
செய்திகள் வாசிப்பது ரேணுகா ராஜசேகரன்
முக்கியச் செய்திகள் :
~~~~~~~~~~~~~~~~~~~~
1 . புதுப்பொலிவுடன் நம் அறுசுவை .
2 . புதுவரவுகளின் கவனத்திற்காக பல .
3 . வருகைப்பதிவேடு அவசியம் .
4 . அட்மினுக்கு நன்றிகள் .
5 . பட்டியில் இழுபறி நிலை .
விரிவான செய்திகள் :
~~~~~~~~~~~~~~~~~~~~
1 . நம் அறுசுவை புதுப்பொலிவுடன் வருகைதந்துள்ளது . பல புதிய வசதிகள்
செய்துகொடுக்கப்பட்டுள்ளன . தமிழில் தளம் என்பதால் தமிழில் பதிவிட தட்டச்சு வசதி
உண்டு . ஆங்கிலத்தை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள் .
2 . புதுவரவுகளான தோழிகளுக்கு சிறு வேண்டுகோள் , ஒரே விஷயம் சார்ந்த சந்தேகங்கள்
கேள்விகளுக்கு பல இழைகள் துவங்குவதை தவிர்க்கவும் . உங்களின்
சந்தேகங்களுக்கான பல கருத்துகள் ஏற்கனவே அறுசுவையில் பேசப்பட்டதாகவும்
இருக்கலாம் . மன்றம் என்ற பிரிவில் பல ஆயிரம் இழைகள் உள்ளன . அதில் உங்களின்
சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கிறதா பாருங்கள் . அப்படி இல்லையென்றால் ஒரு பொது
இழையில் உங்களின் கேள்விகளை பதிவிடுங்கள் . பழைய தோழிகள் முதல் இப்போது
உள்ள தோழிகள் வரை யார் படித்தாலும் விடை தெரியுமானால் உங்களின் பதிவிற்கு
கண்டிப்பாக பதில் கிடைக்கும் .
3 . பழைய தோழிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளதால் அறுசுவையில்
வருகைப்பதிவேடு அவசியம் எடுக்கவேண்டும் என்று பல தோழிகள் விரும்புகின்றனர் .
(இனிமேலாவது ஒழுங்கா வாங்கப்பா)
4 . சமையல் , ஆரோக்கியம் , மன்றம் , கைவினை , வலைப்பதிவு , பல்சுவை இப்படி பல
பிரிவுகள் கொடுத்து அதிலும் பல உட்பிரிவுகல் கொடுத்து , ஒவ்வொரு இழையிலும்
எவ்வளவு பதிவுகள் என உடனடியாக காணும் வசதிகள் , தமிழில் தட்டச்சு , இப்படி பல
வசதிகளுடன் தோழிகளை சுதந்திரமாக உலவவிடுவதற்கு அட்மின் அண்ணாவிற்கு
அனைத்து உறுப்பினர் சார்பாக நன்றிகள் பல .
5. வழக்கம்போல பட்டியில் நடுவரை புலம்பவிட்டு ஓடிச்சென்ற இரு அணிகளுக்காகவும் ,
கலந்து கொள்ளாமல் வெளியே இருந்து வேடிக்கை பார்க்கும் பல நல்ல
உள்ளங்களுக்காகவும் நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளார் நடுவர் . சங்கோஜங்களை விட்டு
தங்களின் கருத்துகளை பதியுங்கள் . தீர்ப்பு வெள்ளியன்று வெளியாகும் என நமது
மன்றப்பேட்டியின் போது நடுவர் கூறியுள்ளார் .
இத்துடன் இந்த செய்திகள் நிறைவடைகின்றன . மீண்டும் செய்திகள்காண நம்
"அறுசுவைக்கு வாருங்கள்... :-) "
வணக்கம்
Comments
ரேணு...
:-) உங்கள் செய்தி அறிக்கையை நிறைய மிஸ் பண்ணினேன். :-) இப்போது சந்தோஷம்.
- இமா க்றிஸ்
ரேணு
ஆஹா மீண்டும் செய்தி அறிக்கை பார்க்கவே சந்தோஷமா இருக்கு. நான் கரெக்டா அட்டன்ஸ் போட்டுட்டேன்.
Be simple be sample
ஆஹா இது சூப்பரா இருக்கே
ஆஹா இது சூப்பரா இருக்கே
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
ரேணு
உள்ளேன் அம்மா... அட்டென்டன்ஸ் போட்டுட்டேன் :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
இமா,
தங்களின் ஆதரவுக்கு நன்றி . நீங்கள் அனைவரும் விரும்பி படிப்பது மிக்க மகிழ்ச்சி :-)
ரேவ்ஸ்,
நன்றிகள் பல ரேவ்ஸ் , தினமும் பிரசண்ட் ஆகிடனுமாக்கும்.
ரேணு,
அனைவரும் கண்டிப்பா தினமும் வரவேண்டும்.
கவி,
///உள்ளேன் அம்மா... அட்டென்டன்ஸ் போட்டுட்டேன் :)///
குட் வெரி குட் இந்தாங்க சாக்லெட் :-)