கர்ப்ப காலத்தில் ஜலதோசம்

ஹெலோ ப்ரன்ட்ஸ்.. நான் 6 வாரம் கர்ப்பமாக இருக்கிறேன். ஜலதோசத்தினால் அவதிப்படுகிறேன். அடிக்கடி தும்மல் வருகிறது அதனால் கருவிற்க்கு பாதிப்பு ஏற்படுமா?? இந்த ஜலதோசம் சரியாக கை மருந்து இருக்கா?? இந்த நேரத்தில் கை மருந்து எடுத்துக்குலாமா?? உதவுங்கள் ப்ளீஸ்..

இந்த காலநிலையில் பெரும்பாலும் சளி இருமல் வாட்டி எடுக்கிறது..

என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்..நிறைய பேருக்கு உதவலாம்..

இரண்டு நாட்கள் முன்பு எனக்கு பயங்கர சளி, இருமல், தலைவலி, குரல் கூட நன்கு மாறி விட்டது..

வீட்டில் மாத்திரை இல்லை.. தம்பி தினமும் வேலைக்கு சென்று வரும்போது பழங்கள் வாங்கி வருவான்..

எனக்கு ஆரஞ்சு பழத்தில் கமலா ஆரஞ்சு என்றால் அவ்வளவு பிடிக்கும்.. அன்று தம்பி ஆரஞ்சு, மாதுளை வாங்கி வந்தான்..

வாயை கட்டு படுத்த முடியவில்லை.. மதியம் ஒரு ஆரஞ்சு, மாலை ஒன்று, இரவு ஒன்று என்று மூன்று ஆரஞ்சு உள்ளே போய்விட்டது..

மறுநாள் தலைவலி, குரல் நார்மல் ஆகி விட்டது.. சளி குறைந்தது நன்கு உணர முடிந்தது.. மறுநாளும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டேன்.. சளி சுத்தமாக நீங்கி விட்டது..

எந்த மாத்திரையும் போடாமல் முதன் முதலில் சளி நீங்கியதை கண்டேன்..

ஆனால் ஒரு புத்தகத்தில் சளிக்கு எலுமிச்சை சாறு குடித்தால் நீங்கும் என்று படித்தேன்.. அதுவும் உண்மை தான் என்று புரிந்தது..

இனி சளி இருமல் வந்தால் ஆரஞ்சு, மாதுளை, திராட்சை அதிகம் உண்ணுங்கள்..

இயற்கை முறையில் உடலை பாதுகாத்து கொள்ளலாம்..
முயற்சி செய்து பாருங்கள்..

கனிவு கூர்ந்து தகவல் பகிர்ந்த்தற்கு மிக்க நன்றி.. முயற்சித்து பார்க்கிறேன்.. இந்த நேரத்தில் (முதல் 3 மாத கர்ப்பத்தில்) இஞ்சி, தேன் சாப்பிடலாமா?

தேன் சாப்பிடலாம்.. இஞ்சியை தவிர்ப்பது தான் சரி... ஏழு மாதத்திற்கு பிறகு இஞ்சி சாப்பிடலாம்..

குழம்பு வகைகளில் சேர்த்து கொள்ளலாம்.. தனி இஞ்சி தேன் கலந்த சாறு குடிக்க வேண்டாம்..

மேலும் சில பதிவுகள்