
அறுசுவை செய்திகள்
முக்கிய செய்திகள்:
~~~~~~~~~~~~~~~~~~~
1. அறுசுவையில் தீபாவளி
2. தளத்தைக் கலக்கும் ட்ரேஸி
3. மன்றத்தின் போக்கு கடந்த நாட்களில் எப்படி இருந்தது?
4. அடுத்த பட்டிக்கான அறிவிப்பு.
விரிவான செய்திகள்:
~~~~~~~~~~~~~~~~~~~~
இனி விரிவான செய்திகளை பார்ப்போம் .
1. செண்பகாவின் கைவண்னத்தில் இனிப்பு , காரம் என அறுசுவையின் தீபாவளி சிறப்பாக அமைந்தது.
2. இமாவின் ஓலையில்லா ஊர் இது வாயிலாக ட்ரேஸி நமது தளம் முழுக்க துள்ளி குதிக்கிறது.
3. கடந்த காலங்களில் அறுசுவையில் வெவ்வேறு விதமான தலைப்புகள் , இது மட்டும்தான் என்பது போலில்லாமல் பலவிதமான பேச்சுகள் , சுவாரஸ்யங்கள் , கலாட்டாக்கள் கலந்து அறுசுவையும் கலகலப்பாக இருக்கும் . கொஞ்சம் மன சங்கடத்துடன் வருபவர்கள்கூட கச்சேரியில் சேர்ந்து மகிழ்ச்சியாக திரும்புவர் . ஆனால் சில நாட்களாக ஒரே விதமான கேள்விகள் . ஒரே விஷயங்கள் பற்றிய பல சந்தேகங்கள் இப்படி சுற்றி சுற்றி மன்றத்தின் போக்கு ஒரே பக்கமாக இருக்கிறது . தோழிகள் சேர்ந்து அறுசுவையை மீண்டும் கலகலப்பாக்கி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
4. அடுத்த பட்டி வரும் திங்களன்று துவங்கப்படும்.நடுவராக பொறுப்பேற்று நடத்திக்கொடுக்க தோழி பிரேமா அவர்களை அன்போடு அழைக்கிறேன்.
இத்துடன் செய்திகள் நிறைவடைகின்றன. வணக்கம்... :-)
Comments
ரேணு
;))) சிரிக்க வைச்சிட்டீங்க. நன்றி. ;)
- இமா க்றிஸ்
இமா,
மகிழ்ச்சியால் வந்த சிரிப்பா? இல்லை .... :-( அவ்வ்வ்வ் உங்க மைண்டு வாய்ஸ் எனக்கு கேட்கலையே...!
பட்டி
பட்டி முன்னாள் நடுவரே , உங்களை ரேணு என்று அழைக்கலாம ? ( பர்மிசன் கிடைக்குமா? பனிஸ்மண்ட் கிடைக்குமா?)
உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்
பாத்திமா,
கண்டிப்பா பனிஸ்மெண்ட் உண்டு.உடனே ஒருகிலோ பாதுஷா அனுப்பிவைங்க அதுதான் பனிஸ்மெண்ட் :-)
ரேணு கூப்பிடலாம். என்ன விஷயம்னு சொல்லுங்க..:-) பட்டியில் தான் அப்படி கூப்பிடக்கூடாது.
பாதுஷா,
பாதுஷா தானே அனுப்பிவிடலாம் ப்ரோப்லம் என்னவென்றால் , பாதுஷா எப்படி இறுக்கும் (விஷயம் எதுவும் இல்லை பிரண்டாகிடலாம் என்றுதான்) அது சரி நடுவரை கண்ணிக்கு எட்டின தூரம் வரை காணவில்லை ,மேல தளம் ரெடிபன்னிருவோம் , ( வரவேற்பு பலமாக இருக்கட்டும் )
உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்