
தேதி: October 1, 2018
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்
மொத்த நேரம்: 25 நிமிடங்கள்
3/4 கப் ரவை
3/4 கப் சீனி
2 மேசைக்கரண்டி நெய்
10 முந்திரி
10 திராட்சை
10 ஏலக்காய்
ஒரு சிட்டிகை கலர் பவுடர்
ஒரு சிட்டிகை உப்பு
வாணலியில் நெய் ஊற்றி ஏலக்காயை போட்டு வறுக்கவும். சீனியுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் மேலும் சிறிது நெய் ஊற்றி ரவையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொத்திக்க விடவும். கொதித்ததும் கலர் பவுடர், கால் தேக்கரண்டி ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.

அதில் ரவையை சிறிது சிறிதாக சேர்க்கவும். கட்டி விழாமல் கிளறி விட்டு வேக விடவும்.

ரவை வெந்ததும் சீனியை சேர்த்து கிளறவும்.

மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து கேசரியில் சேர்த்து கிளறி இறக்கவும்.

Comments
அண்ணி
கலா்ஃபுல் ரெசிபி அண்ணி... சூப்பா்..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
செண்பகா
கலர்ஃபுல் ரெசிபி கண்ணை பறிக்குது.
எனக்கு பிடிச்ச கேசரி .
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ரேவதி
நன்றி ரேவதி
சுவர்ணா
எனக்கும் பிடிக்கும்..நன்றி சுவர்ணா
Paakave romba yummyaa iruku
Paakave romba yummyaa iruku
Nice recipe
Senbaga
கலர்ஃபுல் கேசரி. யம்மி
Be simple be sample
சாபிராசுஹிப்
மன்னிக்கவும் இப்போது தான் இந்த பதிவை பார்த்தேன் மிக்க நன்றி.
ரேவதி
ரொம்ப நன்றி பா...
செண்பகா
சூ...ப்பர் குறிப்பும் படங்களும். இன்று முதல் வாயைக் கட்டணும் என்று நினைச்சுட்டு இருந்தேன். படத்தைப் பார்க்க ஏக்கமா இருக்கு. :-)
- இமா க்றிஸ்