ஹட் சிக்கன் பிரெட்

தேதி: March 7, 2007

பரிமாறும் அளவு: 2members

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - 1/4 கிலோ
முட்டை - 2
கடலை மாவு - 1 ஸ்பூன்
மசாலா:
கிராம்பு - 3
சீரகதூள்- 1 ஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 1ஸ்பூன்
தயிர் - 2 ஸ்பூன்
ஏலம் - 3
பட்டை - 1
பல்லாரி - 1
ரொட்டி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
ரஸ்க் தூள் - 100 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு


 

சிக்கனை வேக வைத்து மசிக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடான பின்பு
நறுக்கிய பல்லாரி, மசாலா பொருட்க்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
நன்றாக வதக்கவும்.
சிக்கனுடன் கடலை மாவு, தயிர், உப்பு கலந்து மசாலாவுடன் சேர்க்கவும்.
திக்காக வந்த பின்பு கொஞ்சம் ஆறிய பிறகு கட்லெட் வடிவில் வட்டமாக செய்யவும்.
ரொட்டியில் வெண்ணெய் தடவி அதில் சிக்கனை வைக்கவும்.
அதன் மேலே ஒரு ரொட்டி தூண்டு வைத்து ஒரங்களை தண்ணீர் தடவி ஒட்டி விடவும்.
பின்பு அடித்து வைத்த முட்டையில் முக்கி ரஸ்க் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்