பட்டிமன்ற விபரங்கள்

அனைத்து அறுசுவை தோழமைகளுக்கும் மனம் நிறைந்த வணக்கங்கள் . பழமை மாறாமல் பழைய உறுப்பினர்களின் பங்களிப்புடனும் புதிய தளம் , புதிய உறுப்பினர்கள் என குதூகளிக்கும் நம் அறுசுவையில் பட்டியின் ஆரவாரமும் துவங்கட்டும் .பட்டியிலும் சில புதுமைகளும் வரவுள்ளன . பட்டங்களும், விருதுகளும் வழங்கப்படும் . அனைத்து தோழமைகளும் அவசியம் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை பதிவிட்டு பட்டியை நல்ல முறையில் வழிநடத்திட வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன் . அனைவரும் வாருங்கள் ஆதரவு தாருங்கள் .

பட்டிமன்றம் - 5 , வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?அதிரா
பட்டிமன்றம் - 6 mrs sekar ,
பட்டிமன்றம் 7 - சங்கப்பலகை!!!!இலா
சிறப்பு நகைச்சுவை
பட்டிமன்றம்8... வாங்க மூவி தியேட்டருக்கு...paapS
பட்டிமன்றம் 9 - வரலாறு santhoo
பட்டிமன்றம் - 10 : சிறந்தது எது? நகரமா? கிராமமா?
By Vani Vasu
பட்டிமன்றம் - 11 கேட்க இனிமை பழைய பாடலா? புதிய பாடலா? ayeesripugazhenthi
பட்டிமன்றம்12 "கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டு முறை இந்த காலத்திலும் அவசியமா இல்லkavisiva
பட்டிமன்றம் - 13 : பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?Vani Vasu
பட்டிமன்றம் 14 : இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு கோடிக் கணக்கில் செலவழிப்பது சரியா தவறா?'vinnie
பட்டிமன்றம்- 15 "உணவில் ருசியானது சைவமா?அசைவமா?"SubathraNeil
பட்டி மன்றம்-16 அன்றைய காதல்,நவீன காதல்-சிறந்தது எது?m.sheik mohi deen
பட்டிமன்றம் - 17 - தனிவீடா? அடுக்கு மாடி கட்டிடங்களா?Vani Vasu
பட்டிமன்றம்-18- லஞ்சம் வளர்ந்ததா?இல்லை திணிக்கப்பட்டதா?" m.sheik mohi deen
பட்டிமன்றம் - 19 - பெண் உரிமை மற்றும் சுதந்திரம்Ramya Karthick
பட்டிமன்றம்20- பெண்சுதந்திரம்kavisiva
பட்டி மன்றம் - 21 - பெருகி வரும் மீடியா Ramya Karthick
பட்டிமன்றம் - 22 - உயர்ந்தது எது? உறவா? நட்பா?Ramya Karthick
பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா? radha hari
பட்டிமன்றம் - 24 : குடும்பத்தில் பொறுப்பு அதிகம் யாருக்கு? கணவனுக்கா? மனைவிக்கா? Hemaperiss
பட்டிமன்றம் - 25 - இளைஞர்கள் சீரழிவுக்கு காரணம், குடும்பமா? சமுதாயமா? pavithra_ram
பட்டிமன்றம் 26 எந்தக்காலப் பண்டிகையில் மகிழ்ச்சி அதிகம்! n.jayalakshmi

பட்டிமன்றம்-27சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?
By amina mohammed
Hot topic
********** பட்டிமன்றம் - 28 ********** உலகில் சிறந்தது கல்வியா? செல்வமா?
By Kalpana Saravan.
பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?
By kavisiva
பட்டிமன்றம்-30 :ஜோதிடம்,வாஸ்து பார்க்கலாமா-கூடாதா?
By changdini
Hot topic
பட்டிமன்றம்--31 ***மனித மனம் அடிமையாவது அன்புக்கா?புகழுக்கா?***
By elu
பட்டிமன்றம் - 32 : அழகு என்பது உடலா?? உள்ளமா?
By Vani Vasu
Hot topic
****** பட்டிமன்றம் - 33 ****** சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா? பெண்களா?
By Kalpana Saravan...
பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை
By Ramya Karthick
பட்டிமன்றம் 36 - இந்தியாவின் சுய அடையாளம்
By YOHALAKSHMI
பட்டிமன்றம் - 37 : விருந்தாளிகளால் சந்தோஷமா? சங்கடமா?
By Vani Vasu
பட்டிமன்றம் 38 - காதலை பெற்றோர் மறுப்பதற்கு காரணம் - ஈகோ??சமூகம்?? பாசமா??
By pavithra_ram
பட்டிமன்றம் - 39 - ருசிக்காகவா (அ) ஆரோக்கியத்திற்காகவா?
By Ramya Karthick
பட்டிமன்றம்- 40 ***முக்கனிகளில் சிறந்தது எது? மாவா........?பலாவா.......?வாழையா.....?***
By Renuka Rajasekaran
பட்டிமன்றம்-41-திருமணம் முடிந்ததும் சுதந்திரம் அதிகம் பறிக்கப்பட்டது ஆண்களுக்கா?பெண்களுக்கா?
By m.sheik mohi deen
பட்டிமன்றம்- 42 *****என்றும் இனிமையாக நினைக்கும் பருவம் எது? பள்ளி பருவமா?கல்லூரி பருவமா? *****
By Suganthi86
பட்டிமன்றம் 43 :** “பொசசிவ்னஸ் எண்ணம் அதிகமாயிருப்பது ஆணுக்கா? பெண்ணுக்கா?!”
By elu
Hot topic
பட்டிமன்றம் - 45 : பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன?
By Vani Vasu
பட்டிமன்றம் - 46 “பெண்ணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டிலா?? புகுந்த வீட்டிலா??”
By pavithra_ram
பட்டிமன்றம் - 47 - ஆண்கள் சாதித்த துறைகளில் அனைத்திலும் பெண்களும் சாதிக்கமுடியுமா?முடியாதா?
By rengaraje
பட்டிமன்றம் - 48,இன்றைக்கு மனிதாபிமானம் வளர்ந்து வருகிறதா? தேய்ந்து வருகிறதா?
By Renuka Rajasekaran
பட்டிமன்றம் - 49 : பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா? சீரழிக்கிறோமா?
By Vani Vasu
பட்டிமன்றம்-50 அதிகம் தோற்கப்படுவது எது?
By aswinithiyagu
பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?
By Renuka Rajasekaran
Hot topic
பட்டி மன்றம்- 54....ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?
By Radha Balu
பட்டிமன்றம் - 55 : ஆண்கள் ராமனா? ராவணனா?
By Vani Vasu
Hot topic
*** பட்டிமன்றம் - 56 *** வீட்டில் வேலைக்காரர்கள் உதவியா? உபத்திரவமா?
By Kalpana Saravan
பட்டிமன்றம் - 57 : பட்டிமன்றங்கள் பயனுள்ளதா? பொழுதுபோக்கா?
By Vani Vasu
பட்டி மன்றம் 58 "வேலன்டைன்ஸ் டே அவசியமானதா? இல்லையா?"
By kavisiva
பட்டிமன்றம் - 59 அதிக மனஅழுத்தம் யாருக்கு? இல்லத்தரசிகளுக்கா? வேலைக்கு செல்லும் பெண்களுக்கா?
By Kalpana Saravan
பட்டிமன்ற தலைப்பு :60:*** பேஸ்புக் அவசியமா?இல்லையா? ***
By elu
பட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே! வருத்தமே!**
By n.jayalakshmi
பட்டிமன்றம் 62 : உறவுமுறைகளில் சிறந்தது எது ??
By Vani Vasu
பட்டி மன்றம் - 63 எப்படிப்பட்ட பேச்சு சிறந்தது
By Ramya Karthick
Hot topic
பட்டிமன்றம் 64:பிள்ளை வளர்ப்பில் சரியென நினைப்பது கண்டிப்பா?அன்பா?
By elu
***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***
By Renuka Rajasekaran
பட்டிமன்றம் - 66 --->நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?<---
By Vr Scorp
Hot topic
பட்டிமன்றம் 67: பணம் எதற்காக? ஆடம்பரத்திற்காகவா? அமைதிக்காகவா?
By Vani Vasu
பட்டிமன்றம் 68: இக்காலத்தில் வாழ தேவை தன்னம்பிக்கையா? சாமர்த்தியமா?
By bivi
பட்டிமன்றம் 69 : நமக்கு பிடித்த வேலையை செய்வது சரியா? அல்லது கிடைத்த வேலையை பிடித்ததாக மாற்றி கொள்வது சரியா?
By prema haribaskar
"பட்டிமன்றம் - 70 : ***சுயமாய் சிந்திப்பது யார்? குரங்கா? மனிதனா?***"
By Renuka Rajasekaran
பட்டிமன்றம் -இன்றைய பெண்களுக்கு ஏற்ற ஆடை புடவையா? சுடியா?
By Seethaalakshmi
பட்டிமன்றம் - 71 ஆண்களுக்கு யாரை சமாளிப்பது கடினம்?? அம்மா? மனைவி?
By KarthikaR
Hot topic
பட்டிமன்றம் 72 : திரும்பவர தயங்கும் காரணம் - வசதி? உறவு?
By Vani Vasu
பட்டிமன்றம் 73 : சமையலில் கில்லாடிகள் யார்?
By Poornima sankar

பட்டிமன்றம் - 74 "பட்டி நடுவராக சிறப்பிப்பவர் யார்? சாலமன் பாப்பையாவா...?திண்டுக்கல் லியோனியா...?"
By Renuka Rajasekaran
பட்டிமன்றம் - 75**--->பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?<---**
By Vr Scorp
பட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்???
By indiraganesan
பட்டிமன்றம் - 77 "இன்றைய காதல் மனதை பார்த்து வருகிறதா?வசதியை பார்த்து வருகிறதா?"
By shameela
பட்டிமன்றம்- 78 "மாணவர்களின் மன அழுத்ததிற்கு காரணம் யார்?"
By kavisiva
பட்டிமன்றம் - 44 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அறிவை பலப்படுத்துகின்றனவா? பலவீனப்படுத்துகின்றனவா?
By Renuka Rajasekaran
பட்டிமன்றம்-79 ஆபத்துக்காலங்களில் உதவுபவர்கள் நண்பர்களா? சொந்தபந்தங்களா?
By Nithyasaravanan
பட்டி மன்றம் 80:சண்டையில் ஜெயிப்பது ஆண்களா? பெண்களா?
By arul sivam
Hot topic
பட்டி மன்றம் - 81, காதலுக்காக பெற்றோரை விடலாமா? அல்லது பெற்றோருக்காக காதலை விடலாமா?
By shamina aziz
பட்டி மன்றம் -83 பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாக காரணம் என்ன?
By n.jayalakshmi
பட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?
By sumibabu
பட்டிமன்றம் 84: கணவர் சமையல் நிபுணராக இருப்பது மனைவிக்கு வரமா? சாபமா???
By kavisiva
பட்டி - 85 "இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது? கல்வித்துறைக்கா? சினிமாத்துறைக்கா? அதிகாரத்துறைக்கா?"
By Renuka Rajasekaran
பட்டிமன்றம் 86: இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சி மனித வாழ்வை மேம்படுத்துகிறதா அல்லது சீரழிக்கிறதா?
By Esan
பட்டிமன்றம் 87 : வேலைக்கு போவதால் பெண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகமா ? குறைவா ?
By usha-b
பட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா?
By kavisiva
"பட்டி - 92 : குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பது மகனா?மகளா?"
By Renuka Rajasekaran
Hot topic
பட்டிமன்றம் 93 : இன்றைய காலகட்டத்தில் நல்லவராக வாழ்வது சாத்தியமா? சிரமமா?
By Vani Vasu
பட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? *
By Guna2962
பட்டிமன்றம் 91 :மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா? சமூகச் சூழலா?
By Jaypon
பட்டிமன்றம் 94 - அமைதியை கடைப்பிடிப்பதிலும் பொறுமையை கையாளுவதிலும் வல்லவர்கள் யார்?
By Vani Vasu
பட்டி - 95 "விருந்துகளில் விரும்பத்தக்கது எது? பந்தி முறையா?பஃபே முறையா?"
By Renuka Rajasekaran
பட்டிமன்றம் 96 - ஹாஸ்டலில் தங்கி படிப்பதா? வீட்டிலிருந்து போய் வருவதா?
By Vani Vasu
"ப‌ட்டிமன்றம் 97 ‍_சமூக விழிப்புணர்வும் அக்கறையும் யாருக்கு அதிகம்? இளைஞர்களுக்கா? முதியவர்களுக்கா?"
By Renuka Rajasekaran
பட்டிமன்றம் 98 - உங்களை வாய்விட்டு சிரிக்க வைத்த காமெடி எது?
By chrishmas
Hot topic
பட்டிமன்றம் ~ 99 "உணவே மருந்தாவது இக்காலத்தில் சாத்தியமா ? சங்கடமா ? "
By Renuka Rajasekaran
பட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா? பெண்களா?
By Vr Scorp
பட்டிமன்றம் - 101 " பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் ? அவளுக்கா ? அவளை சார்ந்தவர்களுக்கா ? By Renuka Rajasekaran
பட்டிமன்றம் -102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா? நிதி ஒதுக்குவது நல்லதா ? “ By Fathima

அனைவரும் ஓஓஓஓடோஓடி வாங்க . சில திருத்தங்கள் இதில் உள்ளன . ஒவ்வொரு பட்டியின் லிக்குகளும் கொடுக்கவேண்டும் . கொஞ்சம் நேரமெடுக்கும் . விரைவில் கொடுக்கிறேன். முந்தைய பட்டிகளை படிக்க விரும்புவோர் இதில் இருந்து அப்படியே போய் படிக்க வசதியாக இருக்கும்மாறு கொடுக்க முயன்றுள்ளேன் .

பட்டியில் எப்பொழுதும் திங்களன்று தீர்ப்பு வரும் . போனவாரம் பூஜை காரணமாக நம் தோழிகள் வருகையும் வாதமும் குறைந்திருந்தது ( நேரமின்மையோ என்று எண்ணி ) . இந்தவாரம் வெள்ளிவரை அனைத்து தோழிகளுக்கும் நேரம் நீட்டிக்கப்படுகிறது . அதாவது வரும் வெள்ளியன்று பட்டியின் தீர்ப்பு வெளியாகும் . அதற்குள் தங்களது வாதங்களை அனைவரும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

பட்டிமன்ற விதிமுறைகள்

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.
7.அறுசுவையின் எல்லா விதிகளும் பட்டிமன்றத்திற்கும் பொருந்தும் .

பிரேமா , நீங்கள் பட்டியில் கலந்து கொள்வதில் மனதார மிக்க மகிழ்ச்சியடைகிறேன் .
புதிய தோழிகள் இப்படி அறுசுவையின் அனைத்து பகுதிகளிலும் பங்கெடுப்பதை எண்ணி நம் அறுசுவையின் மூத்த உறுப்பினர்கள்கூட மிகுந்த சந்தோஷப்படுகிறார்கள் .

பட்டியில் நான் சொன்ன விதிமுறைகல் சரியாக புரியவில்லை என்று நினைக்கிறேன் . நேரடி பட்டிகளில் எதிரணியில் ஒருவரை சுட்டிக்காட்டி பேசுவது ( பாரதி ராஜாவை பெயர் சொல்லி அல்லது அவர் உறைத்த கருத்தை சொல்லி ) பேசும்போது அவரை நாம் நேரடியாக பார்ப்போம் அவரது முக பாவங்கள் அவரது பேச்சின் பண்பை விளக்கு ம். அதாவது நக்கலா ? நையாண்டியா ? கிண்டலா ? பொய்க்கோவமா ? இப்படி . ஆனால் இங்கு ஒருவர் தன் வாதங்களை தன் எழுத்தின் மூலமாக மட்டுமே கருத்தை தெரிவிப்பா ர். படிப்பவர் எந்த மனநிலையில் எடுத்துக்கொள்வார் எனத்தெரியாது .

நீங்கள் பொதுவாக எதிரணி என்று சொல்லும்போது அனைவரின் கருத்திலும் எடுத்துக்கொண்டு நீங்கள் பேசியதாக இருக்கும் . ஆனால் அவர் சொன்ன வார்த்தைகளை நீங்கள் பதிவிட்டு பின் கருத்துகள் சொல்லும்போது அவரை நேரடியாக சுட்டிக்காட்டியதுபோல ஆகும் .
/////அதைப் பத்தி புலம்பறதுக்கு ஒண்ணுமே இல்ல, // இதை நீங்கள் தனியாக குழந்தையை சமாளித்து வீட்டையும் பராமரித்து உங்களுக்காகவும் நேரத்தை ஒதுக்கி, இருக்கிறீர்கள் என்றால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். கூட்டு குடும்பத்தில் / ஒற்றுமையான குடும்பத்தில் இருந்தால் இப்படி தான் பேச முடியும். நிஜத்தில் நங்கள் க்ரேட் !! உங்கள் சேவை தொடர, உங்கள் சந்தோஷம் நிலைக்க என் வாழ்த்துக்கள் !!/// ///

இதை மாற்றிக்கொள்ளுங்கள் தோழி . பட்டியில் வாதங்களை மட்டுமே வைப்போம் ( வேறு பேச்சுக்களுக்கு பட்டியில் இடமில்லை ) . அதனால் தான் இங்கு சொல்கிறேன் .
நீங்கள் சுட்டிக்காட்டியிருப்பது யாரென படித்தவுடனே தெரிந்துவிடும் . முகம் தெரியாமல் இருக்கலாம் , அதேபோல மற்றவர்களின் குணம் , மனம் , பண்பு எதுவும் தெரியாதவரை (ஒருவரை நிருங்கி தெரியாதவரை) அதுவும் பட்டியில் இப்படிப்பட்ட சுட்டிக்காட்டல்கள் அவசியமற்றவை . அவரது உறுப்பினர் பக்கம் சென்று அவரது பங்களிப்புகள் , இழைகள் பாருங்கள் நான் சொல்வது புரியும் தோழி . நான் சொல்வதை மூத்த உறுப்பினரின் வழிநடத்தல் என்று எடுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன் . இது உங்களுக்கு மட்டும் அல்ல பிற புதிய உறுப்பினர்களுக்கும்தான் .

எனக்கு நன்றாக புரிந்தது. எனக்கு தெளிவாக புரியவைத்தமைக்கு நன்றி. என் பதிவு சம்மந்தப்பட்டவருக்கு சங்கடத்தை தந்திருக்குமானால் தயவு செய்து என்னை மன்னிக்கவும். என் வாதம் இனிமேல் யாரையும் காயப்படுத்தாதவாறு இருக்கும்.

- பிரேமா

பிரேமா செய்திகள் படித்தீர்களா ? இல்லைனாலும் பரவாயில்லை என்ன விஷயம்னு இங்கேயே சொல்றேன் . அடுத்த பட்டிக்கு நீங்கதான் நடுவர் . இந்த இரண்டு நாளில் நல்ல தலைப்பா ஒன்றை தேர்வு செய்து வரும் திங்களன்று காலையில் பட்டியை துவங்கிடுங்க . அடுத்த திங்களன்று உங்களின் தீர்ப்பு கொடுக்கனும் . மன்ற விதிகள் , பட்டி விதிகள் என்னன்னு உங்களுக்கே தெரியும் . எதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்க.

பாத்திமா இங்கே வாங்க,
இந்த பிரேமா எங்கதான் போயிட்டாங்க. என் பதிவு அவங்க கண்ணில் படவில்லையா?

அதுதானே , இமாமாவை நடுவராக அழைக்கலமே ( பிரேமா இடையில் வர கூடும் வந்தால் செய்தியை தெரிவித்து அடுத்த பட்டி தலைவராக அறிவிக்கலாம்.)

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

புதுமுகங்கள் இம்முறை நடுவராக வந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேன். ஒன்று செய்யலாம், நல்ல தலைப்போட நாளைக்கு காலையில் நீங்களே பட்டியை ஆரம்பிக்கலாமே! நல்ல யோசனைதானே:-) பிரேமா வை அடுத்த பட்டிக்கு நடுவராக்கிடலாம். நீங்களும் ஓடிராதீங்க. நல்ல புள்ளயா பட்டியை ஆரம்பிங்க . தலைப்பை சரியாக தேர்ந்தெடுங்கள். ஏதேனும் சந்தேகம்னா கேளுங்கப்பா.

எனக்கு பட்டி பற்றி எதுவும் தெரியாது, நடுவராக தீர்ப்பு சொல்லவும் தெரியாதுப்பா, மற்ற உறுப்பினரிடம் கேட்டு பார்போம் ( யாரும் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் தான் நடுவர்) வாய்ப்புக்கு நன்றி , ( மன்னிக்கவும் தோழி)

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

மேலும் சில பதிவுகள்