"தாத்தா, பாட்டிகள் தினம்"

அனைவருக்கும் வணக்கம் ,

என் மகன்களின் பள்ளியில் Grand Parents Day (தாத்தா, பாட்டிகள் தினம்) கொண்டாடினார்கள் . அதில் எனது மகன் வரவேற்பு உரை கொடுத்திருந்தார் . அவரது உரையின் தமிழாக்கம் இதோ உங்களுக்காக :-)

விழாவிற்கு வருகைதந்துள்ள ஒவ்வொருவருக்கும் எனது வணக்கங்கள்,

இன்று நாம் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடுகிறோம் . இந்நாளில் எனது தாத்தா , பாட்டி பற்றி சொல்ல விரும்புகிறேன் . அவர்கள் மிகவும் அன்பானவர்கள் , அதே சமயம் மிகவும் கண்டிப்பானவர்களும் கூட , சில சமயங்களில் தண்டனைகளும் கிடைத்திருக்கின்றன .

"தாத்தா , பாட்டிகள் நடமாடும் வாழ்வியல் நூலகங்கள்" . என் தாத்தா பாட்டியும் அப்படித்தான் . என் தாத்தா எனக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்தார் . வாய்ப்பாடு , ரூபாய்களின் மதிப்பு , கடிதம் எழுதுதல் , கேரம் , கில்லி , கபாடி போன்றவையும் கற்றுக்கொடுத்துள்ளார் . இதையெல்லாம்விட எங்களின் தாய்மொழி , கலாச்சாரம் , பாரம்பரியம் , நல்லொழுக்கம் , கம்பீரம் , தைரியம் இவற்றையும் கற்றுக்கொடுத்துள்ளார் .

நாங்கள் எப்பவெல்லாம் தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்றாளும் நாங்கள் விரும்பும் உணவுகளை செய்து கொடுப்பார் எங்கள் பாட்டி . அவர் செய்வதில் லட்டு மற்றும் பிரியாணி எனக்கும் என் தம்பிக்கும் மிகவும் பிடித்தமானவை . செடிகள் வளர்ப்பது , தோட்டப்பராமரிப்பு இவையெல்லாம் என் பாட்டியிடமிருந்து கற்றுக்கொண்டேன் . மேலும் யாரிடமும் மனம் புண்படும்படி பேசக்கூடாது , விட்டுக்கொடுத்து பழகவேண்டும் என அடிக்கடி சொல்லுவார் . அவர்களது சொல்பேச்சு கேட்டதால்தான் இன்று உங்கள் முன்னால் நல்ல தலைவனாக நிற்கிறேன் .

அவர்களோடு செலவிடும் நாட்கள் எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று . நானும் தம்பியும் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டு இருக்கிறோம் அடுத்த விடுமுறைக்காக . பாட்டியின் லட்டு சாப்பிட்டபடி தாத்தாவோட வண்டியில் கடைவீதி சுற்றிப்பார்க்க . :-)

இன்று எனது தாத்தா பாட்டியால் இங்கு வர இயலவில்லை , அது மிகவும் வருத்தமாக உள்ளது . ஆனால் , எனது நண்பர்களின் தாத்தா பாட்டிகள் எனது உரையை கேட்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உனர்கிறேன் .

" பெரியவர்களுக்கு என்றும் வழிநடத்தவும் , நேசிக்கவும் மட்டுமே தெரியும்.
நாமும் அவர்களை மதித்து நேசிப்போம்..."

நன்றி....

No votes yet

Comments

நான் வேலை பார்க்கும் ஒரு பாடசாலையிலமொவ்வொரு சமயம் ஒவ்வொரு விதமாக திருப்பலி ஒப்புக்கொடுப்பார்கள். பாட்டனார்களுக்கும் பேரர்களுக்கும் ஒரு முறை என்றால் பாட்டிமாருக்கும் பேரர்களுக்குமானது ஒரு முறை நடக்கும். இன்னொரு சமயம் தாய்மார்களும் மகன்மாரும் நடாத்துவார்கள்; மற்றொரு சமயம் தந்தையரும் மகன்மாரும் நடாத்துவார்கள்.

பாட்டாக்களுக்கும் பாட்டிகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் இடையிலான உறவு விசேடம் தான்.

‍- இமா க்றிஸ்

///பாட்டாக்களுக்கும் பாட்டிகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் இடையிலான உறவு விசேடம் தான்.///

இந்த விழா முடிந்து ஊர் சென்றபோது இரு குட்டீஸும் அவர்களது பாட்டன் பாட்டியுடன் முன்பைவிட மகிழ்ச்சியாக இருந்தனர். பேரனின் பேச்சினை காணொளி மூலம் கண்டு மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தனர்.

அதைக் கேட்க நினைத்தேன். எங்காவது பகிர்ந்திருக்கிறீர்களோ! பார்க்க ஆவல்.

‍- இமா க்றிஸ்

இமா,
எங்கும் பகிரவில்லை . தாத்தா பாட்டிமார் தினம் அதனால் நான் அனுமதி வாங்கிக்கொண்டு கடைசியாக அமர்ந்து எடுத்தேன். உங்களுக்கு விருப்பமெனில் முகநூலில் செய்தியாக அனுப்புகிறேன்.

அனுப்பி வையுங்கள். பார்க்க விரும்புகிறேன். நன்றி.

‍- இமா க்றிஸ்

இப்படி ஒரு நாள் , சூப்பர் பா ! எதார்ந்த்தமான உரை தம்பிக்கு வாழ்த்துக்கள்.

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

உரையை படிக்கும்போது என் தாத்தா பாட்டி நினைவுக்கு வந்துவிட்டார்கள்.

Be simple be sample