பட்டி - 101 " பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் ? அவளுக்கா ? அவளை சார்ந்தவர்களுக்கா ?"

அன்புச் சகோதரிகளே , அருமை சொந்தங்களே , என்ன அனைவரும் நலமா இருக்கீங்களா ?

என்னடா தளம் முழுக்க புதியதாக மாறிடுச்சே ! பட்டி இன்னும் ஆரம்பிக்களையே ! என்று உங்களின் மனதின் குரல் எனக்கு நல்லாவே கேட்டுடுச்சுங்க . அதான் நம்ம பாப்பையா ஸ்டைல்ல அனைவரையும் கோப்பிட்டேன் .
சீக்கிரம் ஓடியாங்க . இந்த பட்டில பல புதுமைகள் இருக்கு . முதல்ல வந்து பதிவு பண்ணிடுங்க . தலைப்பை படித்து தங்களின் அணியை தேர்வு செய்து கொண்டு கருத்துகளை பதிவிடுங்க . தயவுசெய்து இந்த மைண்டு வாய்ஸ்ல பேசிட்டு ஓடிப்போற வேலைமட்டும் ஆகாதாக்கும் .

இன்றைக்குன்னு இல்லைங்க எப்பவுமே பெண் என்பவள் யாருக்காக ஒவ்வொரு வேலையும் , கடமையும் பார்த்து பார்த்து செய்கிறாள் என்பதை மனதுள் பலமுறை பட்டி வச்சு நடத்திருப்போம் நாம் ஒவ்வொருவரும் . இப்போ இது உங்களுக்கான மேடை . பெண்கள் தங்களின் நேரங்களை யாருக்காக செலவிடுகிறார்கள். தங்களின் மனதிற்கு பிடித்ததை செய்யவா ? அல்லது தன்னை சுற்றி இருப்பவர்களின் வேலைகளுக்காக தன் நேரங்களை செலவழிக்கிறாளா ? இது தாங்க இந்த பட்டி தலைப்பின் விவரம்.

(சரி சரி விபரம் சொன்னதெல்லாம் போதும் வழிவிடுங்க நாங்க பேசனும்னு சொல்ற உங்க வாய்ஸ் கேக்குதுங்க ) .

பட்டிக்கு வரும் அனைவரையும் இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன். வாருங்கள் தங்களின் கருத்துகளைத் தாருங்கள்....பட்டியில் பல பல பட்டங்கள் வழங்கப்படவுள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் .

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும் அவ்வளவேதான்.

///ஆனால் நான் பதிவிட நினைத்த ஒன்றை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.. ///
சொல்லியிருக்கலாமே ? அப்பொழுது வாதங்கள் இன்னும் வந்திருக்கும் . நாம் பேசும் கருத்துகள் மற்றவரை புண்படுத்தாமலும் , தலைப்பிற்கு தகுந்ததாகவும் இருந்தால் போதும் . மனதில் உள்ளதை பேசத்தானே அறுசுவையும் பட்டியும் இருக்கிறது . இனி நல்லதை பேச தயங்க வேண்டாம்...:-) நன்றிகள்... தொடர்ந்து பங்களிப்பு தாருங்கள்...

ஃபாத்திமா,
நன்றி நன்றி நன்றி... தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள் தோழி...

நீங்கள் கூறியதுபோல வாதங்கள் குறைவுதான் . காரணம் நான் பட்டி துவங்கிய நாட்கள் பண்டிகை வாரம் என்பதனால் இருக்கலாம் . அறுசுவை பட்டி இல்லாமல் என்னவோ போல இருந்தது . அதுவும் புது தோழிகளுக்கு இது போன்றொரு இழை உள்ளதுன்னு தெரிவிக்கவும் அவர்களையும் கலந்துக்க பழக்கவும் யோசித்து உடனே துவங்கிவிட்டேன் . ஆனால் நீங்கள் கண்டிப்பாக வருவீங்கன்னு தெரியும்...:-) அடுத்தடுத்த பட்டிகளில் கண்டிப்பாக ஜமாய்ச்சுடலாம்...
///அப்படியே அடுத்த பட்டிமன்றத்துக்கான நடுவரை நியமிச்சுடுங்க./// நீங்கள் எப்பொழுது ஃபிரியா இருப்பீங்க ? ( அடுத்த நடுவரா உங்களையே அறிவித்துவிடவா ?) ஒரு நல்ல தலைப்போடு வாங்களேன் ப்ளீஸ்...

அன்பு ஃபாத்திமா,

ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க பதிவைப் பார்த்து.

யெஸ், அந்த இட்லி குறிப்பு நாங்க குடுத்ததுதான். அதுவும் ஆட்டோல வனி வீட்டுக்குப் போய், இட்லி மாவு அரைச்சு, அதை வனி ஃபோட்டோஸ் எடுத்து அனுப்பி வச்சாங்க.

நீங்க பாராட்டியிருப்பது மிக்க மகிழ்ச்சி.

தொடர்ந்து எல்லா இழைகளிலும் உங்க பங்களிப்பை தொடருங்க.

அப்புறம் பட்டி மன்றத்தில் எதிர் அணியில் இருப்பவங்க யாருன்னு கவலைப்படாதீங்க. எதிர் அணியில் இருப்பவங்க உங்க கருத்துக்களைப் பார்த்து ஆச்சரியப்படணும்.

மாற்றுக் கருத்துக்கள் எல்லோரையும் சிந்திக்க வைக்கும். பட்டி மன்றத்தை சுவாரசியப் படுத்தும். அதனால உங்க கருத்துக்களை தொடர்ந்து பதிவிடுங்க.

வாழ்த்துக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரேணுகா,

நடுவராக புதியவர்கள் வரணும், வந்தால் நாமும் இன்னும் உற்சாகமாக பங்கு பெற முடியும்.

கார்த்தி சத்யா, ராஜி சூர்யா, ரேணுகா, கவிசிவா, கல்யாணி முத்துக் குமார்,ஃபாத்திமா, பிரேமா உலகராஜ், இந்துஷா, இவர்களில் விருப்பம் உள்ளவர்கள் தயவு செய்து நடுவராக வருவதற்கு உங்கள் விருப்பத்தை இங்கு பதிவு செய்யுங்க.

பட்டிமன்றத்துக்கான தலைப்புகள்னு ஒரு தனி இழை அதில் இருக்கு. அதில் ஏதாவது ஒன்றையும் செலக்ட் செய்து அறிவிச்சுடுங்க.

ரேணுகா - நீங்க இதை ஃபாலோ செய்து அடுத்த பட்டிமன்றத்தை தொடர்ந்து நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுங்க.

ஒரு வேளை தீபாவளி என்பதால் எல்லோரும் பிஸியாக இருக்காங்க அப்படின்னா, தீபாவளிக்கு அப்புறம் பட்டிமன்றம் தொடங்கலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

நன்றி (“பட்டி மன்றத்தில் எதிர் அணியில் இருப்பவங்க யாருன்னு கவலைப்படாதீங்க. எதிர் அணியில் இருப்பவங்க உங்க கருத்துக்களைப் பார்த்து ஆச்சரியப்படணும்.” ) முயற்சி செய்கிறேன் அம்மா ,

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

அட 2 நாள் வரலங்குறதால பட்டிய முடிச்சு தீர்ப்பு வழங்கிட்டிங்கலா?. நல்ல தீர்ப்பு நானும் ஏற்று கொள்கிறேன்:-)
பூங்கொத்து மிக அழகாக உள்ளது நன்றி நடுவரே அப்படியே அந்த புலாவையும் அனுப்பிட்டா நல்லா இருக்கும் :-)

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

நம்ம நடுவர் தீர்ப்பில் எழுதியது போல் நமக்கான நேரத்தை எடுத்துக்க வேண்டியது தான்( நாளைக்கே சமைக்கும் போது புலாவுக்கும் ஒரு பாத்திரத்தை வைக்கவேண்டியதுதான்)

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

நீங்கள் நடுவராக இருக்க நான் விரும்புகிறேன்..
உங்களுக்கு விருப்பம் என்றால் சுட சுட ஒரு தலைப்பை அறிவித்து விடுங்கள்..
நான் பட்டிக்கு புதிது.. இன்னும் நிறைய கற்றுக்கொண்ட பின் நடுவராகலாம் என்பது என் கருத்து..

விருது பெற்றதில் அப்படியொரு மகிழ்ச்சி !! புதுமுகமான அங்கீகரித்ததற்கு மிக்க நன்றி. தொடர்ந்து பங்கேற்பேன்.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்