உதவுங்கள் தோழிகளே....

நான் இத்தளத்திற்கு புதியது,நான் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன், எனக்கு செப்டம்பர் 28 மாதவிலக்கு ஆனது, இன்றோடு எனக்கு 15 நாள் ஆகிறது, எனக்கு ஓவுலேஷன் 10 வது நாள் ஏற்பட்டது, எனக்கு இப்போ எனக்கு சளி தொண்டை வலியாக உள்ளது, இந்த வலிக்கான மாத்திரையை நான் இப்பொழுது எடுத்துக்கலாமா? எனக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டதால் நான் பாலில் மஞ்சள் மிளகு பொடி செய்து போட்டு குடித்தேன், இப்படி குடிக்கலாம் தானே தோழிகளே, இதனால எந்த பிரச்சனயும் வராதுல, எனக்கு இதற்கு முன்பு ஒரு முறை அபார்சன் ஆகிவிட்டது, அதான் எனக்கு மிகவும் பயமாக உள்ளது, எல்லாதயும் பார்த்து பார்த்து செய்றேன்,.. உங்க பதிலை தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே....

வலிக்கான மாத்திரை - இருமல் மாத்திரையா? பெரும்பாலும் எதுவும் ஆவதில்லை. பாலில் மஞ்சள் மிளகு பொடியும் எதுவும் செய்யாது.

எதையும் செய்து விட்டுப் பயப்படக் கூடாது. முன்பே சிந்திக்க வேண்டும் அல்லது யோசிக்காமல் இருக்க வேண்டும். :-) பயப்படாதீங்க, எதுவும் ஆகாது.

‍- இமா க்றிஸ்

வலிக்கான மாத்திரை தான் மேம், கால்பால் மாத்திரை போடலாமா, ஓகே மேம் நீங்க சொல்வது போல் யோசிக்காமல் இருக்க முயற்சி செய்றேன்

கால்பால் மாத்திரை கொஞ்சம் safe தான்.. ஆனால் டாக்டர் பரிந்துரை இல்லாமல் எடுக்க வேண்டாம்..

முடிந்த வரை அதிகம் வெந்நீர் குடியுங்கள்..
மிளகு பொடியுடன் தேன் கலந்து வாயில் ஓரமாக ஒதுக்கி கொண்டு மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வாருங்கள்..

சரிங்கமா நீங்க சொல்வது போல் செய்கிறேம், அப்றம் இன்னொரு சந்தேகம் இருக்கு, அது என்னன்னா நான் அறுசுவையில் நிறைய இடத்தில் படித்திருக்கிறேன் ஓவுலேஷன் நாள் 14 நாள் இல்லைன்னா 17, 18 இது போல நடைபெறும் னு சொல்லி படிச்சிருகேன், ஆனால் எனக்கு இந்த மாதம் ஓவுலேஷன் நாள் 10ம் நாள் ஏற்பட்டது, இது நார்மல் தானா? போன தவடை நான் கன்சிவ் ஆனப்போ 11ம் நாள் ஓவுலேஷன் நாள் நடைபெற்றது ஆனால் துரதிஷ்டவசமா அது அபார்சன் ஆகிவிட்டது, அது தான் எனக்கு பயமாக உள்ளது, ஓவுலேஷன் நாள் முன்கூட்டியே நடைபெறுவதால் பிராப்ளம் வருமா? என்று சொல்லுங்களேன்...

ஓவுலேஷன் நாள் - அது பொதுவான நியதி. ஆள் ஆளுக்கு வித்தியாசமாக இருக்கும் அதே சமயம் ஒரே பெண்ணுக்கு மாதாமாதம் வெவ்வேறு நாட்களில் ஆவதும் உண்டு. நாட்கணக்கு வித்தியாசப்பட்டால் மாதவிலக்கு ஒழுங்காக ஒரு தேதியில் எதிர்பார்ப்பது போல் ஆகாது. இரெக்யுலர் பீரியட்ஸ் என்பதில் இதுவும் அடக்கம்.

இங்கும் ஒரு அட்டவணை இருக்கிறது.

10ம் நாள் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? அப்படி இருந்தால் அதுவும் நார்மல் தான். ஆகாமலிருந்தால் தான் யோசிக்க வேண்டும்.

//11ம் நாள் ஓவுலேஷன் நாள் நடைபெற்றது ஆனால் துரதிஷ்டவசமா அது அபார்சன் ஆகிவிட்டது,// மாதவிலக்கு தாமதமாகி, கர்ப்பப் பரிசோதனையிலும் கர்ப்பம் என்பது உறுதிசெய்யப்படாவிட்டால், 'கர்ப்பம் தரிக்கவில்லை',' எனலாமே தவிர அது மிஸ்காரியேஜ் ஆகாது.

ஓவுலேஷன் நாள் முன்கூட்டியே நடைபெறுவதால் பிரச்சினை வராது. ஒரே பிரச்சினை, நீங்கள் நாள் கணக்குப் பார்த்து அதன்படி 'மட்டும்' உறவு வைத்துக் கொள்வீர்களானால் கணக்குப் பிழைத்தால் உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படும்.

‍- இமா க்றிஸ்

10ம் நாள் ஓவிலேசன் நாள் என்று எதை வைத்து சொல்கிறேன்னா, இங்கு அறுசுவைல நிறைய இடத்தில் படித்திருக்கிறேன், ஓவுலேஷன் நாள் அன்று வழுவழுப்பான திரவம் வரும் என்று, பீரியட்ஸ் ஆன நாளிலிருந்து 10ம் நாள் எனக்கு வயிற்றுவலியுடன் மார்பு வலியுடன் கூடிய திரவம் வந்ததை வைத்து தான் நான் அன்று எனக்கு ஓவுலேஷன் நாள் என்று தெரிந்து கொண்டேன், அதோட 10ம் நாளுக்கு பிறகு வந்த நாட்களில் அதுபோல எனக்கு எந்த மாற்றமும் ஏற்படல, இது சரிதானா மேம்?

எனக்கு போன தடவை pregnancy test ல posotive வந்து, அதற்கு பிறகு தான் அபார்சன் ஆனது, மருத்துவரிடம் சென்ற போது கரு சரியாக உருவாகாமல் இருந்திருந்தால் இப்படி நடைபெறும் என்றார்கள்,

நான் செய்தவைகள் சரியா தவறா என்று தயவு செய்து சொல்லுங்கள்

///10ம் நாள் ஓவிலேசன் நாள் என்று எதை வைத்து சொல்கிறேன்னா, இங்கு அறுசுவைல நிறைய இடத்தில் படித்திருக்கிறேன், ஓவுலேஷன் நாள் அன்று வழுவழுப்பான திரவம் வரும் என்று///தோழி இது பொது தளம் இதில் ஒவ்வொருவரின் கருத்தும் வேறுபடும். ஓவுலேஷன் என்பது எல்லா பெண்களுக்கும் ஒரே நாளில் ஏற்ப்பட வேண்டும் என்ற கட்டாயமில்லை. புரிந்து கொள்ளுங்கள் ஒருவருக்கு 28 நாட்கள் சுழற்சி இருக்கும் . ஒரு சிலருக்கு 30 நாட்கள் இருக்கும். அப்பொழுது ஓவுலேஷன் தினமும் மாறும். நீங்கள் சொன்னது போல அறிகுறிகளும் மாறும். மனதில் எதையும் ரொம்ப யோசித்து குழப்பம் அடையாதீர்கள்.
வீட்டில் டிஜிட்டல் தெர்மா மீட்டர் ( காய்ச்சல் பார்க்கும் கருவி ) வாங்கி வையுங்கள். உங்களின் மாதவிலக்கு முதல் நாளில் இருந்து அடுத்த மாதவிலக்கு வரை ஒவ்வொரு நாளும் உடற்ச்சூட்டை(டெம்ப்பரேச்சர்) குறித்து வையுங்கள். மாத கடைசியில் இந்த தினத்தில் உடல் சூடு அதிகம் இருக்கிறது என்று பாருங்கள். அது 1 டிகிரி , 2 டிகிரி அதிகரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 0.1டிகிரி அதிகமாக இருந்தாலும் அதுதான் உங்களின் ஓவுலேஷன் தினம் . இதுவும் ஒரு மருத்துவர் சொன்னதுதான். ஆனால் உங்களின் ஓவுலேஷன் தினம் கண்டறிய நீங்கள் இரண்டு மாதமாவது காத்திருக்க வேண்டும்.
அடுத்து ,/// எனக்கு போன தடவை pregnancy test ல posotive வந்து, அதற்கு பிறகு தான் அபார்சன் ஆனது, மருத்துவரிடம் சென்ற போது கரு சரியாக உருவாகாமல் இருந்திருந்தால் இப்படி நடைபெறும் என்றார்கள்,///கரு உருவாகும் போது சின்ன துவரம்பருப்பு அளவிலேயே இருக்கும். அதனை வலுப்படுத்தும் விதமான உணவுகளை நீங்கள் எடுக்க வேண்டும். காய்கறிகள்,கீரைகள், குளிர்ச்சியான பழங்கள் , நிறைய தண்ணீர் இப்படி.
ஒருசில சமயங்களில் மாதவிலக்கிற்கான ஹார்மோன்கள் கூட பிரகனன்ஸி டெஸ்ட்டில் பாசிட்டிவ் வர காரணமாக இருக்கும் தோழி . நீங்கள் எதையும் நினைத்து குழம்ப வேண்டாம் . நன்றாக உண்டு ஓய்வெடுத்து வேலைகள் செய்யுங்கள் . எல்லாம் சரியாகிவிடும். வாழ்த்துக்கள் .

/ஒருசில சமயங்களில் மாதவிலக்கிற்கான ஹார்மோன்கள் கூட பிரகனன்ஸி டெஸ்ட்டில் பாசிட்டிவ் வர காரணமாக இருக்கும் தோழி . நீங்கள் எதையும் நினைத்து குழம்ப வேண்டாம் / அப்படின்னா நான் போன தடவை கன்சீவ் ஆகவில்லை என்று சொல்றீங்களா தோழி, ஆனால் அபார்சன் ஆகி டி அண்ட் சி பண்ணினார்களே, இதனால் தான் நான் இந்த முறை அனைத்தும் பார்த்து பார்த்து செய்கிறேன்

///அப்படின்னா நான் போன தடவை கன்சீவ் ஆகவில்லை என்று சொல்றீங்களா தோழி///நான் அப்படி சொல்லவில்லையே தோழி , நீங்கள் கவலைபட வேண்டாமென்று மட்டும்தான் சொன்னேன் . வரும் நாட்களை மகிழ்ச்சியாக்கும் வழிகளை யோசித்து உற்சாகமாக இருங்கள் . உங்களின் மருத்துவரிடமே உங்கள் சந்தேகங்களை கேளுங்கள் . சரியான விளக்கமும் , தீர்வும் கிடைக்கும் .

மேலும் சில பதிவுகள்