சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு

சிதம்பரம் கத்தரிக்காய் கொத்சு

தேதி: October 18, 2018

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்

மொத்த நேரம்: 30 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

கத்திரிக்காய் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
புளி - எலுமிச்சை அளவு

தாளிக்க
எண்ணெய்
கடுகு - 1/2 ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 2
கடலை,உளுந்து பருப்பு தலா 1 ஸ்பூன்
கறிவேப்பிலை

கொஸ்து பொடிக்கு
காய்ந்தமிளகாய் - 6
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் சிறிது


 

கடாயில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், கத்திரிக்காய் வதக்கவும். பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு வறுத்து பொடிக்கவும்.
வதக்கல்
வதக்கியவற்றை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
மிக்ஸியில் அரைக்கவும்
கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்கள் சேர்த்து, அரைத்த கத்திரிக்காயை சேர்க்கவும். வதங்கியதும் கொஸ்து பொடியை சேர்க்கவும்.
தாளித்தல்
புளி கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
புளி கரைசல்
பச்சை வாசம் போக கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சிதம்பரம் கத்தரிக்காய் கொத்சு
சிதம்பரம் கத்தரிக்காய் கொத்சு ரெடி.
சிதம்பரம் கத்தரிக்காய் கொத்சு


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு நன்றி

Be simple be sample