தையற்பயிற்சி

நான் தையற்பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்னிடம் பயில வருபவர்கள் சான்றிதழ் கிடைக்குமா என்று கேட்கிறார்கள் இதைப்பற்றி விவரம் தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்

எனக்கு இதில் அனுபவம் இல்லை. இந்தியர்கள் யாராவது பதில் சொல்வதுதான் பொருத்தமாக‌ இருக்கும்.

நீங்கள் தொழிலை ரெஜிஸ்டர் செய்திருக்கிறீர்களா? சிறுதொழிற் பயிற்சி கொடுக்கும் யாரிடமாவது விசாரித்தால் தெளிவான‌ ஐடியா கிடைக்கும். இதற்கு 'பாடசாலை' என்கிற‌ ரீதியில் பதிவு செய்திருக்க‌ வேண்டும் என்று நினைக்கிறேன்.

பிறகு... உங்கள் பக்கமிருந்து சில‌ தயாராகுதல் வேலைகள் இருக்கும். சர்டிஃபிகேட் கொடுப்பதற்கு உங்களிடம் கற்க‌ வருபவர்களுக்கு என்னென்ன‌ கற்றுக் கொடுக்கிறீர்கள், எவ்வளவு காலப் பயிற்சி, 'வகுப்புகளில் கலந்துகொண்டார்' என்னும் சான்றிதழ் கொடுக்க‌ குறைந்தபட்சம் என்ன‌ தகுதி இருக்க‌ வேண்டும், பிறகு எதை வைத்து சிறப்புச் சான்றிதழ்கள் கொடுக்கப் போகிறீர்கள் என்பதையெல்லாம் வரையறுத்துக் கொள்ள‌ வேண்டும். ஒருவர் பயிற்சிக்கு வந்திருத்தாலும் அந்த‌ கோர்சுக்கான‌ இத்தனை வகுப்புகளில் கலந்து கொண்டிருந்தால் தான் 'பயிற்சி பெற்றார்' என்கிற‌ சான்றிதழ் கொடுக்க‌ முடியும். உங்கள் பாதுகாப்பும் பெயரும் முக்கியம். கற்கும் எல்லோராலும் சிறப்பாக‌ வேலையைக் கற்றுக் கொள்ள‌ முடியாது இல்லையா! சான்றிதழில், 'இன்னின்ன‌ விடயங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டது,' என்பதை அவற்றுக்கான‌ தகுதிகளோடு குறிப்பிடலாம். ஒவ்வொரு தகுதியையும் எப்படி முடிவு செய்யப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானம் செய்துகொள்ளுங்கள். எழுத்துப் பரீட்சை, செயல் முறைப் பரீட்சை... இரண்டுக்கும் என்னென்ன செய்ய‌ வைப்பது நல்லது என்பதை யோசித்து தயாராகிக் கொள்ளுங்கள். இப்படி நிர்ணயங்கள், பரீட்சித்தல் எதுவும் இல்லாமல் சான்றிதழ் கொடுப்பது உங்கள் பெயரைக் கெடுத்துவிடலாம். அறிந்தவர்கள் என்பதற்காக‌ நம்பிக்கையின் அடிப்படையில் உங்களிடம் கற்க‌ வராதவர்களுக்குச் சான்றிதழ் கொடுப்பது வேண்டவே வேண்டாம். சான்றிதழ் அச்சடிக்கும் முன் அமைப்பு என்ன‌ விதமாக‌ வரவேண்டும் என்பதை நன்கு யோசித்துக் கொள்ளுங்கள். பார்ப்பவர்களுக்கு நம்பிக்கை வர‌ வேண்டும் என்பது முக்கியம். நினைத்து நினைத்து மாற்ற‌ முடியாது. மற்றது... உங்களிடம் கற்பவர்கள் பற்றிய‌ தகவல்கள் எங்காவது கோர்வையாகப் பேணப்பட‌ வேண்டும். யாராவது உங்களைத் தொடர்பு கொண்டு ஒரு பெயரைக் குறிப்பிட்டு, இன்னார் உங்களிடம் பயிற்சி பெற்றாரா என்பதை விசாரிக்கும் போது தயங்காமல் தகவல் சொல்லத் தயாராக‌ இருக்க‌ வேண்டும்.

உங்களுக்கு சரியான‌ தகவல் கொடுக்கக் கூடியவர்கள் என‌ என் மனதில் சிலரது பெயர்கள் ஓடுகிறது. அவர்கள் இங்கு வந்து சில‌ காலம் ஆகிறது. இந்த‌ இழை அவர்கள் கண்ணில் பட்டால் வரக் கூடும். அது வரை காத்திராமல் கூகுளில் வீடியோக்கள் தெரிகின்றன‌. சற்று நேரம் ஒதுக்கி தேடிப் பாருங்கள். தையல் அல்லாமல் வேறு வகுப்புகள் என்றாலும் பரவாயில்லை, பயிற்சி கொடுத்து சான்றிதழ் கொடுக்கும் சிறு நிறுவனம் ஒன்றை நடத்தும் யாரிடமாவது நேரில் சந்தித்துப் பேசினால் பல‌ விடயங்களில் தெளிவு கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்