மீன் சினை

மீன் சினை பிரிந்து இருந்தால் எப்படி அவிப்பது. துணிகட்டி அவிப்பது எப்படி??

கவனமாக சுத்தம் செய்து எடுங்கள். பிறகு மஸ்லின் / சீஸ் க்ளாத் / இட்லிக்குப் போடும் துணியில் பகுதிகளாகப் பிரித்துக் கட்டி அவிக்கலாம். அவிக்கும் போதே உப்பும் மஞ்சளும் சேர்த்து அவித்துக் கொள்ளுங்கள். சேர்க்கப் போகும் மீதிப் பொருட்களை கூட்டிக் கொதிக்க வைத்து (உப்பு ஏற்கனவே சேர்த்திருப்பீர்கள். இதற்கு பார்த்துக் குறைவாகச் சேருங்கள்.) அவித்து வைத்துள்ளதை பிரித்துப் போட்டு, கரண்டியால் கலக்காமல் சட்டியைத் தூக்கிப் பிடித்துச் சுழற்றிக் கலந்து விடுங்கள். கூட்டு சினை முழுவதிலும் படுவது போல் சுழற்றுங்கள். பிறகு மிதமான சூட்டில் வைத்திருந்து இறக்கினால் சரியாக இருக்கும்.

உதிர்ந்த சினையோடு முட்டை சேர்த்து ஆம்லெட்டாகவும் ஊற்றலாம்.

‍- இமா க்றிஸ்

மீன் சினை என்றால் என்ன? மீனின் முட்டையா? அதை சமைப்பார்களா? தெரிந்து கொள்ளலாம் என்று கேட்கிறேன்.. நேரம் கிடைக்கும் போது பதில் கூறுங்கள்..

மீனின் முட்டைதான். ஆனால் ஒரு முட்டை இராது, ஓராயிரம் முட்டைகள் - உதிர்த்தினால் ஒவ்வொரு முட்டையும் ஒரு ரவை போல இருக்கும். :-) கொஞ்சம் அளவு முன்பின்னாக இருக்கும். மீன் இனத்தைப் பொறுத்து அளவு / எடை வித்தியாசப்படும். மீனின் அளவையும் பொறுத்து கிடைக்கும் சினை அளவு வித்தியாசமாக இருக்கும். ஒரு (மிக மெல்லிய சீத்ரூ) ஜெலட்டின் குழாயில் (மீனின் கருக்குழாய்) ரவையை அடைத்த மாதிரி தெரியும்.

மிகவும் இளம் சினையில் தனித்தனி முட்டைகள் தெரியாது. கறிக்கு வாங்கும் மூளை போல இருக்கும். அதைப் பாளை என்போம்.

மீனை வெட்டித் திறக்கும் போது சினைப்பையில் பித்தம் பட்டுவிட்டால் சினை சற்றுக் கசக்கும். கழுவும் போது கவனமாகக் கழுவ வேண்டும். சமைக்கும் போது கரண்டியைப் போட்டுக் கலந்தால் சினை கரைந்து போகும்.

குழம்பு வைப்போம். எனக்கு அப்படியே உப்பு மஞ்சள் புரட்டி வைத்து வெண்ணெயில் புரட்டிப் பொரிப்பது பிடிக்கும். (சினை சைவம் தானே!) ;-) (செபா அல்லது நான் சமைத்தால் மட்டும் தான் சாப்பிடுவேன்.) இங்கு புகை போட்டும் விற்கிறார்கள். அப்படியே சான்விச்சில் வைத்துச் சாப்பிடலாம். புகை வாசனையோடு நன்றாக இருக்கும். சினை சற்று விலையான உணவு. எப்போவாவது ஒரு ட்ரீட் போல சாப்பிடலாம்.

//அதை சமைப்பார்களா?// சமைக்காமலும் சாப்பிடுவார்கள். காவியர் (caviar) என்பது சமன் & வேறு குறிப்பிட்ட சில வகை மீன்களது சினைக்கான பெயர். உப்புப் போட்டுப் பதப்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். சாப்பிடக் கிடைத்தது ஒருமுறை. தொட்டும் பார்க்கவில்லை நான். ஆரஞ்சு நிறத்தில் (கறுப்பு / கருநீல நிறங்களிலும் இருக்க வேண்டும்.) பார்க்க பளபளா என்று அழகாக இருந்தது. சீக்கிரம் கெட்டுவிடும். அதனால் வாங்கியதும் சாப்பிட்டுவிட வேண்டும் என்று நினைக்கிறேன்.

smoked roe என்று கூகுள் இமேஜஸ் பாருங்கள். சமைக்காத சினை படமும் இருக்கும்.

caviar - மேலே உள்ள படங்களைப் பார்த்துவிட்டு நிறுத்திவிட வேண்டாம். எல்லாப் படங்களையும் பாருங்கள். க்ராக்கர்ஸில் வைத்தும் சாப்பிடுவார்கள்.

‍- இமா க்றிஸ்

பொதுவாக சைவம் உள்ளவர்கள் மீன் என்றால் மட்டும் மிகவும் வெறுப்பார்கள்.. அதன் மனம் அப்படி.. ஆனால் சினை சைவம் என்று கூறி இருக்கிறீர்கள்.. எதுவாக இருந்தாலும் அது சத்து மிகுந்தது.. உண்ணலாம் அனைவரும்..

நான் கூகுள் செய்து பார்த்தேன்.. ஆனால் இதை நான் சாப்பிட்டு இருக்கேனோ, இல்லை பள்ளி பருவத்தில் பக்கத்தில் சக மாணவர்கள் என்முன் இருந்து சாப்பிட்டார்களா என்று தெரியவில்லை..

நான் டேஸ்ட் பன்னி இருக்கிறேன்.. ரொம்ப சின்ன வயதில்.. நாளை என் அம்மாவிடம் கேட்க வேண்டும் நீங்கள் செய்து இருக்கிறீர்களா என்று..

நிச்சயம் சாப்பிட்ட ஒரு உணர்வு இருக்கிறது..நன்றி அம்மா விளக்கத்திற்கு..

//சினை சைவம் என்று கூறி இருக்கிறீர்கள்.// ;))))))) நம்பிட்டீங்களா! ;))) அதில் உண்மை இல்லை. அசைவம் தான் அது. :-) மணக்காமல் வழுக்காமலிருந்தால் மட்டும் தான் நான் சாப்பிடுவேன்.

//அது சத்து மிகுந்தது// அதனால் தான் மிகக் குறைவாகச் சாப்பிட வேண்டும். நிறைய கொழுப்புச் சத்து இருக்கும். கலோரிப் பெறுமானம் அதிகம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்