
தேதி: October 12, 2018
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்
மொத்த நேரம்: 25 நிமிடங்கள்
முள்ளு முருங்கை இலை - 10-12 இலைகள்
பச்சரிசி - 1 கப்
சுக்கு பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய்
உப்பு
முள்ளு முருங்கை இலைகளை நடுவில் இருக்கும் நரம்பை நீக்கி ஒன்றிரண்டாக பிய்த்து வைக்கவும்.

பச்சரிசியை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

மிக்ஸிஜாரில் ஊற வைத்த அரிசியுடன் சிறிதளவு உப்பு, கீரையை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பதமாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவுடன் சுக்கு பொடி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

தோசைக்கல்லில் சுற்றி 1 கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஆரஞ்சு பழ அளவு மாவை எடுத்து கல்லில் இட்டு கையில் தண்ணீர் தொட்டு கொண்டு அடையாக பரப்பவும். சுற்றி எண்ணெய் ஊற்றி வேக விட்டு திருப்பி போட்டு சிவக்க விட்டு எடுக்கவும்.

சுவையான முள்ளு முருங்கை அடை தயார்.

இந்த கீரை சளி பிரச்சனைகளுக்கு மிகவும் நல்ல மருந்து..அடிக்கடி மாலை நேரங்களில் அடைகளாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
Comments
முள்முருக்கு அடை
எனக்குத் தெரிந்ததெல்லாம்... முள்முருக்கம் துளிரில் வறை (பொரியல்) செய்வது மட்டும் தான். அதற்கு மேல் வடை தட்ட இலையைப் பயன்படுத்துவோம்; கூந்தல் கழுவ சாற்றைப் பயன்படுத்துவோம். இது புதிதாக இருக்கிறது.
- இமா க்றிஸ்
அபி
எனக்கு ரொம்ப பிடிக்கும் நாங்க அடை செய்வது போலவே சோம்பு, வெங்காயம் கறிவேப்பிலைலாம் சேர்த்து செய்வோம்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.