Swine flu vaccine எடுத்துக்கலாமா?

ப்ரெண்ட்ஸ் எங்க பார்த்தாலும் ஸ்வெயின் ஃப்லூ பரவுதுப்பா. அதுக்கு வேக்ஸின் இன்ஜெக்சன் இருக்கிறதா சொல்றாங்களே...... யாராவது போட்டு இருக்கீங்களா? சின்ன பசங்களுக்கும் அது போடலாமா? யாராவது சொல்லுங்கப்பா ப்ளீஸ்

கண்டிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். நாளை நாங்கள் குடும்பத்துடன் சென்று influvac vaccine injection போட்டுக் கொள்ளப் போகின்றோம். சிறு பிள்ளைகளுக்கும் vaccine போடவேண்டும். மருத்துவராய் இருக்கும் எனது தம்பி குறிப்பிட்டதை இங்கே சொல்கின்றேன்.

தமிழகம், புதுச்சேரி ஆகிய இடங்களில் கடந்த 3 நாட்களாய் மிக அதிகமானோர் பன்றிக் காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கம் போல் அரசாங்கம் இதனை மர்மக் காய்ச்சல் என்றும், இங்கே பன்றிக் காய்ச்சலே இல்லை என்றும் சமாளிக்கத்தான் முயற்சிகள் எடுக்கும். உண்மை நிலை, பெரிய மருத்துவமனைகள், சிறிய மருத்துவமனைகள் என்று எல்லா மருத்துவமனைகளிலும் நிறைய பேர் அட்மிட் ஆகியுள்ளார்கள்.

அரசாங்கம் சில முன்னேற்பாடுகளைச் செய்யாத காரணத்தால் தற்போது வேக்ஸின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வேக்ஸின் கிடைப்பது சிரமமாக உள்ளது. நிறைய தனியார் மருத்துவமனைகளில் வேக்ஸின் இல்லை. அவர்கள் நம்மிடத்தில் வேக்ஸின் வாங்கி வாருங்கள் என்று சொல்கின்றார்கள்.

பன்றிக்காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே சமயம் அதனைப் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை. நார்மலாக இருப்பவர்களை அது பெரிதும் பாதிப்பதில்லை. சில நாட்கள் கடுமையான காய்ச்சல் இருக்கும். பிறகு சரியாகிவிடும். ஏற்கனவே வேறு பிரச்சனைகள் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள், டயாலிஸிஸ் செய்து கொண்டிருப்பவர்கள் இவர்களுக்கெல்லாம் வரும்போதுதான் அது காம்பிளிகேசனாக முடிகின்றது. ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டாலும் அது சிக்கலில் முடியும். எனவே இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. தொண்டை வலி, ஜுரம் இருந்தால் உடனே மருத்துவரை சந்திப்பது, ப்ளட் டெஸ்ட் எடுப்பது நல்லது.

குழந்தைகளுக்கு இந்த வேக்ஸின் ஏற்கனவே கொடுத்து இருப்பார்கள். இருந்தாலும் அது மற்ற சில வேக்ஸின்ஸ் போல் லைஃப் லாங்க் ப்ரொடெக்சன் கொடுப்பதில்லை. மருத்துவர்கள் எல்லாம் கிட்டத்திட்ட ஒவ்வொரு வருடமும் வேக்ஸின் எடுத்துக் கொள்கின்றார்களாம். இது ஒன்று அல்லது ஒன்றரை வருடங்களுக்குதான் எஃபெக்டிவாக இருக்கும். அதன் பிறகு வைரஸின் திறனும் மாறும், வேக்ஸினும் மாறுமாம். ஆகவே, இது ஒரு தொடர்கதை போன்றதுதான். நம்மை பாதுகாத்துக் கொள்ள வேறு வழியில்லை.

இது போன்ற outbreak இருக்கும்போது அது சீனா வின் சதியா, கார்ப்பரேட் சதியா என்றெல்லாம் ஆராயாமல், 700 ரூபாய் செலவு செய்து நம்மை தற்காத்துக் கொள்வது நல்லது. அது சதி வேலையாகவே இருந்தாலும் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. பிரச்சனை இருப்பது நிஜம்.

நான் மேலே சொன்ன விசயங்கள் அனைத்தும் மருத்துவர் கொடுத்த தகவல்கள். நீங்கள் உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நல்ல மருத்துவர் ஒருவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். வேக்ஸின் கிடைத்தது என்றால் உடனே போட்டுவிடுங்கள். இதனால் பாதிப்புகள் எதுவும் இல்லை. இந்த வேக்ஸின் வரும் முன் காப்போம் வகை வேக்ஸின். வந்த பிறகு இது பலனளிக்காது.

என் ப்ரெண்டோட 11 வயசு பையனுக்கு swine flu னு ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க. அங்க இது போல நெறைய கேஸஸ் இருக்குதாம். கேட்கவே பயமா இருக்கு. என் ஹஸ்பெண்ட் வெளியூர்ல இருக்கார். அவர் வந்த பிறகு தான் வேக்ஸின் போட போகணும்.

"ஒரு மணி நேர பேச்சைவிட ஒரு நிமிட சிந்தனை மேலானது"

- மஹா

மேலும் சில பதிவுகள்