
தேதி: September 30, 2018
பரிமாறும் அளவு: 5 நபர்கள்
ஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
மொத்த நேரம்: 10 நிமிடங்கள்
காய்ந்த மிளகாய் - 10
பூண்டு பல் - 3
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
தேவையானப் பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.

சுவையான காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி தயார். இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

Comments
அபி
நாவூறுது :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
abi
appadi rendu idly vachingana super irukum.. parkave sapidanum pola iruku..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
மிளகாய் சட்னி
கடைசிப் படம் அட்டகாசமா இருக்கு அபி.
இங்க பச்சை பூண்டு சேர்த்த சட்னி விலையாக மாட்டேன் என்குது. ;( தனியே இருக்கும் ஓர் நாள் பார்த்துத் தான் செய்து சாப்பிட வேண்டும்.
- இமா க்றிஸ்