" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா ? "

புறாக்களின் சத்தங்கள் காதில் ஒலிக்க , தைல இலைகளின் வாசைனை மூக்கை உரச பனிப்போர்வைக்குள் ஊட்டி மக்கள் உறங்கும் ஓர் அழகான இளங்காலை நேரம் . ஆர்மி உடையணிந்த சிப்பாய்கள் தம் கடமைகளை செய்துகொண்டிருக்க நான் எனது நடைப்பயிற்சியில் இருந்த நேரம் . " ஜன கன மன அதி நாயக ஜெயகே..." ஒரு நிமிடம் யாரும் பதட்டப்படாதீங்க . இது என் செல்ஃபோன்ல வச்சிருக்க ரிங்டோன் .
உங்கள மாதிரியே இங்கயும் எல்லாரும் அவங்க செய்யற வேலைய விட்டுட்டு நின்னுட்டாங்க ( தேச பக்தியுள்ள சிப்பாய்கள் ) மைண்டு வாய்ஸ் கேட்டுடுச்சா ? அட விசயத்துக்கு வாம்மான்னு நீங்க மனசுக்குள்ள சொல்றது எனக்கு புருஞ்சிடுச்சு . ஆமாங்க எனக்கு ஃபோன் வந்துச்சு . கொஞ்ச நேரம் நான் ஃபோனில் பேசும் உரையாடல் யாருக்கும் புரியாதுங்க( தமிழ்லதான் ). அது புரிய அடைப்புக்குள்ள யார் பேசுரதுன்னு குறிப்பிடுறேன் சரியா ?

ஹலோ நான் ரேணு பேசறேன் .
நானும் ரேணு தா பேசறங்க .
ஹே ரேணு நான் திருச்சி அறுசுவை ரேணு பேசறேன் பா .
வெளில இருந்த பனிப்போர்வை இப்ப என் மனதினுள்ளும்...
அட ரேணு சொல்லுங்க எப்படி இருக்கீங்க ? எல்லாரும் நலமா ? (இது நான்)
ஆமா ரேணு இங்க எல்லாரும் நல்லா இருக்கோம். அங்க எல்லாரும் நலமா ரேணு? ( என்ன மக்களே எதுவும் புரியலையா? கொஞ்ச நேரம் எங்களுகே அப்படிதான் இருந்தது . இரண்டு ரேணுவும் பேசிட்டு இருக்கோம் )

ரேணு நாங்க ஊட்டி வந்திருக்கும் . (இது திருச்சி ரேணு)
என்ன? எப்போ? எனக்குள் பல கேள்விகள் , சந்தோசங்கள் .
ரேணு சும்மா விளையாடலையே ? (இது நான்)
இல்லை ரேணு நிஜமா நாங்க இங்கதா ரூம் எடுத்து தங்கி இருக்கோம் (இது திருச்சி ரேணு) . அப்படியா ஏன் முன்னாடியே சொல்லலை இங்கயே வந்திருக்கலாம்ல ? ( இது நான் )
திடீர்னு முடிவு பன்னினதுப்பா, அதுவும் நாம பார்த்துக்க முடியுமான்னு தெரியலை . ( திருச்சி ரேணு ) .
சரி விடுங்க என்ன திட்டம்? நாங்க என்னமோ பழைய படவில்லன் கணக்கா ப்ளேன் போடுறோம், எதுக்கா ?
நாங்க ரெண்டுபேரும் சந்திக்கதாங்க . எங்க அறிவுக்கு எட்டிய விதங்களில் எல்லாம் யோசித்து முடிவில் இரு குடும்பங்களும் சந்திக்கலாம்னு முடிவெடுத்தோம் ( நாங்கதான் முடிவு செய்தோம் ). எங்கள் கணவர்களிடம் சொல்லி அவங்க நேரத்தை எப்படி சமாளித்து நாங்க சந்திப்பது என்கிற கேள்வி எங்களிடம் பெரியதாகவே இருந்தது.

Average: 5 (2 votes)

Comments

இரண்டு ரேணுவும் ஒரு செகண்ட் குழப்பிட்டிங்க. சீக்கிரம் மீட் பண்ணுங்க. மறக்காம உங்க போன் நம்பர் கொடுங்க. ஒரு வேளை நான் ஊட்டி வந்தா முன்னயே போன் பண்ணி உங்க வீட்டுல வந்து நின்னுடறேன் ;)

Be simple be sample

ஊட்டியில் ஒரு கெட்டுகெதரா... முன்னாடியே சொல்லியிருந்தா நானும் ரேவ்ஸும் சைக்கிள்லயே வந்திருப்போம்ல :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்களைப்போலவே நானும் குழம்பித்தான் போனேன்பா.
நாங்கள் ஊட்டி வந்ததும் உங்களுக்கு தகவல் தருகிறேன் , கண்டிப்பா வாங்க . இப்போ அவரின் வேலை நிமித்தமாக புனேவில் உள்ளோம் .

கெட்டுகதர்லாம் இல்லப்பா . ரேணு எனக்கே சர்ப்ரைஸ் குடுத்துட்டாங்க .//சைக்கிள்லயே வந்திருப்போம்ல :)// சைக்கிள்ல புறப்பட்டு வழில யானைகிட்ட மாட்டவா ?
வேணாம்பா அனைவரும் வண்டி ரெடி பண்ணி ஒருநாள் கிளம்பிவாங்க.

அன்பு ரேணுகா,

ஊட்டி கெட் டு கெதர் பத்தி எழுதுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

கவி சைக்கிள் ல கூப்பிட்டு போய் யானைகிட்ட மாட்டி விட பார்த்திங்களே. ;)

Be simple be sample

ஹாய் ரேணு எப்படி இருக்கீங்க உங்களிடம் பேசி ராெம்ப வருடம் ஆகிறது. நினைவு இருக்கா எங்களை ஊர் சுற்றி காட்டியதெல்லாம் நினைவு இருக்கா..

இந்த ரேவா புள்ள எங்கையும் யாரையும் விட்டு வைக்காது.. எங்கபாேனாலும் ஒரு கெட் டூ கெதா்தான்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

எதிர்பார்பைத் தூண்டிவிட்டு பாதியில் விட்டதற்கு ஒரு கர். :-) விரைவில் சந்திப்பைப்பற்றி எழுதுங்க. (ஏற்கனவே நான் லீவில் இருந்த சமயம் எழுதியிருப்பீங்களோ! தேடிப் பார்க்கிறேன்.)

‍- இமா க்றிஸ்

அனைவரும் நலமா ? சீக்கிரம் அடுத்த பதிவு போடுகிறேன். உங்களின் பதிவு கண்டதும் மிக்க மகிழ்ச்சி .

அறுசுவை நட்புக்களின் முகம் தெரியாமல் இருக்கலாம் . எப்படி அனைவரையும் மறப்பது ? (மறக்கக்கூடிய நட்பா நம்முடையது ....) . விரைவில் அடுத்த பதிவிடுகிறேன்.

பசங்களின் பரிட்சை காரணமாக பாதியில் இருக்கிறது. விரைந்து அடுத்த பதிவிடுகிறேன் . அனைவருடனும் திரும்ப பேசியது மிக்க மகிழ்ச்சி ./// (ஏற்கனவே நான் லீவில் இருந்த சமயம் எழுதியிருப்பீங்களோ! தேடிப் பார்க்கிறேன்.)/// இல்லவே இல்லை . பதிவு இனிமேல்தான் இடவேண்டும் .

நான் ஊட்டில இருக்கேன்ன்னு நீங்க தான் நம்பவே இல்லை. சும்மா விளையாடறேன்னு தானே நினைச்சீங்க

இப்ப தான் ரேணு பார்க்கறேன். பசங்காளுக்கு லீவு பிசியா போகுது.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நான் முதலில் நம்பவில்லைதான் . /// பசங்காளுக்கு லீவு பிசியா போகுது.///இங்கேயும் அதான்பா நிலைமை .