கன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்

கன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும் அத்திப்பழம் சாப்பிடலாமா எனக்கும் என் கணவருக்கும் எல்லா டெஸ்ட் முடிந்துவிட்டது. என் கருமுட்டை நல்ல வளா்ச்சி பின்பு கருமுட்டை வெடிச்சிருச்சு கணவருக்கும் அவங்க கொடுத்த மாத்திரைகள் விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகாிக்கிறது இன்னும் அதிகாிக்க என்ன மாதிாி உணவுகள் எடுக்க வேண்டும்.

ஒமேகா 3 மாத்திரை பயன்படுத்தலாமா இல்லை டாக்டா் கிட்ட கேட்டுதான் பயன்படு்த்தனுமா

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

அத்திப்பழம் தாராளமாக சாப்பிடலாம். மாத்திரை பற்றி தெரியவில்லை

- பிரேமா

நன்றி

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

இந்த மாதம் பீாியட்ஸ் வந்திருச்சு 2 வது நாள் டெஸ்ட் வரச் சொன்னாங்க டெஸ்ட் பன்னிட்டு Ovral G மாத்திரை 21 நாள் எடுத்துட்டு அடுத்த பீாியட்ஸ் அப்ப 2 வது நாள் வரச் சொன்னாங்க இந்த மாத்திரை எதுக்காக எடுத்துக்குறது தொிந்தவங்க சொல்லுங்க

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

//இந்த மாத்திரை எதுக்காக எடுத்துக்குறது தொிந்தவங்க சொல்லுங்க// :-) தெரியும் ஆனால் சொல்ல மாட்டேன். :-)

ஒரு மாத்திரைக்கு ஒரு பயன்பாடுதான் இருக்க வேண்டும் என்பது இல்லை. இப்படிக் கேள்வியை வைத்தீர்களானால் நாம் எமக்குத் தெரிந்ததைச் சொல்லுவோம். உங்கள் குழப்பம் அதிகமாகும். எந்த ஒரு மாத்திரையையும் மருத்துவர்கள் தேவையைப் பொறுத்து வேறுவேறு விதத்தில் சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம். அதனால், //இந்த மாத்திரை எதுக்காக எடுத்துக்குறது// என்பதைத் தெரிந்து கொள்வதை விட, 'உங்களுக்கு எதற்காகக் கொடுத்தார்கள்?' என்பதை உங்கள் மருத்துவரிடம் தெரிந்து கொள்வது உத்தமம். தெளிவான பதில் கிடைக்கும்; நம்பக் கூடியதாகவும் இருக்கும்.

‍- இமா க்றிஸ்

முதலில் வேறு மாத்திரை பாிந்துரைத்து 7 வது நாள் வரச்சொன்னாங்க பின்பு டெஸ்ட் எடுத்து வந்த பிறகு முதலில் பாிந்துரைத்து மாத்திரை எடுத்தா லைட் இருக்கிறது நீா்கட்டி மாறி பொிது ஆகிவிடும் அதனாலா இந்த மாத்திரை சாப்பிடுங்க சொன்னாங்க அதனாலா கேட்டேன் இது எதற்குாிய மாத்திரை அம்மா என்ன பிராப்ளத்துக்கு எல்லாம் இந்த மாத்திரை சாப்பிடலாம்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

நான் கடந்த 3 மாதங்களாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கிட்டு இருக்கேன்.எனக்கு ஏதும் பிரச்சனைன்னு சொல்லலை எனது கணவருக்கு ஊசி, மாத்திரை எடுக்கும் பொழுது நல்லவே முன்னேற்றம் தொிஞ்சது அதற்கு பிறகு ஊசி வேண்டாம்னு சொல்லிட்டு பொடி மட்டும் எடுத்துகிட சொன்னாங்க. தற்பொழுது டெஸ்ட் பண்ணி பாா்த்ததில் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. டாக்டா் கிட்ட கேட்டேன் ஒவ்வொரு நாள் ஒரு மாறி சொன்னாங்க இருந்தாலும் எனக்கு எப்படியோ இருக்கு அப்படி இருக்க வாய்ப்பு இருக்கா

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

//ஒவ்வொரு நாள் ஒரு மாறி// புரியல. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதில் சொல்றாங்களா அல்லது அப்படித் தான் இருக்கும் என்கிறார்களா? மருத்துவம் பார்த்தும் பலனில்லை என்றால் அந்த மருத்துவத்தைத் தொடர்வது வீண் காலதாமதம் & பண விரயம் இல்லையா? //பொடி// நீங்க சரியான மருத்துவரை அணுகி இருப்பதாகத் தெரியவில்லை. மருத்துவரை மாற்றுவது நல்லதோ!

‍- இமா க்றிஸ்

ஒவ்வொரு நாளும் ஒரு மாறி தான் இருக்கும் என்கிறாா்கள் (விந்தனுக்களின் எண்ணிக்கை)
எனக்கு மிகவும் கவலையாக உள்ளது

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

நீங்கள் வேறு மருத்துவரைப் பார்ப்பது நல்லது என்பேன். என்ன விதமான மருத்துவம் எடுக்கிறீர்கள்?

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்