அரட்டை வரிசை எண் 1003

அரட்டை இழைக்கான சிறப்பு விதிகள்.

1. அரட்டை இழைத் தொடங்க உறுப்பினர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. அவற்றை அறுசுவை நிர்வாகம் மட்டுமே இனித் தொடங்கும். உறுப்பினர்கள் அதில் கலந்து கொண்டு பதிவுகள் கொடுக்கலாம். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பதிவுகள் வந்ததும் அடுத்து புதிய இழை தொடங்கப்படும். அதையும் நாங்கள் மட்டுமே செய்வோம். உறுப்பினர்கள் ஆரம்பிக்கும் அரட்டை இழைகள் நீக்கப்படும்.

2. அரட்டையில் மதம், இனம் சார்ந்த பதிவுகள், ஆன்மிகம் பரப்பும் விசயங்கள் கூடாது.

3. தனித்தனி குழுக்களாக பிரிந்து உரையாடல் கூடாது. ஒருவரையொருவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி பதிவுகள் கொடுப்பது, மனம் வருந்தும்படி பதிவுகள் கொடுப்பது கூடாது.

4. அரட்டை என்பது சப்ஜெக்ட் எடுத்துக்கொண்டு உரையாடுவது இல்லையென்றாலும், உங்களது உரையாடல் சுவாரசியமான உரையாடல்களாக இருக்க வேண்டும். "அடுத்த வீட்டு அம்புஜம் ஆறு பவுன்ல செயின் வாங்கி இருக்காளாமே.. அம்புட்டு காசு எங்கிருந்து வந்துச்சு.." இப்படி எதாவது பேசுவது சப்ஜெக்ட் இல்லாத பேச்சாக இருந்தாலும் ஒரு சுவாரசியமானப் பேச்சு. படிக்கும் எல்லோருக்குமே அம்புஜம் பற்றின ஒரு ஆர்வம் வரும். இதுபோல் எதையாவது, எதைப் பற்றியாவது பேசுங்கள். அதுதான் அரட்டை. வெறுமனே, "ஹாய்" என்று மட்டும் ஒரு பதிவு. அடுத்து, "யாராவது இருக்கீங்களா" என்ற பதிவு. அடுத்து நான் உள்ளே வரலாமா என்று பதிவு. அடுத்து bye என்று ஒரு வார்த்தை போடுவதற்கு ஒரு பதிவு..!! Chat ல் உரையாடுவது போலான இந்த வகை உரையாடல்கள், பக்கம் பக்கமாக ஒற்றை வரி பதிவுகள் இவைகளைத் தவிர்க்கவும். சில இடங்களில் நூறு பதிவுகளைக் கடந்தும் ஒரு இடத்தில்கூட ஒருவரும் எதைப் பற்றியுமே பேசாமல், ஹாய், எப்படி இருக்கீங்க, யார் இருக்கீங்க என்றே இருந்திருக்கின்றது.. இதனைக் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது. யாராவது இருக்கீங்களா என்ற தேடல் பதிவுகள், நான் வந்துட்டேன் என்ற ஆஜர் பதிவுகள், வரலாமா என்று கேட்கும் அனுமதிப் பதிவுகள், வெறும் ஹாய் சொல்லும் மரியாதைப் பதிவுகள் இவற்றையெல்லாம் தவிர்க்கவும்.

5. பதிவுகள் கொடுக்கும்போது தலைப்பு என்று இருக்கும் பெட்டியில் தயவுசெய்து உங்கள் பதிவுக்கு பொருத்தமான தலைப்பு ஒன்று கொடுங்கள். யாரை நோக்கியாவது பதில் கொடுத்தீர்கள் என்றால் அவரது பெயரையாவது குறிப்பிடுங்கள். வெறும் வணக்கம், அஸ்லாமு அலைக்கும், ஹாய் இவற்றையெல்லாம் தலைப்புப் பெட்டியில் கொடுக்காதீர்கள். உங்கள் வணக்கத்தையும் மரியாதையையும் உள்ளே சப்ஜெக்ட் பெட்டியில் கொடுங்கள். தலைப்பு பெட்டியில் தயவுசெய்து கொடுக்காதீர்கள்.

6. யாராவது பிரச்சனைக்குரிய பதிவுகள் கொடுத்தால் அவற்றை உடனே அட்மினுக்கு தெரிவியுங்கள். நீங்களும் பதிலுக்கு அங்கே பிரச்சனைகள் செய்து, பிறகு பிரச்சனை முற்றிய பின்பு அட்மினைத் தொடர்புகொண்டால் எங்களால் எந்த விதத்திலும் உதவ இயலாது. யாரேனும் பிரச்சனையைத் தொடங்கினால் மற்றவர்கள் அமைதி காத்து எங்களுக்கு தெரிவிக்கவும். நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றோம்.

7. அறுசுவையின் பொதுவான மற்ற விதிகள் இதற்கும் பொருந்தும்.

(காலப் போக்கில் இந்த விதிகளில் மாற்றங்கள் வரலாம். )

மா உங்களுக்கு நன்றி !!

- பிரேமா

என் அப்பா குடும்பத்தில் அனைவருக்கும் 30வயதில் முடி நரைத்து விடுகிறது.. நான் என் அத்தை மாதிரி தான் இருப்பேன்(அப்பாவின் தங்கை)..
எனக்கும் விரைவில் நரைத்து விடுமோ!!!..என்று பயமாக உள்ளது...

மரபியல் படி நரைக்குமா??நரைக்காதா?? எவ்வளவு வாய்ப்பு இருக்கிறது...
என் அம்மாவிற்கு நரைமுடி இல்லை..என் அப்பாவிற்கு அனைத்தும் வெள்ளை முடிதான்..

நீண்ட நாள் சந்தேகம்..
பனங்கற்கண்டு தெரியும்..
கருப்பட்டி பற்றியும் தெரியும்..

அச்சு வெல்லம்(கோபுர வடிவம்), மண்ட வெல்லம்(உருண்டையாக இருக்கும்) என்று நாங்கள் இரண்டு வெல்லம் பற்றி சொல்லுவோம்..

பனைவெல்லம் இதில் எது?பனைவெல்லம் சேர்த்து குடியுங்கள் என்று நிறைய பதிவுகளில் பார்த்து உள்ளேன்..

இவற்றுள் எது பனைவெல்லம் என்று விளக்கம் தெரிந்தால் நன்றாக இருக்கும்..

அரட்டைக்கு நல்ல தலைப்பு பிடிச்சிருக்கீங்க இந்து. ;))

//எனக்கும் விரைவில் நரைத்து விடுமோ!// நரைக்கலாம், நரைக்காமலும் போகலாம்.

உங்கள் பெற்றோர் போலவே, என் அப்பாவுக்கு முப்பதுகளில் நரை.எனக்கு அவரைக் கிழவராகத் தான் நினைவு இருக்கிறது. ;) தலை பஞ்சு போல இருக்கும். செபா... 81+ மரணிக்கும் போது. அப்போதும் கருகரு முடி. எத்தனையோ பேர் டை பூசுறதாக நினைச்சிருக்காங்க. தம்பிக்கு 18 வயது அளவில் சின்னதாக‌ ஒரு கோடு இருந்தது. பிறகு காணோம். எனக்கு முப்பதில் ஒரு நாணயத்தின் அளவு வட்டம் உச்சியில் ஒன்றும் பிடரியில் ஒன்றும் இருந்தது. இப்போதும் அவ்வளவுதான் இருக்கிறது. கூடவில்லை. (என் உயரத்திற்கு உச்சி எல்லோருக்கும் ஈஸியாத் தெரிஞ்சுருது. ;( அதனால் முக்கியமான சர்ந்தர்ப்பங்களுக்கு மட்டும் கலர் அடிப்பேன்.) என் பிள்ளைகளுக்கு இன்னும் நரை இல்லை.

//மரபியல் படி நரைக்குமா?? நரைக்காதா??// 'மரபியல் படி' நரைக்கும். ;) எவ்வளவு வாய்ப்பு// அது உங்கள் மரபியல் அணுக்கள் எப்படிக் கலந்து இருக்கு என்கிறதைப் பொறுத்தது தானே!

//விரைவில் நரைத்து விடுமோ!!!..என்று பயமாக உள்ளது.// ஹ்ம்! இதுக்கெல்லாம் பயப்பிடலாமா! ஒரு மாட்டைப் பிடிச்சு நக்க விட்டால் நிமிஷத்துல காணாமல் போய்ரும். இல்லாட்டா... அறுசுவைல இன்னும் நல்ல மருத்துவம் இருக்கு. தேடிப் பாருங்க. ;)

‍- இமா க்றிஸ்

இந்த டாபிக் எனக்கு அலர்ஜி. ;) நீங்க சீனியைச் சர்க்கரை என்பீங்க. சர்க்கரையை வெல்லம் என்பீங்க. ஒவ்வொரு ஊர்ல ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

எங்கள் பக்கம்.. பனங்கற்கண்டு... கற்கண்டு போல ப்ரவ்ண் கலர்ல இருக்கும். சர்க்கரை... கொஞ்சம் களி போல இருக்கும். பனங்குட்டான்... பனை ஓலையில் கூடு போல் செய்து ஊற்றி இறுக விட்டிருப்பார்கள். எல்லாமே யம்ம்ம்!

இங்கு palm sugar என்று விற்கிறார்கள். அது மினுக்கமாக‌ இராது. பொடியாக‌, நிறத்திலும் கூட‌ மெல்லிய‌ மண் போல‌ இருக்கும். வாசனை தூக்கலாக‌ இருக்கும். இதற்கு என்ன‌ பெயர்! பனஞ்சீனி!! இதுதான் நீங்கள் சொல்லும் பனைவெல்லமோ!

‍- இமா க்றிஸ்

இமா அம்மா சொல்ற பனங்குட்டான் தான் பனை வெல்லம்

ஆஹா! அதுதானா ராஜி!
சரி வாங்கி வைச்சுட்டு கூப்பிடுங்க‌ இந்து. நான் வந்து சொல்றேன்.

நிறைய‌ வேலையை வைச்சுட்டு இங்க‌ டீ ஆத்துறேன். அடீ படப் போறேன். ;) டாட்டா பைபை!

‍- இமா க்றிஸ்

பிரேமா!! செய்யுற‌ வேலை எல்லாம் செய்துட்டு... இருக்கிற‌ த்ரெட்ல‌ அரட்டை அடிக்கலாமா கூடாதாவா! :‍)

முன்னால‌ எல்லாம் நான் அரட்டை த்ரெட் பக்கம் கை காட்டி விடுவேன். உடனே எல்லோரும் நல்ல‌ பிள்ளைகளா அமிதியாகிருவீங்க‌. அட்மின் புது த்ரெட் ஆரம்பிச்சதும் மெதுவே எல்லோரும் வர‌ ஆரம்பிச்சு இருக்கிறீங்க‌. சந்தோஷம். :‍)

‍- இமா க்றிஸ்

மாட்டைப் பிடிச்சு நக்க விட்டால்.. அப்படினா என்ன அம்மா.. கேள்வி படாத தகவலாக இருக்கிறதே!! அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது..

உங்கள் அன்னையை எப்படி நேரில் அழைப்பீர்கள்?.

பனங்கற்கண்டுதான் பனைவெல்லமா!!, புரிந்து விட்டது..
நாங்களும் சர்க்கரையை சீனி என்று தான் அழைப்போம்..

வெல்லத்தில் இன்னொன்று பாகு வெல்லம் வேறு உள்ளது.. மறந்து போயிற்று..

மேலும் சில பதிவுகள்