
தேதி: September 28, 2018
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 25 நிமிடங்கள்
மொத்த நேரம்: 45 நிமிடங்கள்
தேவையனவை
சிறுபருப்பு - 1 கிலோ
இட்லி அரிசி - 100 கிராம்
தேங்காய் - 1
வெல்லம் - 750 கிராம்
எள் - 2 ஸ்பூன்
ஏலம் - 1 ஸ்பூன்
முந்திரிபருப்பு - 50 கிராம்
மேல்மாவுக்கு
கோதுமை மாவு - 100 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
பொரிக்க எண்ணெய்
சிறுபருப்பு, இட்லி அரிசியை வறுத்து பரபர என புட்டுக்கு அரைப்பது போல அரைத்து பொடி செய்யவும்.

ஏலக்காயை கொஞ்சம் சர்க்கரை சேர்த்து அரைத்து மாவில் சேர்க்கவும். எள் வறுத்து போடவும். தேங்காய் வறுத்து மாவில் கொட்டவும். முந்திரிபருப்பை வறுத்து நொறுக்கி மாவில் கலக்கவும்.

வெல்லத்தை நுணுக்கி பாகு காய்த்து, மாவில் விட்டுக் கிளறவும்.

மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

கோதுமை, அரிசி மாவு, மஞ்சள் பொடி, உப்பு இவற்றை எடுத்து நீர் விட்டு தோசை மாவு பக்குவத்தில் கரைக்கவும்.

உருண்டைகளை மாவில் அமிழ்த்தி, மூன்று மூன்றாக சேர்த்து எடுக்கவும்.

எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

இட்லி அரிசி சேர்ப்பதால் மாவு பொலபொல என சாப்பிட நன்றாக இருக்கும்.
Comments
Niki
நிகி இன்னும் நிறைய நிறைய ரெசிபி அனுப்புங்க. சூப்பர்
Be simple be sample
நிகி
சூப்பரா இருக்கு நிகி பார்க்க சுழியம் போல இருக்கு
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
நிகி
நிகி சூப்பா் ஸ்னாக்ஸ் ஐட்டம்,, நிச்சயம் செய்து பாா்த்து சொல்கிறேன்..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ரேவா
கட்டாயம் அனுப்பிடுவோம்
என்ன தமிழ் டைப்பிங் எங்கேனு கொஞ்சம் தேடி எடுத்து கத்துக்கனும்
கற்றுக் கொள்வதே வாழ்க்கை
ஜமாய்ச்சிடலாம்
சுவா
சாப்பிட சுவையாக இருக்கும்.
சிறுபயறு உடலுக்கு மிகவும் நல்லது
வெல்லமும் கூடவே இருக்கு
செய்து பாருங்க சுவா
ரேவதி
அவசியம் செய்து பார்த்து சொல்லுங்கள் ரேவதி
தேங்காய் வறுத்து சேர்ப்பதால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
ஆரோக்கியமான ரெசிபி
நிகி
அரிசி சேர்த்தது புதுசு. பார்க்க சூப்பரா இருக்கு. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
முந்திரி கொத்து
இட்லி அரிசி சேர்ப்பது வித்தியாசமா இருக்கு.
ஒரேயொரு கொத்து மட்டும் பார்சல் ப்ளீஸ்! :-)
- இமா க்றிஸ்