குக்குர்முத்தா கீமா

குக்குர்முத்தா கீமா

தேதி: October 18, 2018

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்

மொத்த நேரம்: 30 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

குக்குர்முத்தா (காளான்) - 1 பாக்கெட்
சீரகம் - 1/4 கரண்டி
மிளகு - 4
கிராம்பு - 3
பட்டை - 2 சிறியது
மல்லி தூள் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 5,6
பச்சை மிளகாய் - 1
மல்லி இலை - சிறிது
தயிர் - 2 ஸ்பூன்
எண்ணெய் , உப்பு - தேவைக்கு


 

தேவையான பொருட்களை கொடுக்கப்பட்டுள்ள அளவில் எடுத்து வைத்துக்கொள்ளவும். தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், மல்லி இலைகளை பொடியாக நறுக்கி வைக்கவும்.
தேவையானப் பொருட்கள்
அடுப்பில் வாணலியை வைத்து அதில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, மிளகு, சீரகம் வறுக்கவும். நன்கு வறுபட்டதும் அதனுடன் பூண்டு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். (ஒவ்வொரு பொருட்களையும் மூன்று நிமிடங்கள் வதங்கவிட்டு பின்னர் அடுத்தப் பொருளைச் சேர்க்கவும்).
தாளித்தல்
இது வதங்கும் வேளையில் சுத்தம் செய்த காளானை மிக்சியில் அரைத்து எடுக்கவும். தக்காளி வதக்கியதும் ஆறவிட்டு விழுதாக அரைக்கவும்.
காளான் அரவை
பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில் அரைத்த குக்குர்முத்தாவை சேர்த்து மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரை வதக்கவும்.
காளான் வதக்குதல்
பின்னர் அரைத்து வைத்துள்ள விழுது சேர்க்கவும் . அதனுடன் பொடி வகைகளையும் சேர்த்து வதக்கவும்.
வதக்குதல்
பச்சை வாசனை போனவுடன் தயிர் மற்றும் உப்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்.
கொதிக்க விடுதல்
இறுதியில் மல்லி இலை தூவினால் சூடான சுவையான குக்குர்முத்தா கீமா தயார்.
குக்குர்முத்தா கீமா


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நீண்ட இடைவெளிக்கு பிறகு குறிப்புடன் பார்க்க மகிழ்ச்சி. டிரை செய்துட்டு சொல்லறேன். சூப்பர்

Be simple be sample

மிக்க நன்றிபா, நல்ல சுவையாக இருந்தது. நீங்கள் செய்து சுவைத்து பார்த்து சொல்லுங்கள்.

ரேணு சூப்பர் தோழி இதே ட்ரை பண்ணி பார்த்துட்டு எப்படி இருந்துச்சுனு கூடிய சீக்கிரத்தில் ரிப்ளை பண்ணுறேன்