பட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா? நிதி ஒதுக்குவது நல்லதா ? “

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்கள், நான் இன்று விவாதத்திற்காக தேர்வு செய்த தலைப்பு ,”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்க அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா? நிதி ஒதுக்குவது நல்லதா ? “ அதாவது நம் அன்பு குழந்தைக்காக நம் நமது நேரத்தை செலவிட வேண்டுமா அல்லது காசு, பணம், நகை என சேர்பதா எது நல்லது? இத்தலைப்பை பற்றி உங்கள் கருத்துக்களை பதிவிட அன்புடன் அழைக்கிறேன் . அட்மின் அண்ணா , அண்ணி , அன்பு ரேணு, வாணி அக்கா , இமாம்மா, சீதாம்மா , தோழி பிரேமா ,தோழி இந்து மற்றும் அறுசுவை உறுப்பினர்கள் அனைவரையும் அன்பேடு பட்டிக்கு அழைக்கிறேன் . முதல் தடவை பட்டி ஆரப்பித்திருக்கிறேன் என்பதால் தவறேதும் இருந்தால் மன்னித்து உங்கள் பங்களிபை வழங்குமாறு கேட்டு கொள்கின்றேன். ( யாருடைய மனமும் புண்படாமலும், நகைச் சுவையும் கலத்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்) பட்டி இன்று வியாழ கிழமை ஆரபித்து அடுத்த வியாழன் இத்தலைப்பு தீர்ப்பு வரும் ,
மன்ற விதிமுறைகள்
1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் சார்ந்து பேசக்கூடாது.
3. அரட்டை கூடாது.
4. ஜாதி, மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.
அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்
வாய்புக்கு நன்றி ரேணு.

எந்த பெற்றோரும் தன் பிள்ளைகளுக்கு நேரமே ஒதுக்காமல் அலைவதில்லை. அப்படியும் ஒருசிலர் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால் தகுந்த காரணம் இருந்திருக்கும்.
எதிரணித்தோழி தன் வாழ்வையே உதாரணம் காட்டினார். ஆனால் அவரது அன்னை இவர்களுக்காகதான் சேர்த்துவைத்தார் என்பதனை ஏனோ மறந்துவிட்டார் போல!. அடுத்து பெற்றோர் தங்களுடன் அதிகநேரம் செலவழிக்கவில்லை என்றால்கூட வாழ்வில் நல்லொழுக்கங்கள் கற்று சமுதாயத்தில் நல்ல அம்மாவாக, நல்ல மனைவியாக,தோழியாகத்தானே உள்ளார்?!

//////ஆரம்ப காலத்தில் இருந்தே குழந்தைக்கு கருவறையில் கிடைத்த அந்த அன்பும் அரவணைப்பும் தேவை //// உண்மைதான் அதே அரவணைப்பும் அன்பும் காரணமில்லாத பயத்தை ஏற்படுத்தும். அந்த பயம் பிள்ளைகளின் வளர்ச்சியை பாதிக்கும் என்பது எனது கருத்து. பிள்ளை எழுந்து நடக்க ஆரம்பிக்கும் போதே விழுந்துவிடுமோ என்ற பயத்தில் பின்னாடியே சுற்றும் பெற்றோர்கள் இவர்கள். கண்ணையும் புத்தியையும் அவர்களிடமே வைத்திருந்தாலும் கண்டுகொள்ளாததுபோல இருந்து, விழுந்தாலும் ஏதும் இல்லை கண்ணா இப்படிதான் பழகவேண்டும். இதில் உன் முயற்சியால் வெற்றிபெறவேண்டும் என நடைமுறையை கற்றுக்கொடுக்கொடுக்கும் பெற்றோர் நாங்கள்.

எத்துனை இடங்களில் பார்க்கிறோம் கத்தி வைத்து வெறித்தனமாக குத்தி ஒரு மனிதரை கொன்று கூட நகை காசுகளை பறிக்கிறார்கள்..

அப்படி அந்த திருடர்கள் பணம் சேர்த்து என்ன செய்ய போகிறார்கள்.. ஒவ்வொரு மனிதரும் தேவைக்கேற்ற பணத்தை வேண்டாம் என்று ஒதுக்கினாலே எந்த கஷ்டமும் வராது.. உலகில் ஏழைகள் இருக்க மாட்டார்கள்.. இது உலகிற்கு மட்டும் இல்லாமல் நம் குழந்தைகளுக்குமான மொழி..

அன்மையில் என் அப்பா சொன்ன கதை.. முன்பெல்லாம் வீட்டில் இரண்டு கிலோ மூன்று கிலோ கடலை அவித்து , ஒரு பானை நிறைய கருப்பட்டி காபி போட்டு இறக்கி வைப்பார்கள்.. அந்த பக்கமாக போகும் அனைவரையும் அழைத்து ஊற்றி கொடுப்பார்கள்..அதுவே அவர்களது உணவாக இருந்தாலும் அனைவருக்கும் பகிர்ந்தார்கள்.. ஆனால் அப்போது யாரும் பஞ்சம் பசி கவலை இல்லாமல் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள்.

ஆனால் இப்போது நம் குழந்தைகளுக்கு பணம் வீடு நகை சேர்த்தால்தான் பொறுப்பான பொற்றோர் என்ற மாயை பரவி வருகிறது..

இதனை படித்தவர்கள் மாற்றி அமைக்க வேண்டாமா.. உலகில் வரதட்சணை வாங்காமல் எந்த பெண் தன் மகனுக்கு மணம் முடிக்கிறாளோ அன்றே இந்த சமுதாயம் மாறும்..

மாற்றம் நம்மை தேடி வராது நம்மில்தான் உள்ளது.. முடிந்த வரை குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் கற்று கொடுங்கள்.. மகிழ்ச்சியாக வாழலாம்..

///எ.டு. தற்போது வந்த 'காஜா புயல்' என்று கூட சொல்லலாம்..///இதே கஜா புயலின்போது ஒரு அம்மா அழுகுதுங்க, கூட இருந்தே தூக்கி கொடுத்துட்டோம் ஐயா என்புள்ளைய.... இப்படி சொல்லி அழுகுது. சுனாமியை யாரும் மறந்திருக்க முடியாது எத்தனை பிள்ளைகள் அலையில் பெற்றோர் கண்முன்னே அடித்து செல்லப்பட்டார்கள்? கூட இருந்த பெற்றோரால் என்ன செய்ய முடிந்தது?
///நம் செல்வங்கள் வீடு வாசல் இவையெல்லாம் ஒரு உயிறற்ற பொருள் என்பதை உணர வேண்டும் ஒவ்வொரு பெற்றோரும்.. நாம் போகும் போது எதையும் எடுத்து செல்ல போவது இல்லை..///
நிஜம்தான் நீர் புகுந்த நாட்களில் வீட்டைவிட்டு ஓடினார்கள்தான். இவை உயிர் இல்லா பொருட்கள்தான். நீர் வடிந்ததும் உறவினர்கள், அரசாங்கம் என அனைத்தும் உதவாத நிலையில் மீண்டும் திரும்பியது அவரவர் வீடுகளுக்கே. மீண்டும் வாழ்வை துவங்கிட சேர்த்துவைத்த பணமும் காசுமே உதவும்.
நிஜம்தான் போகும்போது யாரும் எதையும் எடுத்து செல்வதில்லை. ஆனால் நமக்குப் பிறகு நம் பிள்ளைகளை யாரிடமும் கையேந்தும் நிலைக்கு தள்ளக்கூடாது என்றே ஒவ்வொரு பெற்றோரும் சேர்த்து வைக்கின்றனர்.

எதிரணி தோழியின் கருத்துகளை வரவேற்கிறேன்.. சேர்த்து வைப்பது எமக்காக தான் என்றாலும் எம்மனம் அதை வைத்து நிம்மதி அடையவில்லையே..

இன்றும் அவர்களால் பாசமான தாயாக நடந்து கொள்ள முடியவில்லையே.. இன்னும் சேர்த்து கொண்டு இருக்கிறார்கள்.. கேட்டால் இந்த சமூகம் அப்போது தான் நம்மை மதிக்கும் என்று சொல்கிறார்கள்.

சமூகம் வேறு யாரும் இல்லை நாம்தான் என்று உணர மறந்து விட்டார்கள்.. ஒவ்வொருவரும் மாறினால் சமூகம் மாறி விடும் என்று யோசிக்க மறந்து விட்டார்கள்..

எதிரணி தரப்பில் சொன்னதை ஏற்று கொள்ள முடியவில்லை.. குழந்தைகளை நாங்கள் நடக்க வைக்கிறோமே தவிர விலையுயர்ந்த கார் சிறுவயதிலேயே வாங்கி கொடுத்து சோம்பேறி ஆக்கவில்லை..

இன்னும் என் குழந்தையை நடந்து பள்ளி சென்று கூட்டி வர வேண்டும் என்று ஆசையில் உள்ளேன்.. தினமும் குழந்தையுடம் பேசிக்கொண்டே பள்ளிக்கு விட வேண்டும்..

நினைத்து பாருங்கள் மாடர்ன் உலகம் என்று நினைத்து தூரத்தில் இருக்கும் பள்ளிக்கு ஒரு பெரிய தொகையை கட்டி அனுப்புகிறோம்.. குழந்தை காலை 7 மணிக்கு வேன் ஏறுகிறது.. மாலை 6மணிக்கு வீடு திரும்புகிறது.. வேனில் ஒரு ஆயா இருப்பார் பேசாமல் வர வேண்டும் என்று குழந்தையை கண்டிப்பார்.குழந்தைக்கு என்ன நிம்மதி இருக்கிறது அதில்..

அப்படி நம்பர்1 பள்ளியில் படித்தால் மட்டும் தான் சாதிக்க முடியுமா?குழந்தை நேரம் வீனாகவல்லவா போகிறது..

பிள்ளைகளிடம் அதிக நேரம் எடுத்து அவர்களின் ஒவ்வொரு செயலிலும் இது சரி, இதனை இப்படி செய்யக்கூடாது இப்படி எங்கும் எதிலும் பாடம் கற்றுக்கொடுத்தால் நல்ல பிள்ளைகள் ஆவார்களா நடுவரே?!!

//எத்துனை இடங்களில் பார்க்கிறோம் கத்தி வைத்து வெறித்தனமாக குத்தி ஒரு மனிதரை கொன்று கூட நகை காசுகளை பறிக்கிறார்கள்..///

வேடிக்கையாக உள்ளது நடுவரே, இவங்க சொல்றத பார்த்தால் தீவிரவாதிகள் உருவாவதுகூட பெற்றோர்களால் நேரம் ஒதுக்காததால் தான் என்று சொல்வார்கள்போல!!
இப்பவெல்லாம் காலம் மாறிவிட்டது படித்து பெரிய பதவியில் இருப்பவர்கள்தான் நுணுக்கம் தெரிந்துகொண்டு கொள்ளையடிக்கின்றனர். அவர்களையெல்லாம் என்ன சொல்வது???

பெண்பிள்ளைக்கு நகை பொருட்கள் கொடுப்பதே எந்த நிலையிலும் உன் பெற்றோர் உனக்கு உதவியாகவே இருப்போம். நாங்கள் இல்லாத சூழலில் ஏதேனும் துன்பம் உனக்கு வருமாயினும் கூட இதனை வைத்து சமாளித்து மேலே வஎஅவேண்டும்டா கண்ணா என்று சொல்வதற்குத்தான் நடுவரே...
ஆமாம் நடுவரே எனக்கு ஒரு சந்தேகம். என்னோடு நேரம் செலவழிக்காம நீ சேர்த்து வைத்த நகை பணம் எனக்கு வேண்டாம் என்று கூறி எந்த பெண்ணும் கூறியதாக எனக்கு நினைவில்லை. உங்களுக்கு ஏதேனும் நினைவிருக்கா??

///சமூகம் வேறு யாரும் இல்லை நாம்தான் என்று உணர மறந்து விட்டார்கள்.. ஒவ்வொருவரும் மாறினால் சமூகம் மாறி விடும் என்று யோசிக்க மறந்து விட்டார்கள்../// நினைப்பவர்கள் நினைத்துக்கொண்டே இருந்தால் எப்படி சமுதாயம் மாறும் நடுவரே ?

//அப்படி நம்பர்1 பள்ளியில் படித்தால் மட்டும் தான் சாதிக்க முடியுமா?குழந்தை நேரம் வீனாகவல்லவா போகிறது..// கேளுங்க நடுவரே, நல்லா கேளுங்க, குழந்தைக்கே நேரமில்லாத உலகில் எந்த குழந்தைகளுக்காக பெற்றோர் நேரம் ஒதுக்குவது ???

குழந்தைகளுக்கு நிறைய வேலைகள் ,பொழுதுபோக்குகள், அவர்கள் அவர்களது வேலையில் இருக்கும்போதுதான் நாங்கள் அவர்களுக்காக எங்கள் நேரத்தை பொருளீட்டுவதற்காக செலவுசெய்கிறோம் . அவர்களுக்கு எப்போதெல்லாம் நாங்கள் தேவையோ கண்டிப்பாக அங்கும் நாங்கள் இருக்கிறோம்.

//அரவணைப்பும் அன்பும் காரணமில்லாத பயத்தை ஏற்படுத்தும். அந்த பயம் பிள்ளைகளின் வளர்ச்சியை பாதிக்கும் என்பது எனது கருத்து. // சிந்திக்க வேண்டிய விடயம் பல முறை நானே இதை பற்றி சிந்தித்திறுக்கிறேன். நாம் இல்லா விட்டாலும் நம் பிள்ளைகள் சுயமாக சமூகத்தின் முன் நிட்க பழக வேண்டும்.

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

//தீவிரவாதிகல் உருவாவதுகூட பெற்றோர்களால் நேஅம் ஒதுக்காததால் தான் என்று சொல்வார்கள்போல!! // இருக்கலாம் . பிள்ளைகள் நல்லவர் ஆவதும் , தீயவராவதும் அன்னை வளர்பினிலே என்று நாம் சொன்னாலும் , தாய் , தந்தை இல்லாமல்
வளர்ந்தவர்கள் சமூகத்தில் நல்ல நிலமையில் இறுப்பதும் நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

உங்கள் வாதம் அனல் பறக்கிறது வாழ்த்துக்கள். மற்ற அறு சுவை உறுப்பினர்களின் கருத்துக்களையும் எதிர் பார்க்கிறேன்.

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

இந்த இழை எடிட் செய்யப்பட்டது :

நடுவர் பெயர் கூறி அழைக்கலாம் என்பது தெரியாமல் நான் நடுவரையே குறை கூறி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் நடுவரே !!

- பிரேமா

மேலும் சில பதிவுகள்