ஆந்திரா சிக்கன் ஃப்ரை

ஆந்திரா சிக்கன் ஃப்ரை

தேதி: September 28, 2018

பரிமாறும் அளவு: 5 நபர்கள்

ஆயத்த நேரம்: 1 மணி நேரம்

சமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்

மொத்த நேரம்: 1 மணி 15 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

சிக்கன் - 1 கிலோ
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 5
கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை

சிக்கனுடன் ஊற வைக்க :
பெரிய வெங்காய விழுது - 1/4 கப்
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
உப்பு


 

சிக்கனுடன் ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
சிக்கன் ஊற வைத்தல்
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும் வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
தாளித்தல்
வெங்காயம் வதங்கியதும் ஊற வைத்த சிக்கனை சேர்த்து பிரட்டி விடவும்.
சிக்கனை பிரட்டல்
பாத்திரத்தை மூடி வேக வைக்கவும். சிக்கன் வேக அதிலிருக்கும் தண்ணீரே போதுமானது. இடையில் திறந்து கிளறி விடவும்.
சிக்கனை வேக வைத்தல்
சிக்கன் நன்றாக வெந்து தண்ணீர் வற்றி வந்ததும் மேலே கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான ஆந்திரா சிக்கன் ஃப்ரை தயார்.
ஆந்திரா சிக்கன் ஃப்ரை


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அபி பார்க்கவே நாவூறுது புரட்டாசி முடியட்டும் செஞ்சுடுவோம்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அபி இது புட்டாசி மாதம் சாமி கண்ணை குத்தும்.. இருந்தாலும் பாா்க்காமல் இருக்க முடியவில்லை.. புட்டாசி முடிந்தவுடன் முயற்சி செய்து பாா்க்கிறேன்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சிக்கன் ப்ரை சூப்பர். பார்த்தாலே சுவை புரியுது

சீக்கிரம் ட்ரை பண்ணிபார்த்து சொல்லுங்க..தேங்க்ஸ்கா

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

ஹா ஹா எனக்கு எல்லாம் சாமி கண்ணு குத்த மாட்டார்..லீவு விடாம சாப்பிடுவேன்..நன்றிங்க

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

தேங்க்ஸ்கா

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

//கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைக்கவும்.// ஓ! கொத்துமல்லித் தழை தூவினா... அணைக்கும் போது அடுப்பு சுடாதா! ஓகே!
நான் சைவம். வேற ஏதாவது சமையலுக்கு மல்லித்தழை தூவி அணைச்சுப் பார்க்கிறேன். ஒரு வேளை எரிஞ்சு போய்ட்டா... ஆவியா வந்து அபி வீட்டைச் சுத்துவேன். ;)

‍- இமா க்றிஸ்