பட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா? நிதி ஒதுக்குவது நல்லதா ? “

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்கள், நான் இன்று விவாதத்திற்காக தேர்வு செய்த தலைப்பு ,”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்க அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா? நிதி ஒதுக்குவது நல்லதா ? “ அதாவது நம் அன்பு குழந்தைக்காக நம் நமது நேரத்தை செலவிட வேண்டுமா அல்லது காசு, பணம், நகை என சேர்பதா எது நல்லது? இத்தலைப்பை பற்றி உங்கள் கருத்துக்களை பதிவிட அன்புடன் அழைக்கிறேன் . அட்மின் அண்ணா , அண்ணி , அன்பு ரேணு, வாணி அக்கா , இமாம்மா, சீதாம்மா , தோழி பிரேமா ,தோழி இந்து மற்றும் அறுசுவை உறுப்பினர்கள் அனைவரையும் அன்பேடு பட்டிக்கு அழைக்கிறேன் . முதல் தடவை பட்டி ஆரப்பித்திருக்கிறேன் என்பதால் தவறேதும் இருந்தால் மன்னித்து உங்கள் பங்களிபை வழங்குமாறு கேட்டு கொள்கின்றேன். ( யாருடைய மனமும் புண்படாமலும், நகைச் சுவையும் கலத்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்) பட்டி இன்று வியாழ கிழமை ஆரபித்து அடுத்த வியாழன் இத்தலைப்பு தீர்ப்பு வரும் ,
மன்ற விதிமுறைகள்
1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் சார்ந்து பேசக்கூடாது.
3. அரட்டை கூடாது.
4. ஜாதி, மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.
அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்
வாய்புக்கு நன்றி ரேணு.

பட்டி தொடங்கியாச்சி, இனி உங்கள் வரவாள் இப் பட்டி கலைகட்டடும், முக்கியமாக எல்லேறுக்கும் சாக்லேட் உண்டு

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

அறிமுக நடுவருக்கு முதலில் எனது வணக்கங்கள்மற்றும் வாழ்த்துக்கள்.
நல்ல தலைப்பு நான் நிதி ஒதுக்குதல் நல்லது அணியில் பேசப்போகிறேன்.

வாங்க வாங்க , முதலால வந்து பட்டியை தொடங்கிவச்சுடிங்க உங்களை பன்னீர் தொலித்து வரவேற்கிறேன்,

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

வாழ்த்துக்கள் நடுவரே !!

நான் குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற அணிக்காக வாதிட போகிறேன் !!

எனக்கு ஒரு டெய்ரி மில்க் சாக்லேட் பார்சல் :)

- பிரேமா

பெற்றோர்கள் குழந்தைகளுக்காக நேரத்தையே ஒதுக்க வேண்டும் என்று அணியின் சார்பாக என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்..

பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்கும் வீட்டில் எந்த தவறும் நடக்காது.. அந்த குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வருவது மட்டும் அல்லாமல் வாழ்க்கையை கற்று கொள்வார்கள்..

பெற்றோர்கள் நேரத்தை செலவிடாமல் பணம், நகை என்று அழைந்ததன் விளைவாக என்னென்ன வரும் என்று உணர்ந்தவள் நான்..

நானும் என் தம்பியும் பல தடவை பேசி கொள்வோம்..

இம்போதும் நினைக்க நினைக்க கவலையாக உள்ளது.. நகை மீது நாட்டம் கொண்ட என் அம்மா எங்கள் உடல்நலம் பற்றி சற்றும் கவலை படவில்லை.. அதன் விளைவாக எந்த பலமும் எங்களிடம் இல்லை..

கீழே அரை மணி நேரம் உட்கார்ந்து எழ கூட முடியவில்லை..இதனால் பணம், நகையையே நானும் என் தம்பியும் வெறுத்து விட்டோம்..

பணம் நமக்கு போதுமான அளவு இருந்தால் போதும்.. பணம் அதிகமமோ கம்மியோ பெற்றோர்கள் சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை..

ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தனிப்பட்ட பொறுப்புகள் இருக்கிறது. பெற்றோர்கள் சேர்த்து வைத்து விட்டு சென்றால் பிள்ளைகளுக்கு சோம்பேற்த்தனம் வந்து விடாதா!!

அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து அவர்களூடன் பேசி சிரித்து நேரத்தை ஒதுக்கினாலே சிறந்தது என்று கூறி விடைபெறுகிறேன் நடுவரே...

வாய்ப்புக்கும் தலைப்புக்கும் என் நன்றிகள்..

ஒரு குழந்தை வளர பணம் தேவை தான். ஆனால் பணம் இருந்தால் மட்டும் குழந்தை வளர்ந்து விடாது. குழந்தை வளர்வதில் பெற்றோருக்கே முதல் பொறுப்பு. அவர்கள் தான் குழந்தைக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். ஒரு குழந்தை நல்ல முறையில் வளர பெற்றோருக்கே அதிக பங்கு.

நல்லது கெட்டதுகளை குழந்தைகள் பெற்றோரிடமிருந்தே முதலில் கற்று கொள்கிறது. ஆரம்ப காலத்தில் இருந்தே குழந்தைக்கு கருவறையில் கிடைத்த அந்த அன்பும் அரவணைப்பும் தேவை. அதை பெற்றோரை தவிர வேறு யாராலும் சரியாக கொடுக்க முடியாது.அப்படியே கொடுத்தாலும் அது பெற்றோர் கொடுத்த மாதிரி இருக்காது.

வாதம் தொடரும்....

- பிரேமா

//பெற்றோர்கள் சேர்த்து வைத்து விட்டு சென்றால் பிள்ளைகளுக்கு சோம்பேற்த்தனம் வந்து விடாதா!!// கண்டிப்பாக சோம்பேறித்தனம் வந்து விடும். உண்மையான வாதம்தான் ஆனால் எதிர் அணி இதற்கு என்ன எதிர் வாதம் வைக்கிறார்கள் என பார்ப்போம்.

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

//நல்லது கெட்டதுகளை குழந்தைகள் பெற்றோரிடமிருந்தே முதலில் கற்று கொள்கிறது// ஆம் ,

//ஆரம்ப காலத்தில் இருந்தே குழந்தைக்கு கருவறையில் கிடைத்த அந்த அன்பும் அரவணைப்பும் தேவை // என்பதை கூறி தனது வாதத்தை வைத்திருக்கிறார் நமது தோழி பிரேமா, எதிரணி இதற்கு என்ன பதில் வைத்திரிக்கின்றீர்கள் ?

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

//நகை மீது நாட்டம் கொண்ட என் அம்மா எங்கள் உடல்நலம் பற்றி சற்றும் கவலை படவில்லை.. அதன் விளைவாக எந்த பலமும் எங்களிடம் இல்லை..

கீழே அரை மணி நேரம் உட்கார்ந்து எழ கூட முடியவில்லை// இந்து பட்டிக்கு இத்த தலைப்பை வைக்க காரணம் நம் சமூகத்திக்கு ஒரு விழிப்புணர்வு கொடுக்கவே, நல்லதொரு எடுத்துக்காட்டு இதற்கு பதில் எதிரணியில் எதும் இருக்குமா பொறுத்திருந்து பார்போம்.

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

காசு பணம் சேர்த்து கொண்டே போனால் நம் கடந்த காலத்தை நினைத்து மகிழ்ச்சி அடைய முடியுமா?

பணம் பணம் என்று அலைந்தால் நிம்மதி கிடைக்குமா.. சரி எனக்கு தோன்றியதை சொல்கிறேன்.. ஒரு பெற்றேராக இருந்து கஷ்ட பட்டு உழைத்து நிறைய சேர்த்து வைத்து விட்டார்கள் என்று வைத்து கொள்வோம்.. அந்த குழந்தை நம் வீட்டில் இருக்கும் பணத்திற்கு நாம் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று முடிவு எடுத்து எந்த வேலைக்கும் போகாமல் நன்பர்களோடு சுற்றி விட்டு தினமும் வீடு வந்தால் நிம்மதி இருக்கும்..

அப்போ பெண் குழந்தைக்கு பணம் சேர்த்தால் உதவுமா என்று கேட்கிறீர்களா..நிச்சயம் இல்லை.. பணம் நகை எல்லாம் நம்மை விட்டு நொடி பொழுதில் போய்விடும்.. எ.டு. தற்போது வந்த 'காஜா புயல்' என்று கூட சொல்லலாம்..

நம் செல்வங்கள் வீடு வாசல் இவையெல்லாம் ஒரு உயிறற்ற பொருள் என்பதை உணர வேண்டும் ஒவ்வொரு பெற்றோரும்.. நாம் போகும் போது எதையும் எடுத்து செல்ல போவது இல்லை..

இருக்கிற நாட்களில் சொத்து வீடு நிலம் நகை என்று ஓடி ஓடி உழைக்கால்.. தேவையான பணத்தை சம்பாதித்து அன்றாடம் ஒரு மணி நேரமாவது குழந்தைகளுக்காக ஒதுக்கி மகிழ்ச்சியாக இருங்கள்..

மேலும் சில பதிவுகள்