பட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா? நிதி ஒதுக்குவது நல்லதா ? “

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்கள், நான் இன்று விவாதத்திற்காக தேர்வு செய்த தலைப்பு ,”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்க அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா? நிதி ஒதுக்குவது நல்லதா ? “ அதாவது நம் அன்பு குழந்தைக்காக நம் நமது நேரத்தை செலவிட வேண்டுமா அல்லது காசு, பணம், நகை என சேர்பதா எது நல்லது? இத்தலைப்பை பற்றி உங்கள் கருத்துக்களை பதிவிட அன்புடன் அழைக்கிறேன் . அட்மின் அண்ணா , அண்ணி , அன்பு ரேணு, வாணி அக்கா , இமாம்மா, சீதாம்மா , தோழி பிரேமா ,தோழி இந்து மற்றும் அறுசுவை உறுப்பினர்கள் அனைவரையும் அன்பேடு பட்டிக்கு அழைக்கிறேன் . முதல் தடவை பட்டி ஆரப்பித்திருக்கிறேன் என்பதால் தவறேதும் இருந்தால் மன்னித்து உங்கள் பங்களிபை வழங்குமாறு கேட்டு கொள்கின்றேன். ( யாருடைய மனமும் புண்படாமலும், நகைச் சுவையும் கலத்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்) பட்டி இன்று வியாழ கிழமை ஆரபித்து அடுத்த வியாழன் இத்தலைப்பு தீர்ப்பு வரும் ,
மன்ற விதிமுறைகள்
1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் சார்ந்து பேசக்கூடாது.
3. அரட்டை கூடாது.
4. ஜாதி, மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.
அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்
வாய்புக்கு நன்றி ரேணு.

நடுவரே! நீங்க பாட்டுக்கும் ஒரு கதைய சொல்லிட்டு பொயிட்டிங்க .இதனால் என்ன சொல்ல வரிங்கன்னு என் அறிவுக்கு எட்ட வில்லை கொஞ்சம் விம் போட்டு விளக்குனா நல்லாருக்கும் .

அதிகபடியான நிதியும் ஆபத்து தான் .எங்கள் வீட்டில் அருகில் ஒரு வீட்டில் குழந்தைகளின் நடவடிக்கைகளை கவனிக்காமல் நிதியில் மட்டும் கவனம் செலுத்தியதால் 16,17 வயதிலையே 2 குழந்தைகளும் தடம் மாறி விட்டனர்.பெற்றோர்களோ எங்க மானத்தை வாங்கமல் ஏதோ பண்ணிக்கங்க என்று தண்ணீர் தெளித்து விட்டாங்க.அதே இன்னோரு வீட்டில் பணவசதி இருந்தும் பிள்ளை மேல் பேற்றோரின் கண்டிப்பும் கவனிப்பும் இருந்ததால் அவன் சரியான வழியில் செல்கிறான். எங்க வீட்டில் நிதி குறைவாக இருந்தாலும் பெற்றோர் கவனிப்பு இருப்பதால் என் தம்பியும் சரியான வழியில் செல்கிறான் . இவை என் கண்முன்னே நிகழ்பவை . இந்த கூத்தில் இவர்கள் மூவரும் நல்ல நண்பர்கள் வேறு.
இதில் இருந்து என்ன தெரியுது நிதி இருக்கோ இல்லையோ பேற்றோர்களின் கண்டிப்பும் கவனிப்பும் குழந்தைகள் மேல் இருக்க வேண்டியது அவசியம். இவை இல்லாமல் சரியான வழியில் செல்லும் குழந்தைகள் 10% தான்.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

இன்னும் இரண்டு நாட்கள் நான் பிஸியாக இருப்பதால் என் வாதங்களை முடித்து கொள்கிறேன்..

தோழி சத்யாவும் தெளிவாக விளக்கம் கொடுத்து உள்ளார்.. பெற்றோர்களுக்கு பணம் முக்கியம் இல்லை என்று தெரிவு வேண்டும்..

அந்த காலத்து மக்கள் எந்த வங்கியிலாவது பிள்ளைகளுக்கு சேர்த்து வைத்தார்களா?..ஆனால் அவர்கள் பிள்ளைகள் நல்ல நிலையில் தான் இருக்கிறார்கள்..

பணம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டும் இருந்தால் போதும்.. நாலை விடியல் நமக்கு உண்டா என்பது கூட சந்தேகம் தான்..

ஒரு உண்மை நிகழ்ச்சியை சொல்கிறேன்.. என்னுடைய நெருங்கிய தோழியின் தாயாருக்கு புற்றுநோய் வந்தது.. ஆனால் பணம் செலவாகி விடும் என்று அதிகம் மருத்துவமனை செல்லவில்லை, தன் மீதான அக்கறை அவருக்கு இல்லை.. பிள்ளைகள் படித்து கொண்டு இருந்தனர்.. நோய் பற்றி பிள்ளைகளிடம் சொல்லவில்லை அந்த அம்மா..

அந்த தாய் தன் சொந்த வீட்டை மாற்றி அமைக்க நினைத்தார்.அந்த தாய்க்கு ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை..

டபுள் பெட் ரூம் கட்டும் இந்த நவநாகரீக காலத்தில் மூன்று பெட் ரூம் வைத்து அல்ட்ரா மாடர்னாக வீட்டை அழகாக கட்டியுள்ளார்..

வீட்டை கட்டி முடிக்கவும் அந்த பெண் குழந்தை கல்லூரி படிப்பை முடித்தது..தாயின் உயிரும் போய் விட்டது.

என்ன பயன் சொல்லுங்கள் பார்ப்போம்.. கடைசியில் அந்த வீட்டை விட்டு விட்டு வெளியூர் சென்று அனைவரும் வேலை பார்த்தார்கள்..
பணம் எதற்காக தேவை என்று உணர வேண்டும்..

என் தோழியோ திருமணம் பிறகு பிரசவ காலத்தில் மிகவும் கஷ்ட பட்டார்..

பெற்றோர்கள் தங்களை கவனிப்பதை விட பணம் வீடு என்று அலைந்ததன் விளைவு பற்றி தெரிந்து கொண்டீர்கள்..

அதனால் நடுவரே பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கு முக்கியம், பணம் இரண்டாவதுதான் என்று கூறி விடைபெறுகிறேன்.. வாய்ப்புக்கு என் நன்றிகள்..

அப்போ நீங்களும் கூறி இருப்பதும்
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்காக ஒதுக்க வேண்டியது நேரந்தையே என்ற கருத்தைதான். அதை பற்றிதான் இங்கு பட்டி நடக்கின்றது. (பெற்றேர்கள் தனது பிள்ளைக்காக ஒதுக்க வேண்டியது தனது நேரத்தையா? அல்லது பணம் , நகையா) என இரு அணியினரின் வாதம் நடைப்பெறுகின்றது. தீர்ப்புக்கு இன்னும் 5 நாட்கள் உள்ளது.

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

என்ன யாரையும் காணவில்லை ஒரு தோழி தனது வீட்டு விஷேசத்துக்காக பட்டியில் இருந்து லீவு எடுத்துவிட்டார். மற்ற எல்லாரும் எங்கே காணேம்? தேடிக்கொண்டுருக்கிறேன், ஒடி வாங்க ஸ்வீட் வைத்திருக்கிறேன்.

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

நாங்கள் குழந்தைகளுடன் நேரமே ஒதுக்குவதில்லை என்று நினைத்து எதிரணியினர் பேசுகின்றனர். நாங்களும் எங்கள் பிள்ளைகளுடன் எப்போது கைகோர்க்கனுமோ அப்போது கைகோர்க்கிறோம். அவர்களுக்கான தேவைகளை அன்றாடம் செய்துவிட்டு அவர்களுக்கு வேலைகள் இருக்கும் சமையம் எங்களது நேரத்தை அவர்களுக்கு பொருளீட்டுவதில் செலவழிக்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது? பிள்ளைகள் அவர்களது செயல்களில் இருக்கும்போது நான் உன்னோடு இருக்கிறேன், என்னையும் உன் விளையாட்டில் சேர்த்துக்கொள் என்று சண்டைபோட சொல்கின்றனரா எதிரணியினர்?
பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள் என்று சொல்லும் இவர்கள், பிள்ளைகள் வீட்டில்(இவர்களுடன்) இல்லாத சமயத்தில் என்ன செய்ட்கின்றனர்?
எதிரணியினர் சொல்லும் கதைகள் நிஜமாகவும் இருக்கலாம். வெளியில் இருந்து பார்த்து கருத்து சொல்லும்போது இப்படி இல்லாமல் மாற்றி செய்திருக்கலாம் என்று சுலபமாக சொல்லத்தோன்றும். ஆனால் பிரச்சனையின் உள்ளே சென்று பார்க்கும்போது அவர்களது பார்வையும் வேறுபடும்.
எனது பெற்றோரே இப்படிதான் என சொல்லும் நபர்களும் உண்டு. ஆனால் அவர்களிடம் அவர்களது பெற்றோர் சேர்த்து வைத்தவை தாராளமாகவோ அல்லது தேவையை பூர்த்தி செய்யும் அளவிலோ இருக்கும். அப்போது பேசுவதர்க்கு சுலபம். அடுத்தடுத்த தேவைகள் முட்டித்தள்ளும் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் என்பது போராடித்தான் பெறவேண்டியுள்ளது. அப்படிப்பட்ட குடும்பங்களில் அனைவரது நேரங்களுமே கொஞ்சம் திருடுபோகத்தான் செய்கிறது. ஆனாலும் அவ்வகையான பெற்றோர்களும்கூட தனக்கு கிடைக்கும் நேரங்களை தங்கள் பிள்ளைகளுடன் நல்லமுறையில் செலவழிக்கின்றனர்.
எனது தோழி வேலை மாற்றலாகி சொந்த ஊர்விட்டு எங்கள் ஊருக்கு வந்திருந்தார். அவரது கணவர் சொந்த ஊரில் ,பிள்ளைகள் என் தோழியுடன். நடுவரே நீங்களே சொன்னீர்கள் எந்த பள்ளியில் படித்தோம் என்பதனைக்கூட வேலையில் சேரும்போது கவனிக்கின்றனர் என்று. அப்படி இருக்க சமூகத்தில் அனைத்து பிள்ளைகளுடன் தன் பிள்ளைகளும் வித்யாசமில்லாமல் பழக, திறமையை வளர்க்க இன்னும் பல செயல்கள் செய்ய பொருளாதாரம் வேன்டும். அவளது குடும்ப தேவைகளுக்காக பெற்றோர் இருவரும் மாறியிருந்து வேலை செய்தே ஆகவேன்டிய சூழல். என் தோழியோ தனது நேரம் தனதில்லை என்பதுபோலத்தான் உழைத்தால். பிள்ளைகள் பள்ளியில் இருந்து அழைத்து வீட்டில் விட்டு அவள் பணிக்கு மீண்டும் செல்வாள். அவள் வரும்வரை தனது தேவை தம்பியை கவனிக்க என பிள்ளைகள் தங்களது தேவைகளை புரிந்து செய்யும். அதற்காக அவர்களது குழந்தைப்பருவம் காணாமல் போனதுன்னு சொல்லாதீங்க. மாலை வந்தவுடன் அவர்களுக்கு விருப்பமான டான்ஸ் வகுப்பு, கராத்தே வகுப்பு, ஓவிய வகுப்பு, வார இறுதியில் நாங்க இருவரும் சேர்ந்து எங்கள் பிள்ளைகளை பார்க், விளையாட்டு மைதானம் என மிகவும் சந்தோஷமாகவே இருந்தோம். அவர்களும் நல்ல பழக்கங்கலைதான் கற்றார்கள். இரண்டையும் சமாளிக்கும் பெற்றோர் இருக்கும்போது எதிரணியினர் புரிந்து கொண்டு வாதங்களை வைத்தால் நன்றாக இருக்கும்.
நாங்கள் பணத்திற்காக மட்டும் தேடி செல்லும் பெற்றோருக்காக பேசவில்லை. தனது பொருளீட்டும் நேரத்தையும்கூட தனது பிள்ளைகளுக்காக செலவிடும் பெற்றோருக்காகவே வாதிடுகிறோம்.
நடுவரே இப்படி வைத்துக்கொள்வோம், ஒரு பெற்றோர் தினமும் 1000 நூபாய் வருமானம்( தந்தை தாய் இருவருக்கும் சேர்த்து). தினத்தேவைகளுக்கு இது சரியாக இருக்கும். பள்ளியில் தினமும் பீஸ் வாங்குகிறார்களா என்ன? தினம் வருமானம் தினம் செலவழியும்போது எப்படி நான்கு மாதங்களின் பீஸ் ஒன்றாக கட்டுவது? இதுபோக மற்ற வகுப்புகள் செல்ல பிள்ளைகள் விரும்பினால்!!! அனுப்ப, அதற்கான பொருட்கள் வாங்க காசுக்கு எங்கே செல்வார்கள் அந்த பெற்றோர்கள்? விளையாட்டில் மிக்க ஆர்வமும்,திறமையும் உள்ள மாணவன் காலணியில்லாமல் மற்றவர் விளையாட்டை அமர்ந்து பார்க்கிறான். யார் குற்றம்? அந்த பிள்ளை மனதில் தன் பெற்றோர் பற்றிய எண்ணம் என்னவாக இருக்கும்?
ஒருமுறை எனது பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அவர்களை அழைத்துவர சென்றிருந்தேன். அன்று விளையாட்டுக்கு பிள்ளைகளை தேர்வு செய்து கொண்டிருந்தனர்.என் பிள்லை என்னிடம்வந்து செய்தியை சொல்லிவிட்டு சென்றுவிட்டான். சிறிது நேரம்கழித்து ஒருபிள்ளை என்னிடம் ஓடிவந்தது. ஆண்டி என்னோட அம்மாகிட்ட சொல்லுங்க ஆண்டி பிளீஸ் என்னைய விளையாட விட சொல்லுங்க ஆண்டி என்றது. நான் திரு திருன்னு முழித்தேன். எனக்கு அப்பிள்ளையிடம் பழகிய நினைவே இல்லை. சில நிமிடங்களில் அவரது அம்மா வந்து அவனது முதுகில் ஒன்று போட்டார். எனக்கு அதிர்ச்சி:-( அவர் எனக்கு பின்னால் ஒளிந்து கொண்டே அழுகிறான் பாவம். அவரது அம்மா திட்டிக்கொண்டே இருக்கார் உனக்கு விளையாட்டு கேக்குதா? உங்க அப்பா கொண்டுவந்து குடுக்குற காசுல விளையாட துணி, சூ காலணி) எப்படி வாங்குறது? படுச்சு வேலைக்கு போடான்னு ஒரே புழம்பல். அந்த நேரம் அவனது காலில் பள்ளியின் சீருடை காலணி மட்டுமே இருந்தது. என் பிள்ளையும் வந்து கொண்டிருந்தான். அவன் வந்து அந்த பையனிடம் சொன்னான் டே உன்ன மாஸ்டர் கூப்பிடுறார், இங்க என்ன செய்துட்டு இருக்கன்னு? அவன் கால்களை பார்க்க, என் பிள்ளையோ என்னிடம் அனுமதி கேட்டு தனது சூக்களை அவனுக்கு கொடுத்து விளையாட அனுப்பினான்.பிறகு அவரது அம்மாவிடம் நான் பேசிக்கொண்டு இருந்தேன். வேலையில் சம்பளம் குறைவுங்க. படிப்பு நல்லா வந்தால் ஏதாவது வேலைக்கு(குறைந்த சம்பளமானாலும் நிறந்தர வேலைக்கு) அனுப்பிடுவேன். இவன் இப்படி விளையாட நேரத்தையும், பொருள் வாங்க பணத்தையும் செலவு செய்தால் நான் எப்படி குடும்பத்தை சமாளிப்பது?இப்படியாக இருந்தது அவரின் பேச்சு. கொஞ்ச நேரம் அவருக்கு சமாதம் சொல்லி , கஷ்டங்கள் நம்மோடு வைத்து பிள்ளைகளிடம் நம்பிக்கையை தூண்டிவிடுங்க. அவங்க வயதை நாம் கடந்து வந்துட்டோம். அவர்களுக்கு வேண்டிய சரியான தேவைகளையும், சரியான ஆசைகளையும் செய்து வைக்கத்தான் நாம இருக்கோம். அவர்களை இதில் உன் விருப்பம் இருக்க கூடாதுன்னு சொல்லவோ, இதில் நீ ரொம்ப ஈடுபாடுடன் செயல்பட்டு வெற்றிபெற்றே ஆகவேன்டும்னு சொல்லவோ, அவர்களது ஆசைகளுக்கு தடையாகவோ நாம இருக்க கூடாதுங்க. அவங்களோட அனைத்தையும் கவனித்து நிறைவேற்ற நம்முடைய தரத்தைதான் உயர்த்திக்கனும். அவங்களுக்கு எப்பவும் நாம பலமா இருக்கனும்னு சொல்லிட்டு இருக்கும் போது பெரிய கைத்தட்டல். இதனிடையில் அந்த பையன் ஓடிவந்தான். முதலில் என்னிடம் வந்து தேக்ஸ் ஆண்டி நீங்க பர்மிசன் வாங்கி கொடுத்திங்க, நான் ஃபைனல்ஸ் வந்திட்டேன்னு சொன்னான். அவங்க அம்மாவின் கண்கள் ஈரமாகி இருந்தது. அவன் காலணிகளை கழட்டினான். இல்லடா குட்டி இது நீ ஃபைனல்ஸ் வந்ததுக்கு எங்களோட கிஃப்ட் நீயே வச்சுக்கன்னு சொன்னதும் அவன் எனக்கும் என் பிள்ளைக்கும் தேங்க்ஸ் சொன்னான். அவரது அம்மாவும் இனிமே நீங்க சொன்னதுபோல இருக்கன்னு சொல்லி சென்றார்.(இவர்கள் விஷயத்தில் பெற்றோர் அதிக நேரம்தான் பிள்ளையுடன் இருந்தார்கள், ஆனால் பொருள் இல்லாமல்தான் பிள்ளை தடுமாறியது. நல்லா விளையாடுகிறாய் ஏன்டா காலணி வாங்கி வரலை , கோச்சிங் வரலைன்னு கேட்கும் ஆசிரியரிடம் குடும்ப சூழல் பற்றி பதில் கூற முடியாமல் திணறியிருக்கிறது.)

நடுவரே, இது கதையல்ல ஒரு வருடம் முன்பு நிகழ்ந்த அனுபவம். இதில் நான் கற்றுக்கொண்டது பல. பிள்ளைகளுக்கு தேவையான சமயத்தில் முடியாதுன்னு சொல்லாம அங்கே நாங்கள் இருப்போம். அதே நேரம் அவர்களுக்கு தேவையானதுக்கு செலவு செய்ய கண்டிப்பாக நங்கள் பொருள் சேர்த்துவோம் நடுவரே.

எதிரணி சொன்னது போல பணம் பொருள் சேர்த்தாலும் சிறுவயதில் பெரிய காரில் ஊர்வலம் அனுப்பி செல்லம் குடுத்து பின் பிள்ளைகளை சமாளிக்கமுடியாத பெற்றோர்கள் சிலரே. அதே சமயம் பொருள் சேர்த்தாலும் அனைத்து அனுபவங்களையும் தன் பிள்ளை கற்று பொருளை நல்வழியில் செலவு செய்து தனது மற்றும் தன் உடன்பிறப்புக்கும் பெற்றோர்க்கும் தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்பான பிள்ளைகளாக வளர்க்கும் பெற்றோர் அதிகம். அப்படிப்பட்டவர்களை எதிரணியினர் புரிந்து கொண்டால் சரி நடுவரே.

// என் பிள்ளையோ என்னிடம் அனுமதி கேட்டு தனது சூக்களை அவனுக்கு கொடுத்து விளையாட அனுப்பினான் //
பாராட்டியே ஆகவேண்டும். உங்கள் மகன் செய்த செயாலில் இருந்து உங்கள் அழகிய குணம் தெரிகிறது.

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

விடுமுறை முடிந்தது பட்டியில் கலந்து சிறப்பிக்க வாங்க தோழிகளே வாங்க உங்களது பதிவுகள் யாருடைய மனதையும் காயப்படுத்தாமால் அழகிய முறையில் வாதிட அழைகிறேன், அறுசுவையில் பழய ,புதிய உறுப்பினர்கள் அனைவரையும் அழைகிறேன் . ( வாதிட நேரம் இருப்பவர்கள் ஒடி வாங்க)

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது தோழிகளே பட்டி தீர்ப்புக்கு , பட்டி பக்கம் ஓடி வாங்க....

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

பட்டி பக்கம் சிலர் வராமலே இருக்கிறார்கள். அவர்கள் நல்ல மதிப்பு வாய்ந்த கருத்தை தங்களிடம் வைத்திருப்பார்கள். அதைக் கேட்க நாம் ஆர்வத்துடன் உள்ளோம். எனவே, உங்களின் கருத்தை இங்கே பகிர்ந்துகொண்டால், நாம் மிகவும் மகிழ்ச்சியடைவோம் . உங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு பட்டியை பலப்படுத்துங்கள். தயக்கம் இன்றி உங்கள் பதிவுகளை பதிவு செய்யுங்கள்.

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

வேலைப்பளு மற்றும் நேரமின்மையால் பட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. பட்டிக்கு இன்னும் நிறைய பேர் வந்தால் தான் பட்டி சூடு பிடிக்கும்.. சரி என் பங்குக்கு சொல்லிடறேன் !!
<< வீட்டிலிருந்தால் குழந்தைகளுக்கு பார்த்து பார்த்து எல்லாம் செய்ய முடியும். அவர்களின் ஒவ்வொரு செயலிலும் நாம் இருப்போம். காலை எழுந்ததும் அம்மா என்று கட்டியணைக்கும் குழந்தையிடம் இருந்து கிடைக்கும் அந்த அரவணைப்பு பாசம், அந்த பிஞ்சு கைகள் நம் கழுத்தை சுற்றி விலையுயர்ந்த அணிகலனாக தெரியும் அந்த தருணம்!! இழந்தால் அதுவே ஈடு செய்ய முடியாத இழப்பு.. ஆயாவிடமும் / அம்மாவிடமும் விட்டு விட்டு கட்டுச்சோறு கட்டிக்கொண்டு பேருந்தில் ஏறி, ஆபிஸ்க்கு போனதும், குழந்தை என்ன செய்கிறது எழுத்தாளா சாப்பிட்டாளா, என்னை தேடுகிறாளா? என்ற விசாரிப்பில் எத்தனை ஏக்கங்கள்!!

காலை உணவில் தொடங்கி குளிப்பாட்டி அலங்கரித்து சட்டையை தேடி தேடி பார்த்து பார்த்து உடுத்தி அழகு பார்ப்பதில் எத்தனை இன்பம் !! அதெல்லாம் வேலைக்கு போகும் பெண்களுக்கு கிடைப்பதில்லையே !!

குழந்தையை தூங்க வைத்து அவளை தட்டிகைகொடுத்து வருடும் போது யதார்த்தமாய் குழந்தை விரல்கள் நம் மீது பட மலரில் விழுந்த மழைத்துளி போல் ஒரு நொடி நம்மை மெய்மறந்து உண்ணாமல் குழந்தையோட அரவணைப்பில் கதகதப்பான அந்த உறக்கம் வேலைக்கு போய் சம்பாதித்து, எவ்வளவு பணம் கொடுத்தாலும் விலைக்கு வாங்க முடியுமா?? >>

- பிரேமா

மேலும் சில பதிவுகள்