துவமனைக்கு சென்று கொண்டு வந்திருக்கிறோம் காச நோய்க் கிருமியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கால அவகாசம் ஆகும் என்று சொன்னார் வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார் ஆனாலும் நான் திருமணமாகி வேறு ஊரில் வசித்து வருகிறேன் என் அப்பா சென்னையில் இருக்க நான் தற்போது சென்னைக்கும் எனது ஊருக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறேன் எனக்கு இரண்டு வயது குழந்தை இருக்கிறது என் குழந்தையை பார்த்தால் மிகவும் ஆனந்தமடைவார். என் அப்பாவிற்காக முன்பாக சென்னை வந்து விட்டு பிறகு மறுபடியும் தற்போது வந்து இருக்கிறேன் ஆனால் என் குழந்தையை மருத்துவமனையில் வைத்து பார்த்துக் கொள்ள முடியாது தகப்பனார் இப்போது மருத்துவமனையில் உள்ளார் என் குழந்தைக்கு கொண்டு செல்ல முடியவில்லை என் குழந்தைக்கு infection ஆகிய நான் ரொம்ப கஷ்டப்பட்டு என் குழந்தைக்கு காய்ச்சல் பயங்கரமாக வந்தது அதனால் தற்போதுசென்னையில் எங்கள் வீட்டில்தான் தங்கியிருக்கிறேன் என் தகப்பனாரும் என் தாயாரும் மருத்துவமனையில் இருக்கிறார் கவலையான சூழ்நிலையில் இருக்கேன் அதனால தான் இங்கு பதிவிட்டேன் உங்களுடைய வார்த்தைகள் ஆறுதலாக இருந்தது ரொம்ப நன்றி அம்மா.. யாரிடம் சொல்வது என்றே தெரியவில்லை அவ்வளவு வேதனையையும் வருத்தத்தோடு இருக்கிறேன் அம்மா... வலிநிவாரணி 5% சதவீதமாக தான் வலியை குறைக்கும் என்று மருத்துவர் கூறினார் எழுந்து நடக்கும் போதும் உட்காரும் போதும் முதுகுத் தண்டு பகுதி பயங்கரமாக வலி இருக்கிறது.. நுரையீரல் பகுதியில் இருந்தால் அவ்வளவு வேதனைகள் ஏற்படாது முதுகுப் பகுதி என்பதால் நடக்கும் பொழுது எழுந்திருக்கும் போதும் உட்காரும் பொழுது மிகவும் வலி அதிகமாக இருக்கும் என்று மருத்துவர் சொன்னார் அம்மா..

Enakum ithe polthan tb irunthathu anal muthugu thandil illai stomach la 2years niraya hospital parthu apparam kadasiyaga critical situation la than veru oru hospitala pathean. Avargal enaku operation mulamaga than sari seithargal.unga appaku operation mulamaga sari seiya mudiyuma endru kelungal.intha tb vanthal thanga mudiyatha naraga vedhanai than irukum.nan 1year itharkaga tablet eduthean vali konjam konjamga kurainthathu.chennai la appa irupathal neenga nalla hospital visarithu sari seiya mudiyuma endru parunga.
Seikiram appa kunamadaiya kadavulta vendikirean.

Sis nannum 3 hospital change panniten but no use pain late ah dhan kuraiyum nu solitanga.. but avanga pain la kasta paduratha parka mudiyala sis ninga enna type food aduthukitinga appa ku doctor non veg and green leaf veggies eduthuka sonanga sis.. appa ku surgery pana mudiyathu nu sonanga health condition and age prob so surgery risk dhan sis.. food type sollunga

ama age problem nala operation panna mattanga oru doubt irunthuchu.enaku 17years la intha operationpannanga.but enaku stomach la irunthathala liquid a than sapda sonnaga. Juice ithumari ethavuthu thida porul sapta rice kuda marupadi stomach pain varum.romba elachi pona mari ayitean.unga appaku nonveg sapda sonnagana kudunga.tb na maximum athan thara solluvanga.nalla healthy food nonveg la mutton kudukulamanu ketutu kudunga.tablet continues a saptete irunthale sari agirum.
Nan fulla liquid item apparam kanji athumari than saptean.operation pannathum konjam konjam nonveg saptean.
Tb ku maximum tablet and foods than help pannum.apparam kuda neengalo illa unga relative yaravuthu support a irunga.seikiram sari agum appaku kavala padathinga.

Ok sis. Epadiyavathu innum konja month poganum pola appo dhan konjamavathu pain kuraiyum nu nanaikiren sis.. mutton, egg, soup items, kuduka sonanga sis..

நீங்கள் மணமானவர் என்று ப்ரொஃபலில் பார்த்ததுமே குழந்தை இருக்கும், வேறு வீட்டிலிருப்பீர்கள் என்பதெல்லாம் ஊகித்தேன். அப்பாவுக்கு இருப்பது மற்றவர்களுக்குப் பரவாது என்று தெரிகிறது. அது ஒரு ஆறுதலான‌ விடயம். குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது பல்வேறு நோய்களுக்கு வழிதேடி வைக்கும். நல்லதல்ல‌. நீங்களும் போய் வந்ததும் குழந்தையைத் தூக்கும் முன் குளித்துத் துணி மாற்றிவிடுவது நல்லது.

//கால அவகாசம் ஆகும்// உண்மை. அதனால் அத்தனை காலத்திற்கும் உங்கள் குடும்பத்தைக் கொண்டு போகவும் உங்கள் ஆரோக்கியம் வீழ்ந்து விடாமலிருக்கவும் ஏற்றபடி ப்ளான் செய்துகொள்ளுங்கள். அம்மாவையும் பத்திரமாக‌ இருக்கச் சொல்லுங்கள்.

//வலிநிவாரணி 5% சதவீதமாக தான் வலியை குறைக்கும்// நானும் அப்படித்தான் நினைத்தேன். மருத்துவமனையில் இருப்பதால் அவர்கள் தொடர்ந்து கவனித்துக் கொள்வார்கள், அவர்கள் கையில் விட்டுவிடுங்கள். வேறு... வீட்டு மருந்து என்று எதையும் சேர்த்துக் கொடுக்க‌ முயற்சிக்க‌ வேண்டாம். இப்போது நீங்கள் இருக்கும் நிலையில், யாராவது மருந்து என்று எதையாவது சொன்னால் செய்துபார்க்கலாமே என்று தோன்றும். பிறகு மாத்திரைகள் பலனளிக்காமல் போய்விடலாம்.

‍- இமா க்றிஸ்

ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி அம்மா...

மேலும் சில பதிவுகள்