ஓரம்போ ஓரம்போ பார்ட் 2

இந்த போஸ்ட்க்கு போறதுக்கு முன்னாடி ஒரு பிளாஸ்பேக் இருக்கு..

http://www.arusuvai.com/tamil/node/31853
சொய்...................... அட பிளாஷ்பேக் ஓவர் ப்பா. போய் படிச்சுட்டு வந்தாச்சா. இப்ப இங்க வாங்க

முதன்முதலில் ஒரு வாரம் சைக்கிள் ஓட்ட கத்துகிட்டதும் திரும்ப தொடரவே இல்ல. அப்பறம் ரொம்ப நாள் கழிச்சு என் பையனும், எதிர் வீட்டு பொண்ணும் இந்த வருஷம் புது சைக்கிள் வாங்கினாங்க..
சரி புது சைக்கிள் வரவே முயற்சி செய்தா சுத்தமா ஓட்டவே வரல :( . இருந்தாலும் விடாமுயற்சியா இரண்டு நாள் ஓட்டினேன். அவ்வளவுதான்( அதுக்கு மேல இந்த பசங்க எனக்கு ஓட்ட தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க). சைக்கிள் பஞ்சர் ஆகிடும்ன்னு பொசுக்குந்னு சொல்லிடுச்சுங்களே :'( . முன்பு கத்துகிட்டதும் இப்படி சொல்லிதான் ஓட்டவே விடல.

நேற்று வண்டலூர் உயிரியல் பூங்கா போனோம். காலைலையே தான் கிளம்பிபோனோம் ஆனால் அவ்வளவு கூட்டம். அடிக்கற வெயிலுக்கு நடக்கறத நினைச்சா அப்பவே கண்ணை கட்டிடுச்சு. சரி சைக்கிள் ரெய்டில் போய் சுற்றி பார்த்துடுவோம் அப்படின்னு போய் லைன்ல நின்னா அது அனுமார் வால் போல் அவ்வளவு நீளம்ம்ம்ம்ம்ம். 2 மணிநேரம் காத்திருப்புக்கு பின் சைக்கிள் கைக்கு வந்தது. எப்படியும் நமக்கு சரியா ஓட்ட வரலனா பசங்ககிட்ட கொடுத்துட்டு பொடிநடையா நடைய கட்டிடுவோம்ன்னு நினைச்சேன்.

அப்பறம் தட்டுதடுமாறி யார் மேலேயும் மோதாம எப்படியோ ஓட்ட ஆரம்பிச்சுட்டேன்.. வெற்றிகரமாக சைக்கிள் பயணம் முன்றுமணிநேரம் முடிஞ்சவரைக்கும் ஓட்டி சைக்கிளை பத்திரமாக ஒப்படைச்சாச்சு. நீண்ட நாள் ஆசையும் நிறைவேறியது..

சரி ஸ்கூட்டி ஓட்ட கத்துகிட்டிங்களா கேட்கறீங்களா. ஓட்டுவேன் ஆனா எதிர்க்க யாரும் வரப்படாது ;). யார் என்கூட டபுள்ஸ் வர ரெடியா இருக்கீங்க. :))))

குறிப்பு: மூவில்லாம் பார்ட் 2, 3 நு போறாங்க. நாம ஒரு போஸ்ட்க்கு பார்ட் 2 போடகூடாதான்னு தான் இந்த போஸ்ட். தொடரும் பார்ட் 3 :))

Average: 5 (3 votes)

Comments

வண்டலூர் ஜூ வுக்கு வந்தவங்க, பக்கத்திலேயே இருக்கிற எங்க வீட்டுக்கும் வந்து இருக்கலாமே..

நானும் நினைச்சேன். இங்கதானே அண்ணா வீடு சொன்னாங்கன்னு. பசி நேரம் அப்பறம் அண்ணி பசங்க எல்லாரும் வந்தோமா. எங்க பயந்துட போறீங்க மொத்தமா பார்த்துந்னு போன் பண்ணல ;) . அதுவும் இல்லமா ஜூவில் சுற்றினதால் எல்லார் முகமும் புலி அறைந்த மாதிரியே இருந்தது. ரொம்ப பீதிய கிளப்ப வேண்டாம்ம்னு தான் சொல்லலை.

Be simple be sample

சேம் பின்ச். நானும் சைக்கிள் ஓட்ட கத்துகிட்டதோட சரி. நேரா வைக்கோல் போருக்குள்ள சைக்கிள விட்டு விழுந்ததோட குட்பை சொல்லிட்டேன்

நீங்க எதிர்ல யாரும் வரலேன்னா ஸ்கூட்டி ஓட்டுவீங்க. நான் ஸ்கூட்டியே இல்லாமல் ஸ்கூட்டி ஓட்டுவேன்... கனவுல :)

வண்டலூர்ல எல்லாரும் சௌக்கியமா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வண்டலூர் சைக்கிள் பயணம் அருமை :) நானெல்லாம் கனவுல காரே ஓட்டுவேனாக்கும் ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

என் இனமடா நீங்க. :) பெரிய ஆளுப்பா நீங்க ஸ்கூட்டியே இல்லமா ஓட்டறதுல. போற இடம்க்கு கரெக்டா போய்டுவிங்க்ளா. ஜூவில் அனைவரும் நலம்

Be simple be sample

சுவா நீங்க கவியயையும் மிஞ்சிட்டிங்க. ;) .அவங்க ஸ்கூட்டி நீங்க கார். அண்ணா வை கத்து தர சொல்லுங்க நிஜத்தில் ;)

Be simple be sample

அன்பு ரேவதி,

ஒரு விஷயம் சொல்லாம விட்டுட்டீங்களே, ‘ரெக்க கட்டி பறக்குதய்யா அண்ணாமல சைக்கிளு’ அப்படின்னு டபிள்ஸ் போனீங்களாமே, நம்பத் தகுந்த வட்டாரத்துல இருந்து தகவல்.

(சும்மா போட்டு வாங்குவோமே) :):)

அன்புடன்

சீதாலஷ்மி

ஆஹா. நல்லா பாட்டு மிஸ் பண்ணிட்டேனே. என்னை நம்பி ஒரு புள்ளையும் டபுள்ஸ் வரமாட்றாங்க சீதாம்மா :)

Be simple be sample

ஆஹா! பக்கத்துல ரெண்டு பேர் வீடு இருக்கா! ரெண்டு வருஷம் கழிச்சு வருவேன். ரொம்ப ரசிச்ச இடம் அது. திரும்பப் போகணும். இப்போ தங்குறதுக்கு அருகிலேயே இடம் இருக்கு. டெய்லி மிருகக்காட்சிச்சாலை (என்னால 'ஜூ' என்று சொல்ல முடியல.) விசிட் அடிக்கலாம். :-)

அங்கு சைக்கிளில் சவாரி செய்தது ஒரு சுவாரசியமான அனுபவம். ;-) நினைவுபடுத்தியதற்கு நன்றி ரேவதி.

‍- இமா க்றிஸ்