கடலைப் பருப்பு முறுக்கு

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலைப்பருப்பு - 2 கப்
பச்சரிசி - 1 கப்
எண்ணெய் - சுடுவதற்கு
மிளகாய் வற்றல் - 15
வெள்ளைப்பூண்டு - 5 பல்
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

கடலைப்பருப்பையும், அரிசியையும் ஒன்றாக சேர்த்து ஊறவைத்து கொள்ளவும்.
நன்றாக ஊறியதும் வற்றல், பூண்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து விழுதாக ஆட்டி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் முறுக்குக் குழலில் மாவை போட்டு பிழிந்து எடுக்கவும்.
காராபூந்தி போல கரண்டியில் தேய்த்தும் எடுக்கலாம்.


மேலும் சில குறிப்புகள்