" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா ? " பகுதி - 2

நீங்க எழுந்துட்டீங்களா ? டிஃபன் ரெடி பண்ணிடுறேன். நீங்க குட்டீஸ எழுப்புங்க ப்ளீஸ்... (அவருகிட்ட சொல்லனுமே எப்படி) காலை நேரம் மிகவும் பரபரப்பா ஓடுதுங்க.
இன்னைக்கு மதியம் ஆஃபீஸ்ல பார்ட்டி இருக்கு. மதியம் அங்க சாப்பிடுறேன் , நீ பசங்க ஸ்கூல் விட்டதும் பிக்கப் பண்ணிக்க ( இது என்னவர்).

சரிங்க நா ஒன்னு சொல்லனு . நீங்க எப்ப ஃபிரீ ? நாளைக்கு லீவ்தான ?
நாளைக்கு லீவ்தான் ரெஸ்ட் எடுக்கனும் . (போச்சுடா நீங்க ரெஸ்ட் எடுத்தா எங்க ப்ளேன் என்னத்துக்கு ஆகறது ?)
என்னனு சொல்லு . டைம் ஆகுதுல்ல, என்ன ப்ளேன் போட்டிருக்க ? இல்லைங்க நான் அறுசுவைல உறுப்பினரா இருக்கேன்னு உங்களுக்கு தெரியும்ல ?
பட்டிமன்றம் நடத்துவிங்களே அதுதான ? தெரியும் . பட்டிக்கு எதாவது தலைப்பு வேணுமா?

இல்லைங்க அதுல ஒரு ஃப்ரெண்ட் பேரு ரேணு , அவங்க ஃபேமிலியோட இங்க வந்திருக்காங்க . நம்மல பாக்கனும்னு ஆசைபடறாங்க . நாம ஊட்டி போயிட்டு வரலாம். ப்ளீஸ் யோசிச்சு சொல்லுங்க.

ம்ம்ம்ம் டைம் ஆச்சு மதியம் பேசிக்கலாம். ( கிளம்பிட்டார்) .

பிரவின் , ஹரிஷ் போலாமா? லேட் ஆகுது பாருங்க. ஓகே மா... ஐடி கார்டு போட்டுட்டு வரோம் .

டேய் நாந்தான்டா முதல்ல போவேன்....(ஹரி)
நீ மெதுவா வா டா நான் வண்டிய ஓபன் பண்ணி வைக்குறேன் .

ஹரி மெதுவாபோப்பா , பிரவின் சாவி குடுத்துட்டு கதவு நல்லா சாத்திக்க. (டப் , கதவு சாத்திட்டாங்க . ம்ம்ம் இங்க வேலை பாட்டுக்கு நடக்குதுங்க. ஆனா மனசுக்குள்ள ரேணு என்ன பண்றாங்க ? எங்க சுத்தி பாக்குறாங்க ? இப்படிதா இருக்கு.)

சரிங்க வண்டி ஓட்டும் போது பேசக்கூடாதுன்னு எங்க அப்பா சொல்லிருக்கார் . நான் ஸ்கூல்ல விட்டுட்டு வரேன் . அதுக்குள்ள நீங்க டீ சாப்ட்டு ரெடி ஆகிருங்க.

என்னங்க டீ குடுச்சாச்சா ? எனக்கும் அதுக்குள்ள ரேணு கிட்ட இருந்து இரண்டு முறை ஃபோன் வந்துடுசுங்க .

அவங்க பாவம் வாங்க இப்பவே அவங்களுக்கு ஃபோன் பண்ணலாம் . ஹலோ ரேணு எங்க இருக்கீங்க ? (திருச்சி)

இன்னும் ஸ்கூல்ல தான் இருக்கேன் ரேணு . ஆமா வீட்டுக்கு இப்ப போகல . இன்னைக்கு இங்க நூலகத்துல பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி நடத்துறோம் . நானும் இன்னொரு உறுப்பினரும்தான் நடுவர்கள். அதை முடித்துவிட்டு தான் வீட்டுக்கு போகனும் . நீங்க எங்க இருக்கீங்க ரேணு?

இங்க குன்னூர்ல ஒரு பார்க்ல இருக்கோம்பா.

ஓ சிம்ஸ் பார்க்லயா?

ஆமா ரேணு . இங்க போட்டிங் போலாம்னு காத்திருக்கோம்.

ம்ம்ம் ஓகே ரேணு அங்க குட்டீஸ் விளையாட வைங்க, அவங்களுக்குன்னு நல்ல விளையாட்டு பொருட்கள் இருக்கு . அங்க பெரிய ருத்ரார்சம் மரம் இருக்குபா . நீங்க படகு சவாரி போகும்போது அந்த நீர்ல நிறைய மீன்கள் சுற்றும் . நீரின் மேல் பகுதிக்கே வரும்பா . அழகான வண்ண வண்ண மலர்கள் இருக்கும்பா .

நீங்க சொல்றதுபோல நிறைய பூக்கள் இங்க இருக்கு ரேணு . மீன்கள் இனிமேதான் பார்க்கனும் . இங்க வேற என்னென்ன இடங்கள் இருக்கு ரேணு ?

பிறகு அங்கேயிருந்து லேம்ஸ்ராக் , டால்ஃபின்னோஸ் இந்த இரண்டு இடங்கள் இருக்கு . நன்றாக இருக்கும் . நான் இப்பதா என்னவரிடம் நம்ம விஷயம் சொல்லி இருக்கேன் . எப்படியும் நாளைக்கு நாம ஊட்டில சந்திக்கலாம்பா .

ரேணு இதெல்லாம் கனவுமாதிரி இருக்குபா ? நாம சந்திச்ச பிறகுதான் எனக்கு மகிழ்ச்சியா இருக்கும் . (திருச்சி ரேணு)

கண்டிப்பா நடக்கும்னு நம்புவோம் ரேணு . இன்னொரு விஷயம் நான் சொன்ன இடங்கள் -ல சாப்பிட ஒழுங்கா கிடைக்காது . அதனால எதாவது வாங்கி வச்சுக்கங்க . போகும் வழில சாக்லெட் ஃபாக்டெரி இருக்கு , அங்க வகை வகையா நிறைய சாக்லெட்ஸ் கிடைக்கும் (அனைத்தும் ஹோம்மெய்டு சாக்லெட்ஸ்) . நமக்கு பிடிச்சத வாங்கிக்கலாம் . பிறகு நீலகிரி தைலம் , கிடீன் டீ பாக்கெட்டுகள் கிடைக்கும்பா . மகிழ்ச்சியா பார்த்துட்டு வாங்க . அப்பப்போ எனக்கு மெசேஜ் அல்லது ஃபோன் பன்னுங்க.

கண்டிப்பா ரேணு, நீங்க சொன்ன இடங்களை எங்க ட்ரைவர் கூட சொன்னார். இதமுடிச்சிட்டு அங்க போறோம் . நான் உங்களுக்கு ஃபோன் பண்றேன்பா (திருச்சி) .

ரேணு பலவிதங்கள்ல மணக்கும் சோப் வகைகள் கிடைக்கும் . அதாவது கற்றாழை , சந்தனம் , துளசி , அவகேடோ , செண்பகம் , இப்படி பலவகை குளியல் சோப்புகள் கிடைக்கும். அடுத்து முக்கியமான ஒன்னு நீங்க சாப்பிடனும்னா குன்னூர் வந்திடுங்க . அங்கே லக்ஷ்மி ஹோட்டல் (சைவம்), ராமச்சந்திரா (அசைவம்) இரண்டும் மிக சுவையாகவும் , சுத்தமாகவும் இருக்கும் . (இது நான்)

நானே கேட்கனும்னு இருந்தேன் ரேணு , சாப்பாட்ட பத்தி நீங்களே சொல்லிட்டீங்க . என்ன டிஸ் இங்க நல்லா இருக்கும் ?

லக்ஷ்மில சில்லி பரோட்டா சூப்பரா இருக்கும் (ஆல் டைம் ஃபேவரட்) மஷ்ரூம் புலாவ் . ராமசந்திரால ம்ம்ம்ம்.. பிரியாணி , சிக்கன் லாலிபாப், அங்கேயே ரெடி பண்ணும் ஸ்கூப் ஐஸ்க்ரீம்ஸ்...

ம்ம்ம் தேங்ஸ் ரேணு... ஓகே நான் பிறகு பேசறேன்.

சரி ரேணு நானும் போட்டி முடித்துவிட்டு உங்களை அழைக்கிறேன்.

என்ன மக்களே அப்போ நீங்களும் நாங்க சந்திப்போமா ? இல்லையா ? என்கிற கேள்வியோடவே அடுத்த பகுதி படிக்க தயாராகிடுங்க......

No votes yet

Comments

தாமதத்திற்கு மன்னிக்கவும் .

மன்னிக்க எல்லாம் முடியாது. :-) சீக்கிரம் அடுத்த பாகம் வரணும்.

‍- இமா க்றிஸ்

இதெல்லாம் சரி இல்ல ஆமா சொல்லிட்டேன் :). திருச்சி ரேணு நீங்களாவது வந்து சொல்லிட்டு போங்க..

Be simple be sample

அவ்வ்வ்வ்வ் , இரண்டு நாள் எடுத்துக்கலாமாங்க.

திருச்சி ரேணு ஆளையே காணோம்பா. எங்கயாச்சும் பார்த்தா வரச்சொல்லுங்க...

லீவு சோ புல் பிசி.

டிக்டிக்டிக் நிமிடங்கள்
நாங்க எவ்வளோ டென்சனா இருந்தோம் அந்த டென்சன எல்லாத்துக்கும் தர வேனாம்:)

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

சாதாரணமான டென்சனா அது ? கண்ணுல பார்க்கும் வரை எவ்வளவு படபடப்பு தெரியுமா ?