3மாத குழந்தைக்கு அம்மை

எங்கள் பையனுக்கு 3மாதம் ஆகின்றது. அவனுக்கு அம்மை போட்டு உள்ளது. நான் தாய்ப்பால் மட்டும் தான் தருகிறேன். என்ன மாதிரி உணவு சாப்பிட வேண்டும். வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும். எது செய்ய கூடாது. கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ். கூட பெரியவங்க யாரும் இல்லை. நான் தனியா தா பாத்துக்கற.

Hospital poneengla? 3 months baby romba care full la pattukonga.docter advice kelunga.ammai enta alavula erukku

மருத்துவரிடம் காட்டலாம். தவறு இல்லை. குழந்தையின் அறையைச் சுத்தமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருங்க. படுக்கையும் ஆடைகளும் மென்மையான துணியாலானவையாக இருந்தால் குழந்தைக்கு சற்று சுகமாக இருக்கும். நீங்கள் சாப்பிடும் உணவு பிரச்சினை இல்லை. சிலர் வீட்டில் பொரியல் (வறுவல்!!) சமைக்கக் கூடாது என்பார்கள். நான் நினைக்கிறேன்... காற்றில் எண்ணெய்த் துணிக்கைகள் கலந்து கொப்புளம் உடைந்த இடங்களில் பட்டால் அவஸ்தையாக இருக்கும் என்பதால் இருக்கலாம்.

‍- இமா க்றிஸ்

பயப்பட வேண்டாம். வீட்டு வாசலில் வேப்பிலையை சொருகி வைப்பார்கள். வீட்டில் தாளிக்காமல் உணவு செய்வார்கள். கடுகு எண்ணெய்யில் தாளித்தால் குழந்தைக்கு அந்த கொப்புளங்களில் வெடிப்பது போல் வேதனை தரும் (முன்னோர்கள் வழி பழக்கம்) என்பதனால் தாளிக்க மாட்டார்கள். வீட்டை சுத்தமாக வைத்திருப்பார்கள். குழந்தையை பாயில் வைக்காமல் துணியில் படுக்க வைக்க வேண்டும். பெரியவர்களுக்கு ஒற்றை படையில் தண்ணி ஊத்துவார்கள். ஒரு அண்டா நீரில் மஞ்சள் பொடி மற்றும் வேப்பிலையை போட்டு மிதமான வெயிலில் வைத்து விட்டு பிறகு ஊற்றுவார்கள். வெளியில் வைத்து தான் கிழக்கு நோக்கி அமர்ந்தவாறு ஊற்றுவார்கள். குழந்தைக்கு அந்த நீரை வைத்து துடைத்து எடுத்தால் போதுமானது. ஒரு வேளை குழந்தை அரிப்பினால் துங்கவில்லையெனில் வேப்பங்கொழுந்து இலையை வைத்து லேசாக வருடி விட அரிப்பு நீங்கும். நல்ல கிருமி நாசினியும் கூட. குழந்தை நலம்பெற பிரார்திக்கிறேன்.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்