" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா ? " பகுதி - 3

ஹாய்.., வந்துட்டீங்களா? குட் ஈவ்னிங்...
குட் ஈவ்னிங், இன்னைக்கு நீ ட்ராயிங் கிளாஸ் எடுக்கலையா ? பசங்க யாரையும் காணோம்!
( என்னவர்)
கிளாஸ் முடுஞ்சுதுங்க. குட்டீஸ் விளையாட போயிருக்காங்க.
சரி நீ என்னவோ சொல்லனும்னு சொன்னயே என்ன அது?
(அப்பாடா நினைவுல வச்சிருக்கார்) அதாங்க ரேணு குடும்பத்தோட வந்திருக்காங்க . கண்டிப்பா சந்திக்கனும் . ஆனா உங்களுக்கு எந்த டைம் ஓக்கேவோ அந்த டைம்ல கூட்டிட்டு போனாபோதும்.

சரி அப்போ நாளைக்கு மதியம் ஊட்டி போகலாம்.(என்னவர்).
(நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை தனிமையோ....., ஒன்னும் இல்லைங்க என்னோட ஃபோன் அடிக்குது).

ஹலோ ரேணு எங்க இருக்கீங்க ? இடம்லாம் பார்த்தாச்சா ?

ஆமா ரேணு நாங்க அங்க பார்த்துட்டு குன்னூர்ல நீங்க சொன்ன இடத்துலதா சாப்பிட வந்திருக்கோம்.( என்ன மக்களே சொல்லாமலே இப்போ எது எந்த ரேணு பேசறதுன்னு புரியும்னு நம்புறேன்).

ஓஒஹோஒ சரிப்பா , இன்னும் நேரம் இருக்கு நேரா ரூம் போகனுமா ?

இங்க வேற ஏதும் இடம் பார்க்க இருக்காப்பா?

வரும் வழில வெலிங்டன் (மிலிட்டரி ஏரியா) இருக்குதுபா . அங்க உள்ள ஒரு முருகன் கோயில் இருக்கு . அதற்கு போகும் வழிலயே வெலிங்டன் லேக் இருக்கு . சாயங்காலம் அங்க கலர் லைட் வாட்டர் டான்ஸ் போடுவாங்க ( colour light water show) . நல்லா இருக்கும் படகு சவாரியும் செய்யலாம் . டைம் இருந்தா பார்த்துட்டு வாங்க.

சரிப்பா. இங்க நீங்க சொன்னமாதிரி சில்லி பரோட்டா ரொம்ப அருமையா இருக்குப்பா. குட்டீஸ்க்கு ரொம்ப பிடிச்சது . சரிப்பா நாங்க பார்த்துட்டு உங்களுக்கு பேசறேன்.

ஓகேப்பா பை.. அவங்கதான் பேசினாங்க. இப்போ குன்னூர்ல இருக்காங்க . அவங்க நாளைக்கு ஒருநாள் ஊட்டி பார்த்துட்டு கிளம்பலாம்னு இருக்காங்க . நம்ம குடும்பத்த பார்க்கத்தான் நாளைக்கு ப்ளேன் போட்டு இருக்காங்க .

சரி நாளைக்கு ஒரு 11 மணிக்கு மேல கிளம்பலாம்....(என்னவர் சொன்னார்,,,,என் மனதினுள் பட்டாம்பூச்சி பறக்குது, இன்னைக்கு ஒரு இரவு கடக்கனும்!!முதல்ல ரேணுக்கு மெசேஜ் அனுப்பனும்).

ரேணு நாளைக்கு மதியம் ஊட்டி தாவரவியல் பூங்கால நாம சந்திக்கலாம் . இங்க இவர்கிட்ட சொல்லிட்டேன் . அங்க சொல்லிட்டு நிலைமை எப்படின்னு சொல்லுங்க. (அப்பாடா மெசேஜ் அனுப்பியாச்சு) .

நாளைக்கு சந்திக்கும் வரைக்கும் எந்த குழப்பமும் வராம இருந்தால் நல்லது . (ரேணுவிடம் இருந்து பதில் மெசேஜ்).

No votes yet

Comments

ம்... இன்னும் சந்திக்கல! ;)

‍- இமா க்றிஸ்

இன்னும் இல்லை இமா :-(

அட நான் குன்னூர்ல இந்த இடம்லாம் பார்க்கவே இல்லயே.. சீக்கிரம் மீட் பண்ணுங்கப்பா

Be simple be sample

னின்னுமா சந்திக்கவில்லை. எல்லா வேலையும் ஒதுக்கி வச்சுட்டு சட்டுபுட்டுன்னு சந்திக்கற வேலையை பாருங்க ரேணு அன்ட் ரேணு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அடுத்த முறை குன்னூர் வரும்போது இந்த இடங்களை மறக்காமல் பாருங்கள்.

அதற்குத்தான் நாங்களும் முயற்ச்சித்துக்கொண்டு இருக்கிறோம்...