சுழியன்

சுழியன்

தேதி: November 3, 2018

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்

மொத்த நேரம்: 25 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

மைதா மாவு - அரை கப்
கடலைப்பருப்பு - அரை கப்
வெல்லம் - 200 கிராம்
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய் - 2
உப்பு - அரை சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க


 

குக்கரில் கடலைப்பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வெயிட் போட்டு 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். பருப்பு வெந்ததும் திறந்து தண்ணீரை வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சுழியன்
மிக்ஸியில் வேக வைத்த கடலைப்பருப்பில் பாதியளவு, துருவிய வெல்லம், ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். நடுவில் திறந்து கிளறி விட்டு மீதமிருக்கும் கடலைப்பருப்பை போட்டு அரைத்து எடுக்கவும்.
பூரணம்
அரைத்த கடலைப்பருப்பு பூரணத்தை உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
பூரண உருண்டை
ஒரு பெளலில் மைதா மாவு, உப்பு, சோடா உப்பு போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
மைதா கரைசல்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரண உருண்டையை மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போடவும்.
சுழியன் பொரித்தல்
இரண்டு பக்கமும் திருப்பி விட்டு வெந்ததும் எடுக்கவும்..
தீபாவளியின் முக்கிய பலகாரமான சுழியன் ரெடி. இதனை தீபாவளியன்று காலை செய்வதுதான் நல்லது. இது விரைவிலேயே வீணாகிவிடும் தன்மையுடையது.
சுழியன்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நாங்க இதை சுசியம்னு சொல்வோம். சூப்பர்

- பிரேமா

எல்லா புகழும் இறைவனுக்கே