பட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா? நிதி ஒதுக்குவது நல்லதா ? “

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்கள், நான் இன்று விவாதத்திற்காக தேர்வு செய்த தலைப்பு ,”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்க அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா? நிதி ஒதுக்குவது நல்லதா ? “ அதாவது நம் அன்பு குழந்தைக்காக நம் நமது நேரத்தை செலவிட வேண்டுமா அல்லது காசு, பணம், நகை என சேர்பதா எது நல்லது? இத்தலைப்பை பற்றி உங்கள் கருத்துக்களை பதிவிட அன்புடன் அழைக்கிறேன் . அட்மின் அண்ணா , அண்ணி , அன்பு ரேணு, வாணி அக்கா , இமாம்மா, சீதாம்மா , தோழி பிரேமா ,தோழி இந்து மற்றும் அறுசுவை உறுப்பினர்கள் அனைவரையும் அன்பேடு பட்டிக்கு அழைக்கிறேன் . முதல் தடவை பட்டி ஆரப்பித்திருக்கிறேன் என்பதால் தவறேதும் இருந்தால் மன்னித்து உங்கள் பங்களிபை வழங்குமாறு கேட்டு கொள்கின்றேன். ( யாருடைய மனமும் புண்படாமலும், நகைச் சுவையும் கலத்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்) பட்டி இன்று வியாழ கிழமை ஆரபித்து அடுத்த வியாழன் இத்தலைப்பு தீர்ப்பு வரும் ,
மன்ற விதிமுறைகள்
1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் சார்ந்து பேசக்கூடாது.
3. அரட்டை கூடாது.
4. ஜாதி, மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.
அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்
வாய்புக்கு நன்றி ரேணு.

'எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே.. அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே'...என்ற பாடல் வெறும் பாட்டு மட்டும் அல்ல பெற்றோரின் பொறுப்பை எடுத்துரைக்கிறது..

குழந்தைக்கு நேரம் ஒதுக்கி நல்லதை கற்று கொடுக்காவிட்டால் எப்படி வருங்காலம் செழிப்படையும்.

எதிரணி தோழி என் வாதத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை.. காலை7 மணி செல்லும் குழந்தை மாலை 6 மணிக்கு வீடு திரும்புகிறது என்றால் குழந்தைக்கு நேரம் கிடைப்பது இல்லை என்று அர்த்தம் இல்லை..

குழந்தைக்கான நேரத்தை பெற்றோர் தன் சுயநலத்திற்காக அழிக்கிறார்கள்.. ஏன் அருகில் உள்ள பள்ளியில் படித்தால் குழந்தையின் அறிவு வளராதா? நான்கு மணி நேரம் ட்ராவலில் கழிக்கலாமா..

குழந்தைக்கு காசு பணம் சேர்த்து வைப்பதை விட நல்லது கெட்டது சொல்லி கொடுத்து அருகில் இருந்து வாழ்க்கையை கற்று கொடுப்பதே சிறந்தது..

'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பார்கள்.. எனவே முளை விடும்போது அவர்ளுடன் இல்லாமல் பிறகு நாங்கள் என்ன குறை வைத்தோம்? எது கேட்டாலும் வாங்கி கொடுத்தோமே? செல்லமாக வளர்த்தோம் என்று பிற்காலத்தில் புலம்பாமல் இருக்கலாம்..

ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை மீது அக்கறை எடுத்து வளர்க்க வேண்டும்.. கண்டிப்பாக அந்த பயம் இருக்க வேண்டும்.. நம் குழந்தைகள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்..

குழந்தைக்காக சம்மதிக்கிறோம் என்று தினமும் ஓடி ஓடி உழைக்கிறோம் அதனால் குழந்தையுடன் நாம் இருக்கும் சிறந்த தருணங்கள் பறிக்கப்படுகின்றன / தெரிந்தும் தொலைக்கப்படுகின்றன. அந்த தருணங்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் மீண்டும் கிடைக்குமா?

அவர்கள் முதன் முதலில் நடக்க, பேச, சிரிக்க ஆரம்பித்த அந்த மழலை தருணங்கள் அனைத்தையும் இழந்திருப்போம். அதையெல்லாம் திரும்ப பெற முடியுமா?

பணம் இன்று வரும் நாளை போகும். நாளை பணத்தையெல்லாம் சேர்த்து வைத்து விட்டு குழந்தையை பார்க்க திரும்பினால் குழந்தை எப்படியோ வளர்ந்து நிற்கும். அதற்கு நாம் கஷ்டப்பட்டு சம்மதித்தது தெரியாது. எனக்கு ஒரு வாய் சோறு கூட ஊட்டியதில்லை எங்க அம்மா; எப்ப பார்த்தாலும் பணம் பணம்னு இருக்காங்கன்னு பிற்காலத்தில் அந்த குழந்தை புலம்புமல்லவா!! நாம் செய்ததெல்லாம் அந்த குழந்தைக்காகத்தான் என்பதை அந்த குழந்தை தான் தாய் / தந்தை ஆனபின் தெரிந்தும் புரிந்தும் நமக்கென பயன்..?

சம்பாதிப்பதும் அவசியம் தான். ஆனால் குழந்தை ஒரு நிலைக்கு வரும் வரை அதாவது தான் செயல்களை தானே விருப்பப்பட்டு செய்யும் நிலை / ஒரு வித புரிதல் வரும் வரை பெற்றோர் குழந்தைகளோடு நேரம் செலவழிக்க தான் வேண்டும். வேலைக்கு சென்றாலும் கூட குழந்தைக்கான சில நேரங்களில் அவர்களோடு செலவிட முடியாத தாய்மார்களையும் பார்க்க தான் முடிகிறது.

வீட்டிலிருந்தே சம்பாதிக்கும் வேலைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதை சமயோஜிதமாகவும் சிறப்பாகவும் பயன்படுத்தி குழந்தைகளோடும் நேரம் செலவழித்து சம்பாதிக்கும் தாய்மார்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் தான் உள்ளனர்.

குழந்தைகளுக்கான பணத்தை / நிதியை சேர்த்து விட்டோம் என்று நாம் திரும்பி பார்த்தால் நம்மை சுற்றிலும் பணம் மட்டுமே இருக்கும். ஏன் நம் குழந்தைகளே வளர்ந்து அவர்களுக்கான தேவைகளை அவர்களே ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்து நிற்பார்கள்; அந்த நேரம் விளையாட்டு பொருளாகத்தான் தெரியும். ஏனெனில் அவர்கள் சிறு வயதில் பணப்பற்றாக்குறையை அனுபவித்திருக்க மாட்டார்கள்; கஷ்ட நஷ்டங்களை தங்கியிருக்க மாட்டார்கள்; நினைத்தது கிடைத்திருக்கும்; அவர்களுக்கு பணத்தின் அருமை புரியாது. அதற்கான வாய்ப்பை பறிப்பது நாமல்லவா?

ஆகவே குழந்தைகளோடு நாம் செலவழிக்கும் நேரம் விலை மதிப்பில்லாதது; அந்த பொன்னான தருணங்களை தான் நாம் சேமிக்க வேண்டும்; அது தான் காலத்தால் அழியாதது; களவாடப்படாதது;

- பிரேமா

நடுவரே எதிரணி தரப்பில் அழகாக விளக்கியுள்ளார்.. நகை கஷ்டப்படும் காலம் முன்னேறுவதற்காக பெற்றோர்கள் கொடுக்கிறார்களாம்..

அப்போ எந்த ஆண் மகனுக்கும் ,பெண்களுக்கும் தன்னம்பிக்கை இல்லையா இவ்வுலகில்..

நகையை நம்பி வாழ முடியுமா? நல்லொழுக்கங்களும் அறிவும் இருந்தால் எப்பாடு பட்டாவது முன்னுக்கு வந்து விடுவார்களே..இதை சமூகம் மறந்து விட்டதா மறுக்கிறதா?

அந்த காலத்தில் நகை ஒரு அலங்கார பொருளாகவே கருதினார்கள்.. நகையின்றி செழிப்புடன் மகிழ்ச்சியாக இருந்தார்கள்..

ஆனால் இந்த கால பெற்றோருக்கு பெண் குழந்தைக்கு நகை சேர்ப்பது ஒரு சவாலாக உள்ளது.. நகை அதிகம் இருந்தால் தான் நல்ல வரம் வரும்.. இந்த சமூகம் மாற வேண்டும்..

எத்தனை பெற்றோர்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள்.. பெண் குழந்தை பிறந்தால் மகிழ்ச்சி அடைய விடவில்லை இந்த சமூகம்..

அதனால் நிதி பணம் சேர்த்து வைப்பது முக்கியம் இல்லை என்று கூறி விடைபெறுகிறேன்..

இவ்வுலகில் தனக்காக வாழும் பெற்றோர் மிகவும் குறைவு. வாழ்கையை வேண்டுமானால் தனக்காக துவங்கியிருக்கலாம், ஆனால் குழந்தைகள் வளர ஆரம்பித்தபின்பு ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் குழந்தைகளுக்காகவே வாழ்கிறார்கள். நல்ல பள்ளியை தேடி கண்டுபிடித்து அவர்களுக்காக கால்கடுக்க காத்திருந்து அட்மிசன் வாங்கி,ஒவ்வொரு ப்ராஜக்டிலும் தன்பிள்ளை அனைவரின் முன்பும் தனித்துவமாக தெரியவேண்டி மூளையை கசக்கி உதவி செய்து , பிள்ளை அதற்காக கைதட்டல்கள் வாங்கும்போது பிள்ளைகளின் பின்னின்று கண்ணீர்விட்டு ஆனந்தப்படும் பெற்றோர்களை கண்டு இவர்கள் கேள்வி கேட்கிறார்கள். நடுவரே இதைத்தான் சொல்வார்கள் "வளர்த்த கிடா மாரில் பாய்வது என்று!!"

ஏன் நடுவரே இத்தனையும் செய்யும் பெற்றோரிடம் நீங்கள் சுயநலத்தை கண்டுபிடிப்பீர்களா? இல்லை பிள்ளையை ஊக்குவித்து சமுதாயத்தின் முன்பு தன் காலூன்றி தன்னம்பிக்கையுடன் நிற்க பழக்கும் பெற்றோரின் எதார்த்தத்தையா?

அப்பா சொல்லிக்கொடுத்திருக்கார் சமூகத்தில் எது எது நமது கடமைகள் என்று. அம்மா சொல்லிக் கொடுத்திருக்கார் யாரிடமும் சத்தமாக பேசுவது தவறு என்று.

இந்நிலையில் தனியாக பேருந்தில் செல்ல வேண்டியிருந்தது. பயணத்தின்போது ஓட்டுனர் விதிமீறி நடந்து கொண்டார். ரொம்ப கோவம் வந்தது. ஆனால் அப்போது ஒன்றும் பேசவில்லை, அம்மா சொன்னது நினைவு வந்தது. ஆனால் மனம் தவறு செய்தவர்களை சுட்டிக்காட்டாமல் போகாதே ரேணுன்னு உள்ளிருந்து ஒரு அந்நியன் சொல்லிட்டே இருக்கான். வெளியே இருக்கும் அம்பியோ நீ சொன்னைன்னா அவன் கவனம் இன்னும் சிதறும்னு பயமுறுத்துது. இருந்தும் பேருந்து நிறுத்தியதும் அவரிடம் அமைதியாக அதே சமையம் கடுமையாக அவரின் தவறை சொல்லி இனி இதுபோல நடக்காதுன்னு அவரே சொன்னவுடந்தான் வந்தேன். பெற்றோர் சொல்படி நடப்பதா? என் மனதிற்கு சரின்னு பட்டதை செய்வதான்னு அந்த நேரம் குழம்பினேன் நடுவரே. இப்படி பல சந்தர்பங்கள் வந்துள்ளன என் வாழ்வில். பிள்ளைகளை பிள்ளைகளாக வளரவிடனும் நடுவரே. பெற்றோரின் அரவணைப்பில் வளரும் குழந்தைகள் கண்டிப்பாக சமுதாயத்தை சுயமாக எதிர்கொள்ள திணறுவார்கள் நடுவரே.

///குழந்தைக்காக சம்மதிக்கிறோம் என்று தினமும் ஓடி ஓடி உழைக்கிறோம் அதனால் குழந்தையுடன் நாம் இருக்கும் சிறந்த தருணங்கள் பறிக்கப்படுகின்றன / தெரிந்தும் தொலைக்கப்படுகின்றன. அந்த தருணங்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் மீண்டும் கிடைக்குமா?///
நாள்முழுவதும் எத்தனையோ சந்தோஷங்கள் வருத்தங்கள் வரும்போதும் காத்திருந்து அறுசுவை வந்து பகிரும்போது மகிழ்ச்சிகள் இரட்டிப்பாகவும், வருத்தங்கள் பாதியாகவும் அல்லது பிரச்சனைகளுக்கு தீர்வும் எப்படி கிடைக்கிறதோ அப்படிதான் நடுவரே இதுவும். குழந்தைகள் எல்லா சந்தர்பத்திலும் தன்னிலை மாறாமல் இருக்கப் பழகும், அல்லது தனது உணர்வுகளை தனக்குள் வைத்து எப்போது யாரிடம் பகிர வேண்டும் என கற்றுக்கொள்ளும்.

எங்கள் வீட்டு வாண்டுகள் செய்த பலபல சேட்டைகள் வம்புகள், சாகசங்கள் என எங்கள் கணினி முழுக்க நிறைந்து கிடக்குதுங்க நடுவரே. அவர்கள் தவறவிட்டதாக தவறாக எண்ணும் நிமிடங்கள், அல்லது அவர்களின் ஒவ்வொரு நிமிட முகமாற்றங்களையும் கூட பதிவு செய்து நாமும் மீண்டும் மீண்டும் பார்க்கலாம் . நாம் மட்டுமல்ல அவர்களுக்கும்,அவர்களின் பிள்ளைகளுக்கும் காட்டலாம்.

எதிரணியினர் வாதங்களின்படி அன்போடும் அரவணைப்போடும் வளரும் குழந்தைகள் எப்போது தனது வேலைகளை தானே செய்துகொள்ளும் நடுவரே??? ஒரு காலகட்டதின் பிறகு பெற்றோர் பாசத்தால் செய்வதை நிறுத்திக்கொண்டால் (பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் தாங்களே செய்து கொள்வார்கள் என்ற எண்ணத்தில்)பிள்ளைகள் எண்ணும் பெற்றோருக்கு நம் மீது அக்கறை குறைந்துவிட்டதுபோல. முன்பு செய்த செயல்களை குறைத்துக்கொண்டார்கள் என வித்தியாசமாக எண்ணும்.

அவர்கள் காட்டும் அன்பும் அக்கறையும் குழந்தை பருவத்தில் மட்டுமே தேவைப்படும் நடுவரே. பின்பு அபியும் நானும் படத்தில் வருவதுபோல "ஐ நோ வாட் ஐயம் டூயிங் "- நு சொல்லிட்டு திரும்பிகூட பார்க்காமல் செல்வார்கள்.(தவறாக சொல்லவில்லை நடுவரே பெற்றோர் புரிந்து கொள்வார்கள் என எண்ணுவார்கள்). ஆனால் இவர்களை போன்ற பெற்றோர்களோ எப்பொதும் அவர்களை வழிநடத்தும் வேலையில் இருந்துவிட்டதால் மிகவும் மன உலைச்சலுக்கு ஆளாவார்கள். அப்படத்தில் பிரகாஷ்ராஜ் நிலையை யோசிங்க நடுவரே எதிரணியினரின் முகங்கள் நினைவுவருதான்னு பாருங்கள்.

நடுவரே ஒரு சந்தேகம், பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிப்பது என்று எதிரணியினர் எவற்றை சொல்கிறார்கள்? அது தெரிந்தால் வாதிட கொஞ்சம் சுலபமாக இருக்கும்.

//ஏன் அருகில் உள்ள பள்ளியில் படித்தால் குழந்தையின் அறிவு வளராதா?// எனக்கு தெரிந்த ஒரு பெண் வேலைக்காக இண்டரவியூக்கு சென்ற போது , அவளை இரண்டு தினத்தில் வர சொல்லி இருந்தார்கள் ஆனால் அன்று இரவே அவளுக்கு போன் வந்தது வரவேண்டம் ரிஜேக்ட் அவர்கள் கூறிய காரணம் , எல்லாம் ஒகே பட் படித்த பாடசாலை ( பாடசாலை பெயர் நான் இங்கு கூற விருப்பவில்லை) நல்ல பாடசாலையில் படிக்க வைப்பதற்கு இப்படியும் காரணம்கள் இறுக்கதான் செய்கின்றது.

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

எனும் அணி அறுமையாக வாதிட்டிருக்கிறார்கள் ....
// குழந்தைகளோடு நாம் செலவழிக்கும் நேரம் விலை மதிப்பில்லாதது; அந்த பொன்னான தருணங்களை தான் நாம் சேமிக்க வேண்டும்; அது தான் காலத்தால் அழியாதது; களவாடப்படாதது;// நுற்றுக்கு நூறு வீதம் உண்மையே . இதற்கு ஏதும் எதிர் வாதம் உண்டா பார்ப்பேம்,

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

//பெற்றோர் பாசத்தால் செய்வதை நிறுத்திக்கொண்டால் (பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் தாங்களே செய்து கொள்வார்கள் என்ற எண்ணத்தில்)பிள்ளைகள் எண்ணும் பெற்றோருக்கு நம் மீது அக்கறை குறைந்துவிட்டதுபோல. முன்பு செய்த செயல்களை குறைத்துக்கொண்டார்கள் என வித்தியாசமாக எண்ணும்// இப்படியும் நினைபார்களா ? குறித்து வைக்கிறேன், தீர்ப்புக்கு உதவும்

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

இன்னும் வாதம்களை எதிர் பார்க்கிறேன். திறுமணதுக்கு பின் அவர்களின் வாழ்க்கை , நண்பர்களுடன் அவர்களின் வாழ்க்கை , பணம் இல்லவிட்டால் புகுந்த வீட்டின் அந்த பிள்ளையின் நிலமை என்ன?

பட்டி மூலம் எனக்கும் பல விடயம்கள் புரியவருகின்றது , முடிவு என்னவாகும் பார்ப்போம்,

இது ஒரு விழிப்புணர்வு பட்டி மன்றம் என்பதால், அறுசுவையின் மூத்த உறுப்பினர்களின் வாதம்களையும் எதிர்பார்க்கிறேன். வந்து எங்களை ஊக்கப்படுத்துங்கள்.

//நடுவரே ஒரு சந்தேகம், பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிப்பது என்று எதிரணியினர் எவற்றை சொல்கிறார்கள்? அது தெரிந்தால் வாதிட கொஞ்சம் சுலபமாக இருக்கும் // எதிரணியின் இந்த வாதத்துக்கு என்ன பதில் வாங்க , வாங்க தோழிகலே உங்கள் பதிலுக்காக நான் ஆவலாய் காத்துக்கொண்டிருக்கிறேன்.

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

அனைவருக்கும் வணக்கம் . நான் வாதிட வல்லிங்கோ எனக்கும் இந்த பட்டிக்கும் சம்பந்தம் இல்லை .வாதங்களை படித்தேன் சிறப்பாக இருந்தது அப்படியே ஒரு சின்ன சந்தேகம் விளக்கிட்டா ஓடிருவேன்.

என்னை பொருத்தமட்டில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக நேரம் மற்றும் நிதி இரண்டும் ஒதுக்க வேண்டும் . அப்படி குழந்தைகளுக்கு நிதி ஒதுக்க பெற்றோர்கள் செலவிடும் நேரம் குழந்தைகளுக்கானது தானே? . எப்படி இரண்டும் வேறாகும்?

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

உங்களுக்காக எனக்கு தெரிந்த ஒரு சிரு கதை இங்கு குறிப்பிடுகின்றேன்.
ஒரு நாள் தன் தாயை பார்த்து சிறுவன் கூறினானாம் அம்மா நம் ஆயவிடம் பணத்தை கொடுத்து வைக்கலாமா ? என கேட்டானாம் உடனே அந்த தாய் கூறினாலாம் இல்லை கூடாது என ....திருப்ப அந்த பையன் கேட்டானாம் அம்மா ஆயாவிடம் பீரே சாவியை கொடுத்து வைக்கலாமா ? அம்மா பதரி போய் இல்லை, இல்லை அதேலாம் கொடுக்க கூடாது என கூறினாலாம் ....உடனே அந்த பையன் அப்போ வீட்டு பத்திரத்தை கொடுத்து வைக்கலாமா? என கேட்டானம் ...உடனே அந்த தாய் இல்லை என கூற ....மகன் கேட்டானாம் அப்போ என்னை மட்டும் என் அம்மா ஆயம்மாவிடம் கொடுத்துட்டு போர என்னை விட காசு பணம் தான் முக்கியமா என கேட்டானாம் இந்த காலத்தில் இதைப்பற்றி வாதிட வேண்டிய சூலலில் தாம் நாம் இறுக்கிறோம். இன்னும் விளக்கம்கள் தறுகிறேன் சிறிது வேளையாய் இறுக்கிறேன்.

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

மேலும் சில பதிவுகள்