
தேதி: September 29, 2018
பரிமாறும் அளவு: 5 நபர்கள்
ஆயத்த நேரம்: 20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 40 நிமிடங்கள்
மொத்த நேரம்: 1 மணி நேரம்
வஞ்சிரம் மீன் 3/4 கிலோ
பாசுமதி அரிசி 3 கப்
வெங்காயம் 4
தேங்காய்பால் 1/2 கப்
தயிர் 350 கிராம்
எண்ணெய் 3 ஸ்பூன்
நெய் 1/4 கப்
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
பிரியாணி மசாலா 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் விழுது 1 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 2 ஸ்பூன்
எலுமிச்சை 1
உப்பு
புதினா சிறிது
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு தலா 2
மீன் துண்டுகளைக் கழுவி 1 ஸ்பூன் மிளகாய்தூள், உப்பு சேர்த்து பிரட்டி லேசாக எண்ணெயில் ஷால்லோ ஃபிரை செய்து எடுக்கவும். மெலிதாக நறுக்கிய வெங்காயத்தைப் பொரித்து எடுக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், உப்பு, பிரியாணி மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, பொரித்த வெங்காயம், எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

அத்துடன் தயிரையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

அதில் மீன் துண்டுகளைச் சேர்த்து கலந்து நெய் 2 ஸ்பூன், புதினா சிறிது கலந்து 1 மணிநேரம் ஊற விடவும்.

பாத்திரத்தில் உலை நீர் வைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, பிரிஞ்சு இலை, புதினா சிறிது, உப்பு சிறிது, எண்ணெய் சிறிது விட்டு கொதித்ததும் அரிசியை சேர்த்து கொதிவந்த பின்னர் 3 நிமிடத்தில் வடிக்கவும்.

பிரியாணி பாத்திரத்தில் நெய் விட்டு ஊற வைத்த மீன் கலவையை வைக்கவும். தேங்காய்பால் சேர்க்கவும்.

அதன் மேல் சாதத்தை பரப்பி விடவும். மீதி பொரித்த வெங்காயம், புதினா, கரைத்த குங்கமப்பூ அல்லது ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கேசரி கலரை கரைத்து லேசாக தெளித்து விடவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைக்கவும். 10 நிமிடம் முழுத் தீயிலும் அடுத்த 10 நிமிடம் சிம்மிலும் வைத்து இறக்கவும்.

தம் அடங்கியதும் திறக்கவும். சுவையான ஹைதராபாத் மீன் தம் பிரியாணி ரெடி.

Comments
அட்மின்
குறிப்பை. வெளியிட்ட. அட்மின் அண்ணாவிற்கு நன்றி.
Be simple be sample
reva
reva puratasi athuvuma oru non veg ah irukinga.. naanga ellam pavam.. puratasi mudiyathu nichayam try pannuven.. parkave colorful la iruku..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ரேவ்ஸ்
புரட்டாசியும் அதுவுமா இப்படி பன்றீங்களேம்மா..... ப்ரசண்டேசன் சூப்பர் ரேவ்ஸ்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ரேவ்
புரட்டாசி முடிஞ்சதும் கட்டாயம் செய்து பாருங்க. சிக்கனில் இன்னும் சூப்பரா இருக்கும் ;) . தான்க்யூ
Be simple be sample
சுவா
இது புரட்டாசிக்கு முன்ன செய்தது. என்னம்மா இப்படி பண்றீங்களே மா. ;). தான்க்யூ
Be simple be sample
வஞ்சிரம் மீன்!!
மீன் சாப்பிட மாட்டேன். ஆனாலும் தெரிந்துகொள்ள ஆவல். வஞ்சிரம் மீனுக்கு வேறு பெயர் சொல்லுங்களேன்.
- இமா க்றிஸ்
வஞ்சிரம் மீன்
Seer fish - வஞ்சிரம் மீன்
தமிழ்ல வேற பெயர் இருக்கிற மாதிரி தெரியல.
வஞ்சிரம் மீன்
இமாம்மா 'நெய் மீன்' ' கிங் பிஷ்' சொல்லுவாங்க
Be simple be sample