செர்லக்கும் சத்து மாவும் கலந்து கொடுக்கலாமா?

வணக்கம். என் மகனுக்கு 15 மாதங்கள் ஆகிறது. ஒரு நாளைக்கு 3 முறை Cerlac சாப்பிடுகிறான். இப்பொது 1 வேளைக்கு சத்துமாவு(மன்னா) கொடுத்து பார்த்தென். அவன் சாப்பிடவில்லை. அதனால் இன்று முதலில் Cerlac தயார் செய்து பின் சத்துமாவு தயார் செய்தென். பின் இரன்டையும் கலந்து கொடுத்தென். சாப்பிட்டான். இவ்வாறு கொடுக்கலாமா?

செரலாக் வெந்நீரில் / பாலில் வெந்து விடும் தன்மை உடையது. அதனால் அடுப்பில் வைத்து தேவையில்லை. ஆனால் சத்து மாவு நன்கு வேக வேண்டும் இல்லையென்றால் செரிமானம் ஆகாது , குழந்தைக்கு வயிற்று வலி வரும்.

சத்து மாவை தனியாக வேக வைத்து, செரலாக்குடன் சேர்த்து பாருங்கள்.

சத்து மாவு கஞ்சி சாப்பிடாத பட்சத்தில் சுவையை மாற்றுங்கள் உப்பு / இனிப்பு மாறி மாறி கொடுங்கள்.

காலை உணவாக சத்து மாவு கஞ்சி கொடுத்து பாருங்கள். செரலாக் தவிர்த்து வேக வைத்த மசித்த சாதம், பருப்பு மற்றும் நெய் சேர்த்து கொடுங்கள்.வேக வைத்த ஆப்பிள், உருளைக்கிழங்கு, வாழைப்பழம் கொடுங்கள்.

பயண நேரம் மற்றும் எதுவும் சாப்பிடாத நேரத்தில் செரலாக் கொடுக்கலாம்

- பிரேமா

மிக்க நன்றி தோழி பிரேமா... நீங்கள் சொன்ன படி கொடுக்கிறேன். இனிப்பு சுவை பிடிக்கததால் பழங்கள் சாப்பிடுவதில்லை. பழங்களை வேறு எப்படி கொடுக்கலாம் என்று சொல்ல முடியுமா?
இன்றுதான் முதல் முறையாக அறுசுவையில் கேள்வி கேட்டென். பதில் வருமா என்ற சந்தேகத்தில் இருன்தேன். நீங்கள் பதில் தந்ததில் மிக்க மகிழ்ச்சி...

M Esakki

ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி இட்லி தட்டில் வேக வைத்து மசித்து ஊட்டலாம். பல் முளைத்திருந்தால் ஆப்பிளை சிறிய துண்டுகளாக நறுக்கி பவுலில் போட்டு கொடுத்தால் சாப்பிடும். சாத்துக்குடி, மாதுளை ஜூஸ் கொடுக்கலாம். இனிப்பிற்கு சிறிது பனங்கற்கண்டு தூள் சேர்க்கலாம். வாழைப்பழத்தை மசித்து ஊட்டலாம்.
எந்த பழம் கொடுத்தாலும் பகலில் கொடுங்கள்.

வேற எதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள். காலையில் பதில் தருகிறேன்

- பிரேமா

ஆம். வாழைப்பழம் கொடுப்பேன். ஆப்பிள் கொடுத்து பார்க்கிறேன்.தண்ணீர் தவிர நீர் ஆகாரம், பால் எதுவும் குடிக்க மாட்டான். அதனால் ஜுஸ் கொடுக்க முடியவில்லை.
கேரட். பீட்ரூட், உருளை சாதத்துடன் கொடுக்கிறேன். வேறு என்ன காய்கள் கொடுக்கலாம் ?

M Esakki

மேலும் சில பதிவுகள்