டேட் ஆஃப் பர்த் (Date of birth) சொல்ல‌ வாங்க‌

டியர் ஆல் :

உங்களோட‌ டேட் ஆஃப் பர்த் சொலுங்க‌ , வாழ்த்துகள் பகுதி பொலிவற்று இருக்கிறது\
\அத‌ நம்ம‌ தானே மெருகேத்தனும்

Enaku 16 05 1990 ...

Mine April 8 1991

Start pannina nengale sollalaye sis

Neenga Coimbatore ah, me too

Mine 17.07.1996

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

//டியர் ஆல் :

உங்களோட‌ டே டா பர்த் சொலுங்க‌ , வாழ்த்துகள் பகுதி பொலிவற்று இருக்கிறது\
\அத‌ நம்ம‌ தானே மெருகேத்தனும்//

தலைப்பும் இடுகையும்... தமிழிலும் இல்லாமல், ஆங்கிலமாகவும் இல்லாமல், தமிங்கிலமாகவும் இல்லாமல் பேச்சு வழக்கென்று கொள்ளவும் இயலாமல் இருக்கிறது. நாம் தானே மெருகேற்ற‌ வேண்டும், தமிழையும் தளத்தையும்!! டைப்போவாக‌ இருக்கும், நீங்களாகவே வந்து மாற்றிவிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். இன்று மூன்றாவது நாள். குறையெண்ணாமல் பிறந்த‌ தேதி சொல்ல‌ வாங்க‌ அல்லது டேட் ஆஃப் பர்த் சொல்ல‌ வாங்க‌ என்று மாற்றி விட முடியுமா?

முன்பு தினம்தினம் அறுசுவை உறுப்பினர்களில் அன்று பிறந்தநாள் கொண்டாடுபவர்களது பெயர்ப் பட்டியல் வெளியாகிக் கொண்டு இருந்தது. பிறகு ஏதோ ஒரு காரணத்திற்காக‌ அது வெளியாவது நின்றுவிட்டது. காரணம் இல்லாமல் அட்மின் நிறுத்தியிருக்க‌ மாட்டார். அதனால் என் பிறந்ததேதியைச் சொல்லவில்லை. மன்னிக்க‌ வேண்டும். :‍)

‍- இமா க்றிஸ்

//முன்பு தினம்தினம் அறுசுவை உறுப்பினர்களில் அன்று பிறந்தநாள் கொண்டாடுபவர்களது பெயர்ப் பட்டியல் வெளியாகிக் கொண்டு இருந்தது. பிறகு ஏதோ ஒரு காரணத்திற்காக‌ அது வெளியாவது நின்றுவிட்டது. காரணம் இல்லாமல் அட்மின் நிறுத்தியிருக்க‌ மாட்டார். //

காரணங்கள் இவைதான். :-)

பெயர்ப்பதிவின்போது உறுப்பினர்கள் கொடுக்கும் பிறந்த தேதியை கணக்கில் கொண்டு, ஒவ்வொரு நாளும் அந்த தேதியில் பிறந்தவர்கள் பட்டியல் தானாகவே வருமாறு முன்பு செய்திருந்தோம். நிறைய பேர் தங்களது சரியான பிறந்த தேதியை பெயர்ப்பதிவின் போது குறிப்பிடுவது இல்லை. பிறந்த தேதி கொடுப்பது கட்டாயம் அல்ல என்பதால் பலர் அந்த பெட்டியை நிரப்புவதும் இல்லை.

ஒருவர் பிறந்த தேதியை நிரப்பாவிடில், default ஆக எந்த தேதியில் அவர்கள் பெயர்ப்பதிவு செய்கின்றார்களோ அதை பிறந்த தினமாக எடுத்துக்கொள்ளும். இதனால் பிறந்த தினமாக இல்லாத நாளில் பலருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லும் நிலை உருவாயிற்று. உறுப்பினர்களும் அதற்கு மறுப்பு தெரிவித்து, இன்றைக்கு எனக்கு பிறந்த தினம் இல்லை என்று பதிவுகள் கொடுக்கத் தொடங்கினர்.

அடுத்த காரணம், இது கொஞ்சம் ப்ரைவசி சம்பந்தப்பட்ட விசயம். சிலர் தங்களது பிறந்த தினத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த விரும்பவில்லை. சிலர் மதம் சம்பந்தப்பட்ட காரணங்களால் தாங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்வது இல்லை என்றெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள்.

இந்த காரணங்களை எல்லாம் எடுத்துக்கொண்டுதான் அந்த பகுதியை நிறுத்திவிட்டோம்.

உறுப்பினர்கள் விரும்பினால் மீண்டும் அந்த பகுதியைக் கொண்டு வரலாம். பெயர்ப்பதிவின்போதே கூடுதலாக ஒரு கேள்வியை வைக்கலாம். "உங்களது பிறந்த தினத்தின் போது நீங்கள் வாழ்த்துக்கள் பெற விரும்புகின்றீர்களா? என்பது போன்ற ஒரு கேள்வியை வைத்து, அதற்கு ஒப்புதல் தெரிவிப்பவர்கள் பெயர்கள் மட்டும் பிறந்த தினப் பட்டியலில் வருமாறு வைக்கலாம்.

அதில் உள்ள ஒரு பிரச்சனை என்னவென்றால், ஏற்கனவே பெயர்ப்பதிவு செய்துள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது உறுப்பினர் பக்கத்தை திறந்து அதற்கு ஒப்புதலோ மறுப்போ அளிக்க வேண்டும். அப்படி செய்யாதபட்சத்தில் Default option "மறுப்பு" என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டி வரும்.

யோசித்து இது குறித்து ஏதேனும் செய்யலாம். :-)

நீங்களாகவே வந்து மாற்றிவிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். இன்று மூன்றாவது நாள். // அம்மா நா இன்று தான் பதிவை பார்வையிட‌ முடிந்தது , அதனால் தான் நீங்கள் கூறியவுடன் மாற்றவில்லை ,

முன்பு தினம்தினம் அறுசுவை உறுப்பினர்களில் அன்று பிறந்தநாள் கொண்டாடுபவர்களது பெயர்ப் பட்டியல் வெளியாகிக் கொண்டு இருந்தது. பிறகு ஏதோ ஒரு காரணத்திற்காக‌ அது வெளியாவது நின்றுவிட்டது// எனக்கு அதன் விவரம் தெரியாமல் செய்து விட்டேன் மன்னிக்கவும் ,,
. காரணம் இல்லாமல் அட்மின் நிறுத்தியிருக்க‌ மாட்டார் // உங்களூக்கு அட்மின் விளக்கமும் கொடுத்துவிட்டார்

அதனால் என் பிறந்ததேதியைச் சொல்லவில்லை. மன்னிக்க‌ வேண்டும். :‍) // மண்ணிப்பு தேவையில்லை அம்மா , அது அவரவர் விருப்பம் , சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் , நான் நினைத்தது தோழிகள் அனைவரும் குழந்தையின்மை மற்றும் பிற சூழ்நிலைகளால் உள்ளனர் , அவர்களின் கஷ்டம் கொஞ்சம் இது போன்ற பதிவுகளால் ஒரு சில‌ நிமிடம் சந்தோசம் கிடைக்கும் என்றுதான் அம்மா , . அதை நான் பிரேமா அவர்களின் குழந்தைக்கு வாழ்த்து சொல்லும் போது நினைத்தேன்
நீங்கள் பெரியவர்கள் நீங்கள் தான் நான் தவறாகா எதாவது செய்திருந்தால் மன்னிக்க‌ வேண்டும் , நீங்கள் மன்னிப்பு கேட்க‌ தேவை இல்லை அம்மா

ஆஹா! வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு எட்டிப் பார்த்திருக்கிறீர்கள். :‍)

//உறுப்பினர்களும் அதற்கு மறுப்பு தெரிவித்து, இன்றைக்கு எனக்கு பிறந்த தினம் இல்லை என்று பதிவுகள் கொடுக்கத் தொடங்கினர்.// :‍) செபா இணையத்தில் வலம் வந்தது இங்கு மட்டும்தான். அவர் இணையத்தைப் பற்றிப் பலதையும் கற்றதே இங்கிருந்துதான். எப்படியோ பெப்ரவரி 18 பிறந்தநாள் என்று பிழையாகப் பதிவு செய்து வைத்திருந்தார். மறுக்காமல் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்லிவிட்டு தொலைபேசியில் என்னை அழைத்துச் சொல்லிச் சிரிப்பார். பதில் சொன்னால் இழை மேலே வரும், தேதியைப் பாராமல் யாராவது மீண்டும் வாழ்த்துவார்கள் என்று சிலருக்குப் பதில் சொல்லாமல் விட்டிருந்தார்.

//யோசித்து இது குறித்து ஏதேனும் செய்யலாம். :-)// :‍) விரைவில் எதிர்பார்க்கிறோம்.

‍- இமா க்றிஸ்

திருத்தியதற்கு நன்றி. :‍)

நீங்க இந்தத் த்ரெட் ஆரம்பித்தது நல்லது. அட்மின் எட்டிப் பார்த்திருக்கிறாங்க. :‍)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்