பல் எனாமல் பிரச்சனை

எனக்கு 3 வருடங்களுக்கு முன்பு பல்லின் முன் பக்க எனாமல்லில் வீங்கிக்கொண்டு வந்தது. அதை Clean பன்னும் போது வெள்ளை கலரில் பால் போல் திரவமாக வந்தது. அதனால் முன்பக்க பல்லை எடுத்துவிட்டு செட்டு பல் மாட்டினேன். ஆனால் இப்பொழுது மீண்டும் பல்லின் பின்பக்கம் வீங்கி கொண்டு வருகிறது. இதற்க்கு ஏதாவது மருந்து கூறவும்..

பல்லின் வெண்மையான பீங்கான் போல் உள்ள கடினமான பகுதிதான் எனாமல்.

நீங்கள் சொல்வது ஈறு. சின்னதாக கட்டு போல் வந்திக்கிறது. சுத்தம் செய்யும் போது உடைந்ததால் சீழ் வெளியேறி இருக்கிறது.

இதற்காக பல் மருத்துவர் பற்களைப் பிடுங்கச் சொன்னார்களா? உங்களுக்கு பல்லில் பிரச்சினை இராமலும் இருக்கலாம். பிரச்சினை ஈறுகளில் மட்டும் கூட இருக்கலாம்.

நீங்கள் ஒரு நம்பகமான பல்மருத்துவரைப் பார்த்தாக வேண்டும் சகோதரி. பற்களைப் பிடுங்கிக் கட்டுவது எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு ஆகாது. இப்போதெல்லாம் விபத்தில் உடைந்த பற்களையே மீண்டும் பொருத்திக் கொடுக்கிறார்கள். மருத்துவம் முன்னேறியிருக்கிறது. நாம் கவலையீனமாக இருக்கக் கூடாது.

வாயில் பல் தொடர்பான நோய்கள் மட்டும்தான் வரும் என்பதில்லை. பயமுறுத்தவில்லை, ஆனால் கான்சரும் வருவது உண்டே! எனக்கு இது பற்றி போதிய விபரம் சொல்லத் தெரியவில்லை. நீங்கள் இதை இப்படியே கைமருத்துவம் போதும் என்று விட்டுவிடக் கூடாது, சரியான சிகிச்சை எடுக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம். வாயில் பாக்டீரியா, பங்கஸ் என்று ஒவ்வொன்று வளரும் போதும் வித்தியாசமான சிகிச்சைகள் இருக்கின்றன. பயப்பட வேண்டாம். ஆனால் தாமதிக்க வேண்டாம். ஒழுங்கான சிகிச்சை எடுக்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

மிகவும் ஆறுதலான பதில் சகோதரி. இதற்கு முன்பு மருத்துவரிடம் கான்பித்த பொழுது கிருமி தொற்று என்றுதான் கூறினார்.

நீங்கள் சொல்லியிருப்பது ஈறுகளில் பிரச்சனை என்றே எண்ணுகிறேன் . பல் அகற்றப்பட்டதுன்னு சொல்லி இருக்கீங்க . அப்போ பல்லில் ஏதேனும் அடி பட்டதா ? அப்படி பட்டிருந்தால் அல்லது பூச்சி அரிப்பு இருந்தால் வேர் பாதிப்படையும். டாக்டர் அதை சரிசெய்யும்போது வெண்மை திரவம் வந்திருந்தால் அது ரூட் இன்ஃபெக்ஷன் . இமா சொன்னதுபோல ஈறுகளில் பிரச்சனை என்றால் பல் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை . எதுவாகினும் நல்ல பல் மருத்துவரை சந்திப்பது நல்லது .

மேலும் சில பதிவுகள்